அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் மாத்திரம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விடுதலை கிடைக்காது என பாதுகாப்புச் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும் சர்வாதிகாரியுமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் முன்னர் போன்ற தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார.; முழு நாட்டு மக்கள் குறித்து சிந்தித்தே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு இருந்த தடைகள் நீங்கியுள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதனை இவர் சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்!