தேர்தலுக்கு முன்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தலுக்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என ஊடகங்களில் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டார். அதே வேளை இந்தியத் துணைத்தூதர் ‘வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது’ என்று தேர்தலின் முன்பதகக் கூறியிருந்தார்.
இவை அனைத்தும் முடிந்த பின்னர் விக்னேஸ்வரன் ‘வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக கூறியுள்ளார்’. விக்னேஸ்வரன் அப்பட்டமான பொய்யை மக்களுக்குக் கூறி வாக்குப் பொறுக்கியுள்ளார். அதே வேளை இந்திய மேலாதிக்க அரசு, தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக இலங்கையில் தலையிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அறிவித்திருக்கின்றது.
அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தை மந்தைகளாக்கிய விக்னேஸ்வரனும் இந்திய அரசும் தமது சொந்த நலன்களுக்காக தாம் விரும்பியதையெல்லாம் செய்யத் தயார் நிலையில் உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.
தமிழரின் காதுகளில் யாரும் பூச்சுற்ற முடியாது. தமிழருக்கு விசுவாசமாக இல்லாதவர்களை தமிழர் நிராகர்த்துவிடுவர். அடக்கியாள முற்பட்டவர்கள் எல்லாம் எங்கே? 450 ஆணடுகள் தம்மை காற்றிக் கொண்டவர்கள். இலங்கையில் மனிதாபிமானப்பணி என்று இந்தியா போராயுதங்களை கொடுத்த போது குஜராத் குலுங்கியது. 50000 பேர் அரை நொயில் மாண்டனர். இந்தியா தர்மத்தை மறந்ததால் நாளுக்கு நாள் சீனாவும் பாகிஸ்தானும் கிலோமீற்றர்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தர்மம் தலைகாக்கும்
1935. Nagpur. That was the last time that Jinnah attended the Annual Conferance of the Indian National Congress. After that he started talking about the Hindu Mentality. That how I feel now
தான்தான் சுயநிர்ணய உரிமையின் வாரிசு எண்டு மேடைகளில் முழங்கிய சிவ.சிறிதரன் எம்.பி.,விக்கி ஐயா மகிந்தரின் முன்னால் பதவிப்பிரமாணம் செய்தது பற்றி அலட்டத் தேவையில்லை என்று GTV இல சொன்னார் பாருங்கோ.