இலங்கையில் அரசைப் போர்குற்றத்திற்காகத் தண்டிப்பதாக நாடகமாடும் ஐரோப்பிய அமரிக்க அரசுகள் அதன் மறுபுறத்தில் இலங்கை அரசோடு பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. ஜேர்மனியியுடனான இலங்கையின் வர்த்தகம் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் அடிப்படையில் 139 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஜேர்மனிய முதலீட்டு நிறுவனம் DAW உலகின் பல மில்லியன்கள் புரளும் முதலீடாளர்களில் ஒன்றாகும். அவுடி கார் உற்பத்தி நிறுவனம் உட்பட பல முக்கிய நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இலங்கை வேகமாக வளரும் பொருளாதாரன் எனப் பாராட்டியுள்ளதோடு தனது பங்கு நாடுகளில் ஒன்றாக இலங்கையைத் தரமுயற்றியுள்ளது. அதனோடு கூடவே அவுடி கார் உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் தீர்மானித்துள்ளது. இதற்கான முன்மொழிவை இலங்கை அரசிடம் சமர்ப்பித்துள்ள இந்த நிறுவனம் தொழிற்சாலைக்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்போம் என அறிவித்துள்ளது.
அமரிக்க ஐரோப்பிய முதலீடுகள் இலங்கையில் மிக அண்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துச் செல்கின்றன.
இவற்றைத் தெரிந்துகொண்டும் மறைக்கும் புலம் பெயர் தமிழ் அரசியல் நிறுவனங்கள் மக்களை மாயைக்குள் வைத்திருக்கின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் மனித உரிமை குறித்த கேள்வியின்றி இனச்சுத்திகரிப்பையும் வியாபாரத்தையும் தங்கு தடையின்றி நடத்தி முடிக்கலாம் என்பதே அமரிக்க அரச தீர்மானத்தின் குறிக்கோள்.
தண்டிக்கப்படுவது மக்களா ராஜபக்சவா?
All want to punish somebody for something. Is this normal human nature?