சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது தவறான அரசியலிலிருந்து கற்றுக்கொள்ள மறுக்கும் வரட்டு அடையளாங்களுக்கான அரசியல் அல்ல. அழிக்கும் ஏகாதிபத்தியங்களை இரந்து கேட்கும் காட்டிக்கொடுப்பு அல்ல. தமிழ் வியாபாரிகள் பிழைத்துக்கொள்வதற்கான கூட்டை உருவாக்கும் பல்தேசிய இணைவு அல்ல. மக்கள் சார்ந்த புரட்சிகரமான போராட்டம். இவை அனைத்தையும் நிராகரித்து, மொரிஷியஸ் நாட்டில் மாவீரர் விழா நடத்தப்படுகின்றது. பிரான்ஸ் மக்கள் அவையால் நடத்தப்படும் இந்த கோலாகல விழாவிற்கும் தமது சொந்த மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்படும் மக்களின் அவலங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பொது நலவாய நாடுகளின் ஆரவாரங்களோடு வெற்று அடையாளங்களுக்காக புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் நிகழ்வு இன்று மொரிஷியஸ் தீவை அடைந்துள்ளது.
மொரீஷியசில் புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலானருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலம்பெயர்ந்த தமிழர் மானாட்டில் கலந்து கொண்டார்.