சிறீ லங்கா அரசாங்கம் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் தெருக்களில் அனாதைகளாய் கொன்று போட்ட ஊடகவியலாளர்களின் போர்க்குரல் இன்னும் எங்காவது ஒரு மூலையில் உரிமைக்காக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்றும் பாசிசம் தலைவிரித்தாடும் மகிந்த அரசின் மரண வாயிலில் மனிதர்களின் உரிமைக்காகக் குரலெழுப்பும் சிலரையாவது காண்கிறோம்.
மரணத்தைக் கண்டு அஞ்சியோடி ஐரோப்பியத் தெருக்களில் வாழ்வுக்காக அலைவதை எண்ணி நாம் வேதனை அடையும் அதே கணத்தில் தான் வாழும் சமூகத்திற்காய் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாரான அவர்கள் தம்மை எண்ணிப் பெருமை கொள்வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மகிந்தவின் கொலைகரங்களுக்குள் தன்னை இழந்த பிரகீத் எக்னலியகொடவிற்காக அவரது மனைவி பெருமைப்பட்டதைப் படித்திருக்கிறோம்.
நந்திக்கடல் ஈழ மக்களின் இரதத்தால் சிவந்துபோன இரண்டாம் ஆண்டில் இன்னமும் திசை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் பிணங்கள் உரமாகிய நாட்களை அந்த மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற நாங்கள் மறந்துவிடவில்லை.
ஒரு தேசிய இனத்தின், ஒரு மனிதக் கூட்டத்தின், ஒடுக்கப்படும் மக்களின் , உரிமைக்காகப் போராடும் -இதனால் எல்லாம்- ஊடகவியலாளனின் உரிமைக்காகவும் போராடும் தேசிய இனத்தின் ஒரு அங்கம் என்பது நான் எங்கு வாழ்ந்தாலும் எனக்குப் பெருமை சேர்க்கும்.
தீபம் தொலைக்காட்சியில் “புலம் பெயர் நாடுகளில் புலி கொடி வேண்டுமா வேண்டாமா ” என்ற கருப்பொருள் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்விவாதம் குறித்து தம்மைத் தேசிய வாதிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம் பெயர் இணையங்களில் ஒன்றான இனவாத இணையத்தளமான அதிர்வில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கின்றது. வல்லிபுரத்தான் என்ற புனை பெயரில் பதியப்பட்டிருக்கும் கட்டுரை தீபம் தொலைக்காட்சியின் உடகவியலாளர் அனஸ் இற்கு அச்சுறுத்தல் விடுக்கிறது. இவ்வாறான விவாதங்களை இனிமேல் முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கிறது.
தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் உரிமைக்காகக் குரலெழுப்பும் சிங்கள ஊடகவியலார்களுக்கு மகிந்த அரசு விடுக்கும் அதே அச்சுறுத்தல்! அதே நியாயம்!! அதே வரை முறை!!! புலிகளின் கொடி என்பது தேசியக் கொடியென்று அவர்களே வரை முறை செய்துகொண்டு அது குறித்து விவாதிக்கக் கூட வேண்டாம் என்று விடுக்கப்படும் அச்சுறுத்தல் மகிந்த அரசை நினைவு படுத்துகிறது.
சிங்களத்தில் மட்டுமே இலங்கைத் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்பதை எதிர்த்த ஜனநாயக வாதிகள் மீது விடுக்கப்பட்ட அதே பயமுறுத்தல்களை நினைவுபடுத்துகிறது.
இங்கு புலிக்கொடி குறித்த விவாதங்களுக்கு எல்லாம் அப்பால் அனஸ் என்ற ஊடகவியலாளனின் பேச்சுச்சுதந்திரம் குறித்த அச்சுறுத்தலே முன்னிலைக்கு வருகிறது.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் புலம் பெயர் நாட்ட்டு நீட்சிகளான நாம் இன்னொருவரின் பேச்சுச் சுதந்திரததை மறுத்து எமது சுதந்திரத்தை எதிர்பார்க்க முயல்வது பச்சைச் சந்தர்பவாதம், திருட்டுத்தனம்.
அனஸ் என்ற ஊடகவியலளர் எப்படி நிகழ்ச்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அதிர்வின் கட்டுரை அறிவுறுத்துகிறது.
நாங்கள் கொழும்பிலோ அன்றி வன்னியிலோ வாழவில்லை என்பதை இங்கு அதிகாரத்தைத் தேடியலையும் பலர் மறந்துவிடுகிறார்கள். “கேள்வி கேட்க பல விடயங்கள் உள்ளன. அதற்கு தேசிய கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது தான் ஒரு கேள்வி அல்ல ! கேள்வி நேரம் என்பது ஒரு நிகழ்சி அதில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மேடை ஏற்றவேண்டாம். குறிப்பாக எமது தேசியத்தோடு விளையாடவேண்டாம். தமிழ் தேசியத்தை கேள்விக்களமாக்க நீங்கள் யார்?” என்ற மிரட்டலின் பின்னால் கொச்சயான இனவாதப் பின்னூட்டங்கள் பதியப்பட்டுள்ளன.
ஒரு பின்னூட்டத்தில் “அனஸ் நீ இருக்கும் இடம் தெரியும். கவனமாய் இரு என்று கூறப்படுகிறது.” வன்முறைக் கலாசாரத்தின் நச்சு வேர்களை புலியின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் உறை நிலையில் வைத்திருக்கும் இவர்கள் தான் தேசியத்தின் எதிரிகள். மகிந்த ராஜப்கச போன்ற பேரினவாதிகளின் நண்பர்கள்.
அடிப்படை வாதிகளின், இனவாதிகளின் , ஒடுக்குபவர்களின் -இதனால் எல்லாம் – ஊடகவிலாளனின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மனிதர்களுக்கு மத்தியில் மௌனமாய் வாழ்வதற்காகய் நான் அவமானப்படுகிறேன்.
அனஸ் இன் கருத்து என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது இன்று எனக்குத் தேவையற்றது. அவரது கருத்தோடு முரண்பட்டால் அதனை எதிர்கொள்ளும் ஆற்ரலும் துணிவும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். ஆனல் அனஸ் என்ற ஊடகவியலாளனின் ஜனநாயகத்தை வன்முறை மூலம் அழிக்க முயலும் கோழைகளை நான் செத்துப்போகும் வரை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்.
இந்த சலசலப்பிற்கு அனஸ் அஞ்சுப்பேவதில்லை. இந்த சகோததரிற்கு இன்று மீளவும் ஒர மிரட்டல். நல்ல தேசியம்! அதற்கொரு மனிதனின் நல்லதொரு இணையம்! எல்லாரும் வாயை பொத்திக்கொண்டிருங்கள் ….
மகிந்தா கும்பலோட போயிருவீர் உள்ள….
நீங்கள் கூறும் அந்த பாசிச அரசால் கொன்று போடப்பட்ட ஊடகவியலாளர்கள் ஒருவரையேனும்,புலம்பெயர் மண்ணில் “ஒளி” வீசும் ஊடகம் நினைவுபடுத்துவதுண்டா?ஆண்டாண்டு தோறும் அந்த ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாட் கள் அந்த ஊடகத்துக்கு நினைவுண்டா?புலம்பெயர் மண்ணில் வாழ்கிறோம்.நேற்றுடன் பிரகீத் கடத்தப்பட்டு,காணாமல் போகச் செய்யப்பட்டு 500 நாள் ஆகியது!இன்று வரை அது குறித்து ஓர் சொல்லேனும் “ஒளி” வீசும் ஊடகம் கூறியதுண்டா?இங்கே நாம் வாழும் நாடுகளில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டாலோ,கொல்லப்பட்டாலோ தினம்,தினம் அது மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தப்படுகிறதே?ஊடக தர்மம் இது தானோ, மறக்கடிக்கப்படுவது?வக்காலத்து வாங்குவது இருக்கட்டும்.புலம்பெயர் அமைப்புகளுக்கிடையில் சிண்டு முடிவது தான் இந்த “ஒளி” வீசும் ஊடகத்தின் வேலை.இதயச்சந்திரனின் கருத்தை முழுமையாக கூற விடாது தொடர்பை துண்டிப்பது தான் ஜனநாயக ஊடகவியலோ?////நாங்கள் கொழும்பிலோ அன்றி வன்னியிலோ வாழவில்லை என்பதை இங்கு அதிகாரத்தைத் தேடியலையும் பலர் மறந்துவிடுகிறார்கள்.////ஆனால் அனஸ் மறக்கவில்லை!!!!!!!!!!!!!!
அனஸ் என்று ஊடகவியளாளரின் பெயரை குறிப்பிட்டு விட்டு ஊடகத்தை ஒளி வீசும் என்று மறைக்கிறாராம்.
இங்கு தீபம் தொலைக்காட்சி எப்படியிருக்கிறது என்பது என் முதன்மையான பிரச்சனையல்ல. அனஸ் என்ற ஊடகவியலாளனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் , மிரட்டல்…. . யோகா, ஒரு உதாரணம்: இலங்கை அரச உளவாளிக்கு எதிராக எனது இயலுமைகள் அனைத்தும் பிரயோகித்துப் போராட நான் தயார். அதே போல அவரின் பேச்சுச் சுதந்திரம் “தேசியத்தின்” பெயரால் மறுக்கப்படும் போது அதற்கு எதிராக நான் போராடாவிட்டால் எனது குரல் அர்ததமற்ற சந்தர்ப்பாவதியின் குரலாகிவிடும்.
மாற்று கருத்திற்கு இடமில்லையெனில் அது எப்படி ஊடகமாகும். தீபம் ஒன்றும் ம்க்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் நிறுவனமல்ல. மக்கள் பணத்தை கொள்ளையடித்து தொலைகாட்சிநடத்தி இன்று பணத்தை ஏப்பம் விட்ட ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனரின் வீடு அதிர்வுக்கு தெரியாதா?
தீபம் தொலைக் காட்சியில் புலிக் கொடி குறித்த விவாதம் முடிந்து கமரா அணைக்கப்பட்டதும் புலிக் கொடி சார்பாக கதைக்க வந்த நிர்மலன் என்பவர் எதிர்த் தரப்பல் விவாதிக்க வந்த நபர்களை பார்த்து நீங்கள் துரோகிகள் என கர்ச்சிதாராம்.
முள்ளிவாய்க்கால் வரை கூ;ட்டி வந்து கொல்லக் காடுத்த கூட்டம் துரோகிகளா அல்லது மக்களை விடுவிக்க கூறியவர்கள் துரோகிகளா?
தம்பி யோகா .எஸ் இது நீங்கள் பேசவில்லை. நீங்கள் வேலை செய்யும் ஜபிசிக்கு விசுவாசமாக இருங்கள். அதற்க்கதாக அராஜகத்திற்கு வக்காலத்து வாங்காதீர்கள்
ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை கடப்பிடடித்தால் உன்னதபணியாக மாற்றுக்கருத்திற்கு இடமின்றி முற்போற்காக அமையும் இல்லையேல் மக்கள் இவர்கள் தொடர்பை துண்டிப்பது நல்லது
அது எப்படிச் சரியாகும்?”அந்த ஊடகம் எப்படியிருக்கிறது என் முதன்மையான பிராச்சனையல்ல”என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை!நீங்கள்,ஒட்டுமொத்தமாக அதிர்வு இணையத்தை சாடுவது,இனவாத இணையத்தளமென்று பட்டம் சூட்டுவது எப்படிச் சரியாகும்?நான் ஒளி வீசும் ஊடகம் என்றே விழித்திருக்கிறேன்!நீங்கள் அப்பத்தை புட்டுக் காட்டியிருக்கிறீர்கள்!நீங்கள் உலகறிந்த ஊடகவியலாளன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!அச்சுறுத்தல் விடுவதில் எனக்கும் உடன்பாடில்லை தான்.ஆனால் நிலை கட்டுமீறிப் போவதாகத் தெரிகிறது.சிலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள்,அது இயல்பானது!அதற்காக, கொன்று விடுவார்களா,என்ன?மேலும்,இதயச்சந்திரனின் கேள்வி அல்லது வாதம் இடை நடுவே நிறுத்தப்பட்டது முகத்திலடித்தாற் போல் இல்லை? அவர் ஊடகவியலாளர் இல்லையா?கேள்வி நேரம் என்றாலே ஏறுக்கு மாறாகக் கேள்விகள் இருக்கத்தான் செய்யும்.அதனை எதிர்கொண்டு சமாளிப்பதே ஊடகவியலாளனுக்கு அழகு.ஐந்து நிமிடம் முன்பாகவே நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டார்.அதிலும் நான் அதிர்வில் பதிந்த கருத்தை மீளவும் உரைக்கிறேன்///யோகா.எஸ் 09/06/2011 04:19
கோட் சூட் போட்டால் மட்டும் போதாது!சபையை மதிக்க வேண்டும்!நேயர்கள் கருத்து அல்லது அபிப்பிராயம் சொல்லும்போது நக்கல் சிரிப்பும்,நையாண்டியும்.இவர்கள் மானிடப் பிறப்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.நிகழ்ச்சி நடத்துபவர் சில காலங்களாகவே இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வைத் தேடித்தர அவதரித்து வந்தவர் போல் வேஷமிட்டு காட்டிக் கொடுக்கிறார்.இந்த மாதத்துடன் இந்தத்” தொல்லை”க் காட்சி அலைவரிசையை துண்டித்து விடப் போகிறேன்!வேறு வழி தெரியவில்லை///இது இலங்கை அரசின் உளவாளி அல்ல.காட்டிக் கொடுக்கும்,சிண்டு முடியும் ஒரு நிகழ்ச்சித் திட்டம்!அதற்கு “ஒளி” வீசும் ஊடகம் கருவி!அதில் “ஒரு” நடிகர் அனஸ்,அவ்வளவே!
நீங்கள் கூறுகின்ற நக்கல் சிரிப்பாளர்கள் எல்லாவற்றிற்கும் அதிகமாக என்மீது சேறடித்திருக்கிறார்கள். என்னைக் கடத்தல் காரன் என்று கூடப் பொதுத் தளங்களில் அவதூறு பரப்பியிருக்கிறார்கள். பிரச்சனை அதுவல்ல, ஆயிரம் காரணங்களை வைத்துக்கொண்டு வன்முறையை ஆயுதமாக எடுக்கப்போகிறீர்களா அல்லது அதனை எதிர்க்கப் போகிறீர்களா என்பது தான். ஈபிடிபியிலிருந்து புறக்கணிக்கத் தக்க பல இணையங்கள் வரை என்மீது சேறடித்த போது நான் அவற்றை அரசியல்ரீதியாக எதிர் கொண்டிருக்கிறேன். நீங்கள் பல காரணங்களைக் காட்டி வன் முறை சரி என்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.
யோகா,
//அந்த ஊடகம் எப்படியிருக்கிறது என் முதன்மையான பிராச்சனையல்ல”என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை!//
ஊடகங்கள் குறித்தும் அவற்றின் பேரினவாத எல்லைகள் குறித்தும் இனியொருவில் பலதடவை எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஒரு மனிதனின் கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சனை.
உண்மைகளை பேச முயன்றால் காட்டிக் கொடுப்பு துரோகம். நல்ல கதையாய் இருக்கிறது.
அனசின் போக்கு உலகறிந்தது. அவர் முஸ்லீம் என்பதால் அவரை எல்லோரும் அச்சுறுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். தவறு . அப்படியான ஒரு கருத்தை நீங்கள் தான் விதைக்க முற்படுகிறீர்கள். தீபத்தில் தோன்றவேண்டும் என்ற அர்ப்ப ஆசையால், இப்படி எழுதி இருக்கிறீர்கள்.
சோமஸ்கந்தா.
அண்மைக்காலமாக இந்த இணையத்தில் வரும் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் ‘புலி எதிர்ப்பு வாதம்’ என்ற வட்டத்திற்குள் சுழல்கிறது. ஊடகவியலாளனின் சுதந்திரத்தை காப்பாற்றுங்கள்.
முன்பு என்னை அடித்தார் என்பதற்காக திருப்பி அடியுங்கள். இந்த ‘அனஸ்’, என்பவர், நேயர்களோ அல்லது பேச்சார்களோ தமது கருத்தை கூறும்போது, தான்தோன்றித்தனமாக இடைநிறுத்தி விடுவார். மற்றவர்களுக்கும் கருத்துக் கூறும் சுதந்திரம் உண்டென்பதை எடுத்துக் கூறுங்கள்.அதுசரி..இந்த ஊடக முதலாளி என்ன புரட்சிவாதியா? எந்த வர்க்கத்திற்கு இந்த ஊடகம் சேவை செய்கிறது?
புலி எதிர்ர்பு வாதம் ஒரு புறத்தில் அரச ஆதரவாளர்களாலும் மறுபுறத்தில் புலிகளாலும் பிரயோகிக்கப்படும் மறுதலையான சொற்றொடர்கள். இந்த இணையத்தில் வெளியான அளவிற்கு அரசிற்கு எதிரான எதிர்ப்புக் கட்டுரைகள் கருத்துக்கள் வேறு எந்த இனவாத இணையங்களிலும் வெளியானதில்லை. இதுவா உங்களுக்குப் புலி எதிர்ப்பாகத்தெரிகிறது? இப்படித் தானே இலங்கை அரசு கூட அவர்களை எதிர்ப்பவர்களை எதிர் கொள்கிறது. புலிகள் ஒகோ என்றிருந்த காலத்தில் கூட “புலி எதிர்ப்பாளர்களாலும் புலிகளாலும்” சாரீர வன்முறையைக் கூட எதிர்கொண்டிருக்கிறேன். இங்கு கூறப்படுவது மிக இலகுவான பாலர்பாடக் கணக்கு. அனஸ் என்பவர் யாரையும் மிரட்டவில்லை. அவரது கருத்துத் தவறானதாக இருக்கலாம் அதற்காக அவரை மிரட்டுவது கருத்தை எதிர்கொள்ள முடியாத பச்சோந்த்தித் தனம். இனிமேலாவது இந்த வன்முறைக் கலாச்சரத்தைக் கைவிடுங்கள்.
கட்டுரையின் கருத்துக்கள் சரியானவை. தீபம் உரிமையாளர் பத்மனாதன் இலங்கை அரசோடு வியாபாரம் செய்வதாக எல்லாம் கதைகள் வருகின்றன. பிரச்சனை அது அல்ல. ஒரு ஊடகவியலாளன் மீதான வன்மம் எனப்தே. அதுவும் இனவாதம் பாவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் ரூபவாகினி ஊடகவியலாளர்களை துவைத்து எடுத்த மேர்வின் டீ சில்வா போன்றது தான் அதிர்வும்.
ஒருவா் மிரட்டுகிறார் என்றால் அவரிடம் நியாயமான பாதையில் முகம் கொடுப்பதற்கேற்ற சக்தி இல்லை என்றே உணரப்படும் அத்தோது இயலாமை,பலவீனம் என்பதையும் வெளிக்காட்டுவதாகும்.
ஊடகவியலாளா்கள் அத்தனை பேருமே நோ்மையானவா்கள் என்று கூறிவிடமுடியாது ஆனால் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் விட்டுவிடலாமல்லவா அதை விட்டு இந்த விதமான அடாவடித்தனத்தில் இறங்கி எதை சாதிக்கமுடியும்,மேற்குலக நாடுகளில் நிதி சோ்க்க வந்தவா்கள் பணம் இல்லை ஆதலால் பங்களிக்கமுடியாது என்று கூறியவா்களிடம் உங்கள் நாட்டு விலாசத்தை தாருங்கள் என்று கேட்டு மிரட்டிய ஞாபகம் வருகிறது.
என்னவோ இப்படிப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக பேரினவாதத்திற்கு நன்மை செய்வதாகவே முடியும்.
இனியொரு பக்கச்சார்பற்று எழுதிவருவதை நான் மெச்சுகிறேன்.
///ஒரு மனிதனின் கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சனை.///நல்லது!அது பொதுமகன்ளுக்கும் உருத்தானது,இல்லையா?திணிப்பதை தான் நான் எதிர்க்கிறேன்.அது என் பொறுத்தவரை எல்லோருக்கும் பொருந்தும்!அதாவது,திணிக்கும் எல்லோரையுமே தான் நான் சுட்டுகிறேன்.ஊடகம் என்று ஒன்று கையில் இருந்தால் அது அல்லது அவர்கள் சொல்வது தான் வேத வாக்கா,என்ன?பொதுவில் என்று வந்து விட்டாலே விமர்சனங்கள்(நல்லதோ,கெட்டதோ)வரத்தான் செய்யும்!நீங்கள் குறிப்பிடும் அந்த மனிதனின் (இதயச்சந்திரன்) கருத்துச் சுதந்திரம் தட்டிப் பறிக்கப்பட்டதே?இதற்கு உங்கள் பதில் என்ன?நீங்கள் குறிப்பிடும் “அவர்” யாரையும் மிரட்டவில்லை தான்.குமுறுவதும்,கொந்தளிப்பதும் மனித இயல்பு.அதற்காக,நான் முன்பே குறிப்பிட்டது போல்”கொன்று” விடுவார்களா,என்ன?///மேலும்,மணியன் அவர்கள் கூறிய என் சம்பந்தமான தெளிவூட்டல்:எனக்கும் ஐ.பி.சி வானொலிக்கும் எந்த தொடர்பும் இல்லை!அதில் அறிவிப்பாளராக இருக்கும் ஒருவர் எனது நீண்டகால நண்பர்,அவ்வளவே!உண்மையைச் சொன்னால் அந்த வானொலியோ,வேறும் வானொலிகளோ என் வீட்டில் இணைப்பில் இல்லை!ஏனெனில்,அவற்றை செவிமடுப்பதற்கான “டெக்கோடர்” என்னும் சாதனம் என்னிடம் இல்லை!இணைய வழியில் செவிமடுக்க எனக்கு நேரமும் இல்லை!/// “அதுசரி..இந்த ஊடக முதலாளி என்ன புரட்சிவாதியா? எந்த வர்க்கத்திற்கு இந்த ஊடகம் சேவை செய்கிறது?”மாறன் அவர்களே,அது இலங்கையில் இருக்கும் “மகாராஜா குறூப்”நிறுவனத்துக்குச் சொந்தமானது! இப்போது புரியுமே?????????
யோகா.சு,
ஊடகங்கள் எங்குமே முதலாளிகளிற்கே சொந்தமானது ஏனெனில் ஊடகம் நடாத்துவதற்கு ஒரு தொகை பணம் தேவையல்லவா?ஆகவே சில சந்தா்ப்பங்களில் ஊடகவியலாளா்கள் அவா்களது வேலை வழங்கியவா்களால் நிர்ப்பந்திக்கப்படுவதும் உண்டு.நாம் அம்பை நோவதால் என்ன பயன்?பிரித்தானியாவின் முதலமைச்சராக இருந்த ரொனி பிளோ் எழுதியிருந்தார் தான் ரூபோ்ட் மோ்டோக்கை சந்தித்த பின்பே பிரபல சன் பத்திரிகை தனக்கு சாதகமாக எழுதத்தொடங்கியதாகவும் அதன் பின்பே தான் வெல்லமுடிந்ததென்றும்.
இந்த மாற்றுக் கருத்துக்களை அடக்கும் போக்கு நேற்றைய இன்றைய நிகழ்வல்ல. எமது தேசியவாத அரசியலின் ஒரு அங்கம். முன்பு காங்கிரஸ் தமிழரசுக் கட்சிகள் பின்னாலில் அவர்களின் அரசியலை அடியொற்றி வந்த இயக்கங்கள் அவற்றில் வாலுகள் என்று தொடர்கின்றது. இது தான் எம்மினத்தை முள்ளிவாய்க்காலில் மண்கவ்வ வைத்ததும்.
இன்று புதிய கருத்துக்கள் சிந்தனைகள் எமது சமூகத்திற்கு தேவை. மாற்றுக் கருத்துக்களிற்காக மாற்று அரசியலுக்காக இன்று பலர் எம்மிடையே குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை வரவேற்க்கப்பட வேண்டியதே.
மாற்றுக் கருத்துக்களை கேட்க்க விடமாட்டோம் என்று மக்களின் பணத்தினை சுருட்டியுள்ள புலம்பெயர் புலிப் பினாமிகள் தமது அடியாட்கள் மூலம் அடம்பிடிக்கின்றனர். அண்மையில் போர்க் குற்றம் தொடர்பில் அரசு மற்றும் புலிகளை விசாரிக்க வேண்டும் என துண்டுப்பிரசுத்தை விநியோகித்த தமிழ் மகனை புலிகளின் குண்டர்படை தாக்கமுற்ப்பட்டதாக இணையம் ஒன்றில் செய்தி வந்திருந்தது. எமது தமிழ்ச் சமூகம் ஒரு வகையான மலட்டுச் சமூகமாக கடந்த கால 30 வருட மக்கள் விரோத அரசியல் மாற்றிவிட்டதனை எண்ணி வேதனையும் வெட்கமும் அடைகிறேன்.
மாற்றுக் கருத்தாளர்களே உங்களிற்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் ஒரு குறைந்த பட்ச திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து (கருத்து சுதந்திரத்திற்காக ஆவது) செயற்பட்டு கருத்துச் சுதந்திரத்தினை மீட்டெடுங்கள்!!
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்
அப்போ நாங்கள் “அந்த” முதலாளிகளுக்கு விலை போக வேண்டுமென் கிறீர்களா,குமார்?அம்பை நோவது என் நோக்கமல்ல!எனது கருத்துச் சுதந்திரம் இது!மூன்றெழுத்து தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே குட்டை தான்,ஒரே மட்டை தான்!
இல்லை விலைபோகமுடியாது, ஆனால் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊடக ஸ்தாபனங்களின் பலத்தினை அறியாது சாதாரண தொழில் புரியும் ஊடகவியலாளரை மிரட்டுவதால் பிரயோசனம் இல்லை என்கின்றேன்.
புலிகளைப் பற்றி விமர்சித்தால் காதைப் பொத்திக்கொண்டு நாங்கள் சொல்வதை மட்டுமே கேளுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி மீறினால் துரொகிகள் என்று சொல்கிறார்கள். அனஸ் முஸ்லீம் என்று திட்டி இன வெறியைக் காட்டுகிறார்கள். இதெல்லாம் ஏன்? தாம் தேசிய யாவாரம் செய்ய மட்டுமே. மக்களைப் பாவித்து பணம்பார்க்கும் இவர்கள் தெருவுக்கு வரவேண்டும்.
புலிக்கொடி எங்கள் கொடி இதப்பற்றிக் கதைக்க யாருக்கும் உரிமை இல்லை. மீறினால் விளைவுகளைச் சந்திப்பீர்கள். கே.பி கூட இதப்பற்றிக் கதைக்கவில்லை.
அதாவது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தினுடய கொடி ஓட்டுமொத்த தமிழா்களின் கொடியல்ல ஆனால் சில வேளை சா்வசன வாக்கு ஒன்று நடத்தப்பட்டு பெரும்பான்மைத் தமிழா்கள் ஏற்றுக்கொண்ட பின்பு எமது கொடி என்று கூறலாம்.
பிடித்த புலிக்கொடி மட்டும் உங்களது அல்ல அடித்த பணமும்தான் உங்களதுதான்.
இது தமிழரின் பெயரால் உலகினை ஏமாற்ரிவாழும் தமிழ்புலிகளின் கொடி.
இதன் பின்னால் சென்ற தமிழ்ரகளையெல்லாம் பலி கொடுத்து உங்களை காக்க வழிகாட்டிய கொடி. இப்படி எத்தனையோ பெருமைகள் வாயந்த கொடியையாராவது உங்களை விட தங்களிற்கு சொந்தமானதென் கூறுவார்களா?
-துரை
புலிக் கொடி இலங்கைத் தமிழ் மக்களின் கொடியல்ல. மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடித்தவா;களின் கோமணம்
புலியின் தடையைநீக்கினால் சிறிது லாபம் கிடைக்கும் அல்லவா?
அது மட்டுமல்ல புலி ச்ண்டியர்களிற்கும் உலகமுழுவதும் அங்கீகாரம் கிடைக்கும்.
அவ்ர்கள் பணபபையும் நிரம்பும். இன்ன்மும் இந்த வெட்கத்தை மறந்து
புலியின் தடையை எடு, புலிக்கொடியைப் பிடி என்பவர்கள் சாதரண மனிதர்களல்ல.
மூளைச்சலவைசெய்யப்பட, மனிதநேயமற்ர,ஈவிரக்கமற்ர, கொடுமைக்காரர்கள்.
-துரை
எழுதிய கருத்துகளை எடுத்தெறிந்த சம்பவங்கள் இனியோருவில் நடந்தேறியிருக்கின்றன.
கருத்து சுதந்திரம் என்பது அவரவர் சார்பியல் ரீதியானது.நியாயம் பிளக்கிறதில் யாரையும் திருத்த முடியாது;மாறாக உள்முரண்பாடுகளை,பற்றி எரிய வைப்பதேயாகும்.
அடக்கும் இனத்திடமிருந்து ஒரு மனிதனேனும் வாளேந்திய சிங்கக்கொடி தேசியக்கொடியாக இருக்கலாமா எனக் கேள்வியே எழுப்பவில்லை.
தோற்றவர்கள் மட்டும் தோல்வியின் காரணங்களை மற்றத் தமிழர் மேல் சாட்டுவதில் குறியாக இருக்கிறோம்.
தோற்றுப்போனவர்கள் மனித உரிமை,கருத்துச் சுதந்திரம் என வார்த்தைஜாலமாடி,தங்களுக்குள் முட்டி மோதி அழிந்து போக ‘விட்டில் பூச்சிகளாக’ பறக்கிறார்கள்.
கொடிகளாக நமது எரியும் பிரச்சனை! இனவழிப்பினைத் தொடர்ந்து,பணயக்கைதிகளான மக்கள் பட்டினியால் அழிந்து போகிறார்கள்.
அதுதான் முதன்மையானது.அறுபது ஆண்டின் அவலத்தின் முழுமையான தீர்வு எல்லாவற்றையும் விட முக்கியமானது.
எரிகிற செய்திகளை பேசாதவன்,எதைப் பேசினாலும் அது எம் அழிவிற்கே.
வெளிப்படையான விவாதம், பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை என்பன தமிழ்மக்களின் அரசியலை முன்நகர்த்துவதற்கு இன்றியமையாதன. விவாதத்திற்கும்,விசாரணைகளுக்கும் அப்பாலானது என்று எதுவுமே இல்லை. பல தசாப்தம்களாக கோயபல்ஸ் பாணி தமிழ் ஊடகங்களையே நடத்திவந்த புலத்து வியாபாரிகளுக்கு இவை உவப்பானதல்ல. அண்ணைகளும், அம்மான், மாஸ்ரர் வகையறாக்கள் இன்று பேரினவாதத்தின் காலை நக்கிபிழைக்கின்றபோதும், புலத்துவியாபாரிகள் எந்த சுரணையுமற்று மற்றவர்களுக்கு எல்லைகளை வகுக்கிறார்கள். இனவாத இணையத்தளங்களின் பணி இதுதான். எந்த இனவாதியும் தன்னை இனவாதியாக காண்பதில்லை கிட்லர் உட்பட. இந்த நச்சுவேர் படர இடமளிக்கப்படக்கூடாது. அனைத்து சமூக உணர்வு உள்ள சக்திகளும் இதனை கண்டிக்கவேண்டும். அனஸ் இந்த மிரட்டலை சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்த கும்பலது மாபியா பாணி பண, வர்த்தக பரிமாற்றங்கள் இன்று நாற்றமெடுக்கும் நிலையில் மீண்டும் இனவாத சகதிக்குள் தம்மை பாதுகாக்க முனைகின்றார்கள்.
my brother used to be a LTTE member died in 1993 december killed by sri lankan army. for me he is a hero. we all go to LTTEs hero’s day because of him. i finally reasilsed that they do these helos day and all to collect money. it became as business in our community. i dont want tiger flag. i want to do something for our community who are suffering in tamil elam. someone who has to lead our community and get rid off this business tigers.
இலக்கு என்ன?
புலி ஆதரவலனாக இருந்தேயாக வேண்டியதற்காக புலிக்கு ஆதரவல்லாத தமிழ் மக்கள் சார்பனவர்களுடன் முரண் படுவது என்ன பலனைத் தரப் போகுமோ தெரியலை.
இலக்கு
1.தமிழரிட்க்கும் சம உரிமை.
2.. அடிப்படை மனித உரிமைகள் பேணப்படல்.
மூலோபாயம்:
தமிழின உணர்வாளர்கள், மனித உரிமைக்காக போராடுவோர், தமிழ் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் இணைத்து எமது இலக்குகளிட்கு எதிரான சக்திகள், அதிகாரங்களிட்கு அழுத்தத்தை கொடுத்தல்.
உடனடி தந்திரோபாயம்: :UNSG நிபுணர் குழு அறிக்கையை முதன்மை எதிரி சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக ஆயுதமாக பாவித்தல்.
உடனடி தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகள்: …………………………
1..முதன்மை எதிரி சிங்கள பேரினவாத அரசு மட்டுமே, சிங்கள பொது மக்கள் அல்ல என்பதை தமிழ் சிங்கள உணரவாளர்கட்கு புரிய வைத்தல் . ……………………………
2..UNSG நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்ட தமிழர் தரப்பு தவறுகளை எமக்கே எதிரான ஆயுதமாக(BACKFIRE) நாமோ அல்லது எதிரிகளோ பாவிக்க முற்படுவதை தடுத்தல் அல்லது( null and void) மலினப்படுதல் …………………………..
தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகள். 3: குழு வாதத்தை கையாளுதல்
எம்மிடையே உள்ள மிகப் பெரிய தடை, கவனமாக கையாளப் படவேண்டியது.
எம் இலக்கு, மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் போன்றவற்றில் நாம் தெளிவாக இருப்போமானால் , வெவ்வேறு காரணங்களிட்காகவும்,தெரிந்தோ தெரியாமலோ எம் தவறிட்கும்,முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.
உடனடி தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகளை தகர்க்க கூடிய வேலைத்திட்டங்கள் உடனடியாக முன்னெடுத்தல் அவசியம்
//எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.//
குழப்பங்கள் யாவை ?
வெளியக குழப்பங்களை பார்க்க முன் எம்மிடையே உள்ள முக்கியமான உள்ளக அணிகள்,குழப்பங்கள், எம் ஒற்றுமைக்கும் மக்கள் சார் அணிக்கும் ஏன் எதிராக உள்ளன பற்றி ஆராய்ந்து ஆக குறைந்த ஒரு புரிந்துணர்வுடன் பொது இலக்கு நோக்கி நகர்வது அவசியம்.
புலி சார்பு, எதிர்ப்பு
அணி:
அரசு எதிர்ப்பு,சார்பு
அணிகள் உள்ளன இவற்றினுள் தமிழ் மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணி ஓன்று உள்ளது.
இந்தப் பொது அணிகள் தொடர்ச்சியாக அணிகளிட்கு இடையே ஆன கருத்துப் பரிமாற்றங்களிநூடு அணைத்து அணிகளில் உள்ளோரையும் ஒரு மக்கள் சார் பொது வேலைத்திட்ட நோக்கிட்காவது வென்றெடுக்க
முயற்சிக்க வேண்டும், முயற்சி செய்யாது ஒதுக்குவது எமக்கு எதிராக அவர்களை எதிரிகள் பாவிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
நன்றாக ஆராயப்பட்டுள்ளது. தமிழருக்குள் தமிழ்நாடு உட்பட தமிழருக்கெதிரான்
ஓர்
சக்தி செய்ற்படுகின்றது. இதில் சிங்கள பேரினவாதமோ இந்திய ஆதிக்கமோ
சம்ப்ந்தப்படவில்லை. இந்த சக்தியே தமிழரின் போராட்டத்தைநாட்டை மீட்கும் போரை தமிழரின் உயிரை மீட்தகும் போராக மாற்ரியது. தமிழரின் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படும் வரை தமிழர் தமிழர்கழுடன் மோதிக் கொண்டேயிருப்பார்கள்.இதற்குக் காரண்ம் தமிழருக்குள் வாழும் சில தமிழர்களேயாகும். இவர்கள் எதிரியாகவோ பகைவராகவோ கண்ணிற்குத்தெரிய மாட்டார்கள். எப்போதும் நான் எனது சமூகம் என்ற ரீதியில் வாழ்வோர்
தமிழர் என்று குரல் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமே தமிழர் மத்தியில் ஒற்றுமை மலரும். -துரை
///இதில் சிங்கள பேரினவாதமோ இந்திய ஆதிக்கமோ
சம்ப்ந்தப்படவில்லை. //
I don’t agree with you on this.
1.வெளியக குழப்பங்களை(சிங்கள பேரினவாதமோ இந்திய ஆதிக்கமோ)
பார்க்க முன் எம்மிடையே உள்ள முக்கியமான உள்ளக அணிகள்,குழப்பங்கள், எம் ஒற்றுமைக்கும் மக்கள் சார் அணிக்கும் ஏன் எதிராக உள்ளன பற்றி ஆராய்ந்து ஆக குறைந்த ஒரு புரிந்துணர்வுடன் பொது இலக்கு நோக்கி நகர்வது அவசியம்.
2.
எம்மிடையே உள்ள முக்கியமான உள்ளக அணிகள்,குழப்பங்கள்
தவறுகள் காரணமாக எமது இலக்குகளிட்கு எதிரான சக்திகள், அதிகாரங்களை நாம் ஆதரிப்பது எம் மூலோபயதிட்கு எதிரானது.
//வெளியக குழப்பங்களை(சிங்கள பேரினவாதமோ இந்திய ஆதிக்கமோ)
பார்க்க முன் எம்மிடையே உள்ள முக்கியமான//
தமிழீழ விடுதலை என்று தமிழ் மொழியை முன்வைத்தே போராட்டம் ஆரம்பமானது. அப்போதும்சரி இப்போதும் சரி இலங்கைத்தமிழர் என்னும் ஓர் கட்டமைப்பு இல்லை. பெயரளவில்தான் இன்றும் பல பிரிவுகளாகியேயுள்ளன. அரசென்பன்பதே ஓர் பாரிய பலமான் மரம்தான். அதே போல்தமிழர்
பலமாக உள்ளனரா தனிநாடு கேட்பதற்கும்
போராடுவதற்கும்.? தமிழ்நாட்டில் ஆரம்பத்திலேயே போராளிகளின் ஒற்றுமையின்மையே இன்றுள்ள உலகளாவிய
ஒற்றுமையின்மைக்கு வித்திட்டுச் சென்றுள்ளது.
அதனைத்தொடர்ந்த அழிவுகளிற்கும் தமிழர்களேதான் காரணம். தமிழர் தம்மைதிருத்தாத வரை ஒன்றாகாத வரை அதற்கான தலைமை உருவகாதவரை தமிழர் என்ற குடையை மடித்துவைத்து விட்டு பேசுவதே நன்மை தரும். காரண்ம் தமிழரின் பெயரால் உலக்முழுவதும் குருவிச்சை போல் ஒட்டுண்ணிகள் தோன்றி தமிழரையும் உலகினையும் சுரண்டி வாழ்கின்றார்கள். இவர்கள்முதலில் அடையாளம் காணப்படவேண்டும், அல்லாவிடில் தமிழபோராட்டம் என்பது ஓர் முடிவற்ர அர்தமில்லாத தொடர்கதைதான்.-துரை
//////இந்தப் பொது அணிகள் தொடர்ச்சியாக அணிகளிட்கு இடையே ஆன கருத்துப் பரிமாற்றங்களிநூடு அணைத்து அணிகளில் உள்ளோரையும் ஒரு மக்கள் சார் பொது வேலைத்திட்ட நோக்கிட்காவது வென்றெடுக்க
முயற்சிக்க வேண்டும்./////
கருத்துப் பரிமாற்றங்கள் :
புலி சார்பு, எதிர் கருத்துகள்: முக்கிய மீள் பரிசோதனைக்கு , திருத்தங்களிட்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ளது.
புலி சார்பு :
புலிகளே ஏக பிரதி நிதிகள் என்பதை அன்றைய தேவை, சூழ்நிலை, நியாயங்கள் , அவர்களிற்கு இருந்த தகுதி கருதி உருவாக்கப் பட்ட அடையாளங்களான தேசியக் கோடி , தேசியத் தலைவர் போன்றன மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படல் வேண்டும்.
ஏக பிரதி நிதிகள் : அன்றைய தேவை, சூழ்நிலை, நியாயங்கள் , அவர்களிற்கு இருந்த தகுதி வேறு ஆனால் இன்றைய குறிப்பாக மே 09 , முள்ளிவாய்க்கால் ,தலைவரின்
இருப்பு , இறப்பு ,புலிகளின் அழிவு பற்றி முழுமையாக ஆராயாது ,தெளிவாக மக்கள் முன் வைக்காது
உள்ள நிலைமையில் பழைய காரணங்களையே முன் நிறுத்துவது எந்த விதத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமையும் புலி சார் கருத்துக் கொண்டோருக்குண்டு.
புலி எதிர் கருத்துக்கள்: புலி எதிர்ப்பு மட்டுமே .தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமை புலி எதிர் கருத்துக் கொண்டோருக்குண்டு.
இல்லையேல் குழுவாதம் மட்டும் தான் தீவிரமடையும், ஒரு பலனும் தமிழ் மக்களிற்கு இராது. தமிழ் மக்களின் நலனிற்காக என்று புறப்பட்டு குழுவாதத்தில் சிக்குண்டு நாம் எல்லோரும் என்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலிட்கு வழி காட்டுவதாகத்தான் முடியும். think! do we need another period of groupism.
வன்முறைக் கலாச்சரத்திற்கு ஆதரவாகப் பின்னூட்டமிடும் அனைவருக்கும்,
எனது நோக்கம் தீபம் தொலைக் காட்சியையோ அன்றி அதற்கு வேலைசெய்யும் ஊடகவியலாளர்களையோ ஆதரிப்பதல்ல. அவர்களின் செயற்பாடுகளும் கருத்துக்களும் அத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே விமசர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. எனது விமர்சனம் வன்முறைக் கலாச்சரதின் தொடர்ச்சியை கண்டிப்பதே அதற்கு எதிராக சமூக உணர்வுள்ள அனைவரும் தமது போராட வேண்டும்.
மேலும் கட்டுரையில் அனஸ் மிரட்டப்பட்டதற்குக் காரணம் அவர் புலிக்கொடி குறித்த விவாதம் ஒன்றை ஆரம்பித்து வைத்தமையே. எம்மோடு உடன்படாதவர்களை அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் அவர்களது பேச்சுரிமையை மறுப்பது எமது இயலாமையையே சுட்டி நிற்கும்.
////மேலும் கட்டுரையில் அனஸ் மிரட்டப்பட்டதற்குக் காரணம் அவர் புலிக்கொடி குறித்த விவாதம் ஒன்றை ஆரம்பித்து வைத்தமையே. எம்மோடு உடன்படாதவர்களை அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் அவர்களது பேச்சுரிமையை மறுப்பது எமது இயலாமையையே சுட்டி நிற்கும்.////அவ்வாறே வைத்துக் கொள்வோம்.தொலைபேசி வழி கேள்விகளின் போது,ஒருவரின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டதே?,அதற்கு உங்கள் பதில் என்ன என்பதே என் கேள்வி.அப்போ அவரின்(அனஸ்)இயலாமையை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?மேலும்,அந்தச் சபையில் அதாவது விவாத மேடையில் இருந்த இருவர் மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போது கேலிச் சிரிப்பு சிரித்ததையும்,வேண்டாத விமர்சனங்களை முன்வைத்ததையும்(இவர் எதற்கு வந்தாரோ தெரியாது,உழைக்க வந்தாரா இல்லை………………………)சரி என்கிறீர்களா?
யோகா, நீங்கள் மறுபடி மறுபடி வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்த எங்காவது ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். வியாபார ஊடகங்கள் குறித்தும் மக்கள் ஊடகவியல் குறித்தும் நான் எனது கருத்தை வன்முறையற்று முன்வைத்திருக்கிறேன். இங்கு நான் பேசுவது வன்முறை குறித்தே. அனஸ் யாராக இருந்தாலும் புலிக்கொடி குறித்த விவாதத்தைத் ஆரம்பித்த காரணத்திற்காக அவர் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை நாம் கண்டிக்கத் தவறினால் இலங்கையிலும், இந்தியாவிலும் ஏன் உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிகத் தகுதியற்றவர்களாகிவிடுவோம்.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், கருத்துச் சொல்பவரைக் கேலிசெய்யும் வகையில் சிரித்ததும், கருத்துக்களை இடை நிறுத்துவதும் தவறு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக வன்முறைக் கலாச்சாரத்தைப் கையிலெடுத்துக்கொள்வது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே கட்டுரை.
(
I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it. -Voltaire)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இலங்கை அரசின் போர்க்குற்றங்களிற்கு சுதந்திரமான, சுயாதீனமான விசாரணையை வேண்டி புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி விடுத்த அறிக்கையை, லண்டனில் மக்களிற்கு கொடுத்துக் கொண்டிருந்த தோழர்களில் ஒருவர் புலிகளின் ஆதரவாளர்கள் எனப்படும் காடையர் கும்பலினால் அச்சுறுத்தப்பட்டார். “தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்பவர்கள் மக்கள் அழிவிற்கு வழிவகுத்த புலிகளின் ஏகாதிபத்திய சார்பு, குறுந்தேசிய அரசியலையே பிரதிநிதிப்படுத்துகின்றனர்” என்கின்ற வரிகள் அறிக்கையின் ஓரிடத்தில் வருகின்றன. இதன் காரணமாகவே தோழர் மிரட்டப்பட்டார்.
தோழரை துரோகி, சிங்களவனிற்கு பிறந்தவன் என்று வசை பாடி தாக்க முயன்றிருக்கிறார்கள். தோழர் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தன்னை விடுதலைப் போராட்டத்துடன் முழுமையாக இணைத்துக் கொண்டதுடன், இயக்கத்தின் அராஜய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததனால் கொடிய சித்திரவதைக்கும் உள்ளானவர். இவரைத் தான் இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் துரோகி என்கிறார்கள்.
இங்கே ஒருத்தன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் போலே என்று அவர்கள் தோழரை தாக்க முயன்ற போது, அந்த மே 18 நிகழ்வை ஒழுங்கு செய்த பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சிலர் அடிக்க வேண்டாம் என்று தடுத்திருக்கிறார்கள். இவங்க ரொம்ப நல்லவங்களாக்கும் என்று தோழர் நினைத்துக் கொண்டிருக்க அவர்கள் சொன்னார்களாம், இங்கே வைச்சு பிரச்சினைப் பட வேண்டாம் பொலிசிற்கு தெரிந்தால் அடுத்த முறை கூட்டத்திற்கு அனுமதி எடுப்பது பிரச்சனையாகி விடும் என்றார்களாம். மக்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாக நாடகம் போடுபவர்களின் லட்சணம் இது தான். துண்டுபிரசுரம் சொல்லும் விமர்சனங்களில் உடன்பாடு இல்லை என்றால் விவாதிக்க முடியாது, விவாதிக்க தெரியாது எங்களது இயக்க கலாச்சாரப்படி அடிதான் போடுவோம் என்பது தான் இவர்களின் அரசியல் வழிமுறையாக எப்போதும் இருந்து வருகிறது.
மற்றைய இயக்கங்களில் இருந்த பலர் தமது இயக்கங்களின் வன்முறை, மக்கள் விரோதப்போக்குகளை எதித்து விலகினர். இவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசையும், மக்கள் விரோத சக்திகளையும் எதிர்த்து வருகின்றார்கள். அனால் புலிகளில் இருந்து விலகியவர்கள் வைச்சால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்பது போலஒன்றில் மேதகு அல்லது மகிந்தா என்று ஒரே தாவாக இலங்கை அரசின் பக்கம் தாவுகின்றனர். அரசியல் அறிவு, நேர்மை என்பது அறவே இல்லாத இந்த கூட்டம் மற்றவர்களைப் பார்த்து துரோகி என்கிறது.
புலிகளின் போராளிகள் இயக்கக்கட்டுப்பாடு, தலைமை சொல்வதை கேள்வி கேட்காது அடி பணிதல் போன்ற முறைகளினால் ஒரு முதலாளித்துவ ராணுவம் போன்றே வளர்க்கப்பட்டவர்கள். சமூகம் பற்றிய ஆய்வுகள், தேசிய விடுதலை போராட்டங்கள், வர்க்கப்போராட்டங்கள் பற்றிய எந்த விதமான அறிவுகளும் அவர்களிற்கு எக்காலத்திலும் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் கருணா பிரிந்த போது கருணாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்த பெரும்பாலான போராளிகள் வேறு வழியின்றி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு கருணாவுடன் பிரிந்தனர். பிரபாகரனின் தலைமை, கருணாவின் தலைமை இரண்டுமே அவர்களிற்கு ஒன்று தான், ஏனெனில் ஆயுத முனையிலே சொல்வதைக் கேட்டு அடிபணிந்து பழக்கப்பட்டவர்களால் சிந்திக்க முடியாது. கிழக்கு மாகாண போராளிகள் பிரிந்தவுடன் துரோகிகள் பட்டியல் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் எகிறியது. அது நாள் வரை பாதித் தேசிய தலைவராக இருந்த கருணா துரோகியாக்கப்பட்டார். கருணா போன்ற பயங்கரவாதிகளை இவர்கள் எப்படி அழைத்தாலும் எமக்கு கவலையில்லை. ஆனால் வேறு வழியின்றி கருணாவுடன் சென்றவர்களையும் துரோகிகள் ஆக்கினர்.
மட்டக்களப்பார்கள் எருமைத் தயிர் சாப்பிட்டு மூளை மந்தமாகிப் போனவர்கள் என்று சில யாழ் பிரதேசவாத அறிவுக்கொழுந்துகள், இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்தார்கள். வசதி படைத்த யாழ்ப்பாணிகள் ஒரு குண்டு விழ முதல் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று நாட்டை விட்டு ஓடி வந்த போது நாட்டிலேயே அடக்குமுறைகளிற்குள் வாழும் கிழக்கு மாகாண மக்களும், வாழ்விழந்து போன வன்னி மக்களும், யாழ்ப்பாணத்து ஏழை மக்களும் புத்தி குறைந்தவர்கள் என்பது இந்த புலம்பெயர் தேசபக்தர்களின் கொழுப்பேறிய மண்டைகளில் சுரந்த ஆய்வு முடிவு. கிழக்குமாகாண போராளிகளை துரோகிகள் என்று மேதகு கல்வெட்டிலே பொறித்த நாளிலே இருந்து ராணுவ சமனிலை குலைந்தது புலிகளின் தோல்விக்கான காரணிகளில் ஒன்று என்பது இந்த அறிவுகொழுந்துகளின் மரமண்டைகளிற்கு இன்னும் ஏறாத விடயம்.
இலங்கையின் தமிழ். சிங்கள மக்கள் இணைந்து போராடுவதன் மூலமே பாசிச அரசினை விழ்த்த முடியும் என்ற இலங்கையின் யதார்தத்தை எடுத்துச் சொல்பவர்களை சிங்களவனிற்கா பிறந்தாய் என்று இந்த மசிர்புடுங்கிகள் பட்டமளித்து கெளரவிப்பது வழக்கம். ஆனால் தினவெடுத்த தோள்களும், வீறு கொண்ட நடையும் கொண்ட செந்தமிழ் புலிகள் இரண்டாம் மேதகு கே. பி, கருணா, பிள்ளையான்கள் தான் பிணம் தின்னும் இலங்கை அரசுடன் கூட்டுக் கலவி செய்கிறார்கள். புலிகளால் துரோகிகள் என்று சொல்லப்படுபவர்கள் இலங்கை மக்கள் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக, நன்றாகக் கவனிக்கவும் இலங்கை அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்று கூறுகையில் மேதகுவினால் புடம் போட்டு எடுக்கப்பட்ட இந்த சொக்கத்தங்கங்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து நிற்பது ஏன் என்று இந்த புலிவால்கள் றூம் போட்டு யோசித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்.
அந்த இடத்தில் புதியதிசைகள் அமைப்பினரும் தமது துண்டுப்பிரசுரத்தை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தனர். தோழரிடம் இவர்கள் யார் என்று தெரியுமா என அந்த காடையர் கும்பல் விசாரித்திருக்கிறது. ஆனால் புதியதிசைகள் அமைப்பினரை கும்பல் ஒன்றும் செய்யவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
1. பிரசுரம் ஆங்கிலத்தில் இருந்தது.
2. புதியதிசைகள் அமைப்பினர் புலிகளின் போர்க்குற்றம் தொடர்பாக எதையும் பிரசுரத்தில் சொல்லவில்லை. புலிகள் என்ற சொல் அல்ல, பு என்ற எழுத்தே வரக் கூடாது என்று பிளான் பண்ணி எழுதியிருக்கிறார்கள்.
ஈழ விடுதலை இயக்கங்களின் வன்முறை. ஜனநாயக மறுப்பு என்பவற்றிற்கு எதிராக பெரும்பாலானவர்கள் வாய் மூடி மெளனம் சாதித்தனர். அது இறுதியில் மக்களையே கேடயமாக்கி கொன்றது வரைக்கும் கொண்டு போய் விட்டது. இன்று புதிய ஜனநாயக மக்கள் முன்ணணிக்கு எதிராக மூன்று வன்முறைச் சம்பவங்கள் காடையர்களால் மேற்கொள்ளப்பட்டன.
1.நோர்வேயில், அந்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி ஒன்றின் மாநாட்டின் போது புலி சார்பான அமைப்பு ஒன்று பங்கு பற்றிய போது, அவர்களின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்த தோழி ஒருவர், புலிப்பினாமி அமைப்பின் தலைவரான பைத்திய கலாநிதி ஒருவரால் மிரட்டப்பட்டார். இன்று அந்த பைத்தியக் கலாநிதி, புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள்தான் ஆனால் அதற்காக வழக்கு தொடர முடியாது, ஏனென்றால் புலித்தலைமை இறந்து விட்டது என்று பழி முழுவதையும் செத்தவர்கள் மேல் போட்டது மயிர்க்கூச்செறியும் திகில்கதைகளில் கூட வராத திடீர் திருப்பம்.
2. பாரிசில் முன்ணணி இதழை விற்றுக் கொண்டிருந்த தோழர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால் இதை முன்னணியின் புத்தகம் என்பதால் தடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாகவே அவர்களிற்கு புத்தகங்கள் என்றாலே அலர்ஜி தான்.
3. லண்டனில் தோழர் தாக்கப்பட்டது.
இக்காடைத்தனங்களை விட முற்போக்கு சக்திகள், மாற்று அரசியலிற்கான சமவெளிகள், பள்ளத்தாக்குகள், கைகாட்டிகள், திசைகாட்டிகள் என்று சொல்பவர்களின் மெளனமே அச்சமூட்டுவதாக இருக்கிறது. சந்திரமண்டலத்தில் மனித உரிமை மீறல் நடந்தாலும் விட மாட்டோம் என்பது போல கூச்சலிடும் இவர்கள் இச் சம்பவங்களை கண்டிக்காதது இவர்களின் சந்தர்ப்பவாதங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
கெட்டதிலும் சில நன்மைகள் நடந்திருக்கின்றன. தலைவர் வாழ்க, துரோகிகள் ஒழிக என்று கத்த மட்டும் தெரிந்த கூட்டத்திற்கு ஏகாதிபத்திய சார்பு, குறுந்தேசியம் என்பன கெட்ட வார்த்தைகள் என்று விளங்கத் தொடங்கியிருக்கிறது. மாற்று சக்திகள் என்று சொல்பவர்களின் அறிக்கைகள் வழக்கமாக ஒருவரிற்கும் விளங்காமல் இருக்கும். இந்த முறை அவர்களும், பாவம் மற்றவர்களும் வாசித்து விளங்கிக் கொள்ளட்டும் என்று இலகுவாக எழுதியிருக்கிறார்கள்.
நமக்கான வாழ்வை நாமே தீர்மானிக்க முடியும். வன்முறையாளர்களிற்கும். பயங்கரவாதிகளிற்கும் இடம் கொடுத்தால் நமது வாழ்வு தான் இருள் மண்டிப் போகும். கணியன் பூங்குன்றன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக. அழகாக இதைத் தான் கூறுகின்றான்.
விஜயகுமாரன
01/06/2011
விஜயகுமாரன்,
உங்கள் புதிய ஜனநாயகம் உருவாகியதே “என்னைக்கடந்து யாரும் அரசியல் பண்ணக்கூடாது” என்று புலிப் பாணியில் அதிரடி அறிக்கைவிட்ட அவலத்திலிருந்துதான். நீங்கள் கருத்தை எப்போதும் கருத்தால் எதிர்கொண்டதில்லை. அவதூறு, ஊடகவன்முறை, சேறடிப்பு, போன்ற எல்லாவற்றிறையும் இன்னுரு முகாமிலிருந்து ஆரம்பித்தவர்களே நீங்கள் தான். புலிக்கொடி புனிதத்திலிருந்து ஆரம்பித்தது போல உங்களுக்கும் ஒரு புனிதம் குறித்த புனைவு தேவைப்பட்டது. நீங்கள் புலிகளுக்கு எதிராகப் பேசுவது உங்களது குழுவாத இருப்பிற்காக மட்டுமே. நான்கு பேரும் ஒரு இணையத்தளமும் இருக்கும் உங்களுக்கே இவ்வளவு வன்மம் இருக்குமானால், புலிகளின் வன்மத்தைப் புரிந்துகொள்லலாம். உங்கள் பழமைவாத நிலப்பிரபுத்துவ குழுவாத வன்மம் புலிகளிலிருந்து கருத்தளவில் வேறுபட்டதல்ல. வேண்டுமானால் பருமனில் வேறுபட்டிருக்கலாம்.
நாகரிகமான எச்சரிக்கை !!!!
விஜயகுமாரின் கட்டுரையில் இருந்து வெளிப்படும் விடயம் ,புலிகள் மீண்டும் கருத்துச் சுதந்திரத்துக்கெதிராக தாக்குதல் நடத்த முற்பட்டனர் என்பதே !
நம்மைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல .கருத்தை ,கருத்தால் எதிர்கொள்ளும் துணிவும் கருத்துப்பலமும் (ஞானசூனியம் )புலிகளிடமோ,அல்லது புலித்தலைமையிடமோ,ஒருபோதும் இருந்ததில்லை. இருந்திருந்தால் ஒட்டு மொத்தமாக அவர்கள் அழிந்து போயிருக்க வாய்ப்பில்லை . இங்கே எனது கேள்வி என்னவெனில் ,பாசிசத்துக்கும்,இனவாதத்துக்கும் ,அடிமைத்தனத்துக்கும் எதிரான தேசபக்தர்களை ,இவர்கள் சிங்களவனுக்குப்பிறந்தவர்கள் என அடை மொழியிடுகின்றனர். புலம்பெயர் புலிப்பினாமிகளான இவர்கள் ,புலியின் சொத்தைப் பிரிப்பதில் குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் பேரினவாத அரசுக்குக் காட்டிக் கொடுத்தும் ,அரசோடு இணைந்தும் தேச பக்தர்களை வேட்டையாட ஆள்க்காட்டி வேலையையும் செய்கின்றீர்கள் .
அப்படிப் பார்த்தால் நீங்களும் தற்போதையஉங்கள் குறுந்தலைவர்களும் தானே சிங்களவனுக்கு பிறந்திருக்க வேண்டும் ,நான் உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன் ,ஏன் KP சிங்களவனுக்குப் பிறந்தவனாகத் தோணவில்லையா ? கருணாவைத் துரோகி என்று சொல்லும் வடக்குப் புலிகள்யாரும் அதே வாயால் KP என்பவரை துரோகி என்று சொல்வதில்லையே ? அதன் பின்னணியில் ஒரு அரசியல் போக்கு உங்களிடம் இருப்பது உண்மைதானே! அந்த அரசியல் தானே கருணா போன்றோரை துரோகியாக மாற்றியது.சாதாரண போராளிகளுக்கு சயனைட்டை வாய்க்குள் திணித்த உங்கள் தலைமை ,கடைசி நேரத்தில் அவர்கள் சயனைட்டைத் தின்னவில்லையே? அது துரோகமில்லையா?இப்படிப் பல கேள்விகளைக் கேட்க முடியும் .
ஆனால் உங்களுக்குத் தான் அது உறைப்பதில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் தேச பக்தர்கள் மானிட நேசம் கொண்டவர்களாகவும் ,ஜனநாயகத்துக்கான போராளிகளாகவும் இருப்பதன் பொருட்டே ,அவர்கள் பேரினவாததிற்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். உங்களைப் போன்று ஒட்டு மொத்த சமூகத்தையும் கொள்ளையடித்து ,சேர்த்த சொத்தைப் பாதுகாக்க பேரினவாதத்தின் மலவாசலை நக்குபவர்களல்ல அவர்கள். தேச பக்தர்கள் மீது உங்கள் அடாவடி தொடர்ந்தால்,மக்களை ஒருங்கிணைத்து திருப்பித் தாக்கி உங்களை அடக்குவது தவிர்க்க முடியாததாகி விடும். இது ஒரு நாகரிகமான எச்சரிக்கை !!!!
இலக்கியா
09/06/11
ஜனநாயகம் என்பதும், கருத்துரிமை என்பதும் நாம் வசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஆயுதங்கள் அல்ல. அவற்றை சரியான திசை நோக்கி இயங்கவைப்பதற்கு சமூகத்தின் முன்னணி சக்திகள் முற்படலாம். நீங்கள் உங்கள் இருப்பிற்காகப் பேசும் ஜனநாயகமும் கருத்துரிமையும், அவதூறுகளும் ஆபத்தானவை. ஒரு சிறிய உதாரணம்: மக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக மதங்களின் பிற்போக்குத் சிந்தனையில் கட்டுண்டுள்ளார்கள். மதங்களின் பெயரால் சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்துத்துவாவின் வர்ணாச்சிரம அமைப்பு மனிதவிரோதமானது. அதற்கு எதிராக முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் போராட வேண்டும் என்பது உண்மையே. அதற்காக, கோவில் திருவிளாவில் நின்று சிவபெருமான் துரோகி, முருகன் கொலைகாரன் என்று பிரசுரம் வினியோகித்து அடிவாங்கினால் அது வெறும் “ஸ்டண்ட்”. அதேவேளை மக்களை மதங்களுக்கு எதிராக அரசியல் மயப்படுத்தி வென்றெடுப்பது என்பது சமூகப் பற்றுள்ளவனின் செயன்முறை.
இதே போலத்தான், 30 வருடப் புலிகளின் அடிப்படை வாதச் சிந்தனைக்குள் சிக்குண்டிருக்கும் சமூகத்தை வென்றெடுப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் உங்களிடம் இல்லை. அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்றும் மக்கள் பற்றையும் மனிதாபிமானத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் ஒரு வினாடி கூட சிந்தித்திருக்க மாட்டீர்கள்.
சில குறிப்பான சூழ்நிலைகளில் சமூகம் அதன் புறத் தாக்கங்களால் குறித்த சிந்தனை வழிக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக, அடிப்படைவாத முஸ்லீம்கள்; பிரான்சின் புறநகர் பகுதிகளில் வாழும் உதிரிப்பாட்டாளிகள் போன்றவர்கள். இவர்களை எதிரிகளாகக் கருதாமல் வென்றெடுப்பது எப்படி என்பதை அந்த நாடுகளில் உருவாகும் முற்போக்கு இயக்கங்கள் விவாதங்களை நடத்துகின்றன. நீங்களோ வேறானவர்கள். அவர்களை ஆத்திரப்படுத்தி அன்னியப்பட்டு அதனூடாக “ஸ்டன்ட்” அரசியல் செய்ய முற்படுவீர்கள். இதனை தவறி யாரும் விமர்சித்தால் அவர்கள் மீது சேறடிப்பீர்கள். அவதூறு செய்வீர்கள்.
உங்களை விமர்சித்து அதன்பின்னார் உங்கள் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக உங்களிலிருந்து விலகியிருபது எமது நேரத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்தலாம் என்ற்ய் எண்ணும் உங்களைத் தெரிந்த சிலருள் நானும் ஒருவன்.
இன்று புலிக்கொடி குறித்து விமர்சிப்பதை மக்கள் கேட்கக் கூடாது எனக் கருதுபவர்கள் 30 வருடமாக இதையே நடைமுறைப்படுத்தினார்கள். இதனால் சமூகத்தின் பெரும்பான்மைப் பகுதி சின்ந்தனைப் பிறழ்விற்கு உட்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில்..
-இவ்வாறான சிந்தனைப் பிறழ்வைற்கு உட்பட்ட மனிதக்கூட்டத்தை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்வார்கள்.
– சமூகப் பற்றற்ரவர்கள் அவர்களை மேலும் அன்னியப்படுத்தி முரண்பாடுகளை ஆழப்படுத்துவார்கள்.
– மக்கள் பற்றுள்ளவர்கள் அந்தச் சமூகத்தை சரியான சிந்தனை முறை நோக்கி வென்றெடுக்க முயல்வார்கள்.
தமிழரை தமிழருக்கு பிடிப்பதில்லை இதுதான் நம்து பிரச்சனை.அனஸ் எனும் ப்த்திரிகையாளனை மதிக்க தெரியவில்லை என்றால நாமெல்லாம் நம்மை பத்திரிகையாளன் என சொல்லிக் கொள்ள தகுதி அற்றோர்.
இனியொருவிற்கு.
நான் எழுதிய கட்டுரையை யாரோ உங்களிற்கு பின்னூட்டமாக அனுப்பி இருக்கிறார்கள். நான் அனுப்பியதாக நினைத்து தங்களது பொன்னான அறிவுரைகளை என்னை நோக்கி பொழிந்து தங்களது பெறுமதியான நேரத்தை மண்ணாக்க வேண்டாம் என்று தண்டனிட்டு கேட்டு கொள்கிறேன்.
அன்பும் பட்சமும் கொண்ட
விஜயகுமாரன்.
புலிக்கொடி தேவையா ? இல்லையா ? என்று வன்னி மக்களிடம் கேட்டு பாருங்கள்.
நல்ல விடை கிடைக்கும்.
அன்பானவரே,நான் என்றைக்குமே வன்முறைக் கலாசாரத்தை ஆதரித்தவனல்ல,ஆதரிப்பவனுமல்ல,ஆதரிக்கப் போபவனுமல்ல.”அந்த” ஊடகவியலாளருக்கு எச்சரிக்கை விடுத்ததை நான் ஆதரிக்கவில்லை.வக்காலத்து வாங்கவுமில்லை.இது ஒரு சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்றே நான் சொல்ல வந்தேன்.எவருக்காகவும்,(அது புலிகளாயிருந்தாலென்ன,வேறும் ஆயுதம் தாங்கி எங்கள் உரிமைக்காகப் போராடிய இயக்கங்களாக இருந்தாலென்ன) எனக்குச் சரியென்று பட்டதை பட்டவர்த்தனமாக விமர்சிப்பவன் நான்!இன்று வரை நான் யாருக்கும் இடைஞ்சல் கொடுத்ததுமில்லை!எனக்கு யாரும் இடைஞ்சல் ஏற்படுத்தியதுமில்லை! விவாதமென்று என்னிடம் யாரும் வந்ததுமில்லை.கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது,எல்லோரும் சுதந்திர மனிதர்கள்.இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை!இத்துடன் முடித்துக் கொள்வோம்,நன்றி,வணக்கம்!
தீபத்தின் இந்த ஊடகவியலாளன் பதிவுகள்-என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து வந்தவர். புலி வியாபாரம் கொடி கட்டிப் பறந்த நேரங்களில் அதனோடு ஒத்து ஓடிக் கொண்டிருந்தவரே. தமிழ் மக்கள் மத்தியில் பாசிச சூழல் நன்கு செழித்து வளரும் வண்ணம் பணியாற்றி இன்று அதே பாசிசத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது எதிர்பார்த்த ஒன்றே. புலிகள் வெகு துரம் போய் விட்டார்கள். அவர்களை அவ்வாறு கொண்டு போய் விட்டதே இப்படிப்பட்டவர்கள் தான். பல லட்சம மக்களின் வாழ்கையோடு
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமது சோற்றுக்காக விளையாடி வந்துள்ளார்கள். மக்கள் அதை அனுபவித்து விட்டார்கள். அனசும் தப்ப முடியாது.
ஒரு ஊடகவியளானன் தான் பணியாற்றும்நிறுவனத்தில் எவ்வளவு தூரம் ஆளுமை செலுத்த முடியும் என்பது யாருமறியாதல்ல. அனஸ் என்ற ஊடகவியளாளன் தீபம் என்ற ஊடகநிறுவனம் இடும் கட்டளைக்கேற்ப தான்நிகழ்சிகளைநடத்த முடியுமென்பதை புரிந்து கொள்ளுதல் முக்கியம். கமிழர் மத்தியில் ஆரோக்கியமான விவாதங்கள் முன்ன்ரடுக்கபடுவது குறைவு இப்படியான விவாதங்கள் மூலம் பல போலிகள் மூக்குடைக்க படுவார்கள் என்பதால் முளையிலேயே கிள்ளிவிட சிலர் துடிக்கிறார்கள்.
“// அனஸ் என்ற ஊடகவியலாளனின் ஜனநாயகத்தை வன்முறை மூலம் அழிக்க முயலும் கோழைகளை நான் செத்துப்போகும் வரை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்//” இவை உங்கள் வசனங்கள். எழுத்தில் யாராலும் வெட்டி விழுத்தமுடியும். எதுவும் செய்கையில் இருக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளரின் ஜனநாயக சுதந்திரதிற்காக உயிரையும் விட தயாராக இருக்கும் நீங்கள் “தராக்கி ” சிவராம் போல் ஈழத்திலிருந்து சிங்களவனின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக எழுதித் தள்ளியிருக்க வேண்டும். செய்கையும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். எழுத்தில் வீரம் யாருக்கும் வரும்..அனஸ் என்ற தனி நபர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாதென்பதை அதிர்வு சொல்லக் கூடாது என்கின்றீர்கள். 100% ஒத்துக்கொள்கின்றேன். அனசின் கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரையும்(வெறும் எழுத்தில்) விடத் துணியும் நீங்கள் அதிர்வு என்ன செய்ய வேண்டும் என்னசெய்யக் கூடாது என்று சொல்வது, “உபதேசம் மற்றவர்களுக்குத்தான் உனக்கும் எனக்கும் இல்லை கண்ணே” என்பதுபோல் தெரிகின்றது. அனசின் கருத்துச் சுதந்திரதிற்காக பேசினீர்களோ இல்லையோ அதிர்வை தாக்குவது உங்கள் முக்கிய நோக்கம் என்பது தெளிவாகின்றது. அனஸ் போல இதயச்சந்திரனும் உடகவியலாளர்தானே. இதயச்சந்திரன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவர் ஒரு சக ஊடகவியலாளர் என்ற மரியாதையை கூட கொடுக்கத் தெரியாத அனஸ் அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தொடர்பை “நேரம் முடிந்துவிட்டது” என்ற நொண்டிச் சாட்டுடன் நிகழ்ச்சியை ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே முடித்தது ஏனோ?. அதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கே முகத்தில் அடித்ததுபோல் இருந்ததே. இதயச்சந்திரனுக்கு எப்படி இருந்திருக்கும். ஊடக சுதந்திரம் பேசும் நீங்கள் இந்த அவமரியாதையைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே.!.இதிலிருந்து, உங்கள் நோக்கம் ஊடக சனநாயகத்துக்காக பேசுவதுதான் என்பதுபோல் எனக்குப் படவில்லை. இது ஒரு கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லும் அனஸ் இதயச்சந்திரனின் கருத்தை பரிமாறவிடாததேனோ?ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்படும்பொழுது அதற்கான நியாயப்பாட்டை சொல்லவிடவேண்டும். குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே இருக்க வேண்டும் என்று இவர் ஏன் விரும்புகின்றார்?
“//தமிழ் தேசியத்தை கேள்விக்களமாக்க நீங்கள் யார்?” என்ற மிரட்டலின் பின்னால் கொச்சயான இனவாதப் பின்னூட்டங்கள் பதியப்பட்டுள்ளன.//” இவைகள் உங்கள் கை விரல்கள் மூலம் உருவான திருவாசகங்கள்..ஐயா நாவலனே! இங்கே இனவாதம் எங்கே இருக்கின்றது ?. எனக்குப் புரியவில்லை. இல்லாத ஒன்றை நீங்களே உருவாக்கி ஊது ஊது என்று ஊதி பூதாகரமாக்கி பழியை வேறு யார் மீதாவது போட்டுவிட்டு கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி அனாயாசமாக இணையங்களிலும் தொலைக் காட்சிகளிலும் வந்து விளாசித் தல்லுவீர்களாக்கும். இது நல்ல பிழைப்புத்தான்..பிறகு..தேசியத்தைப் பற்றியெல்லாம் கதைப்பிங்கலாம்..
புலிக் கொடி என்பது தனிமனிதனுக்கு சொந்தமானதல்ல. ஆண்ட தமிழரின் அடையாளமது. இமையத்தில் மட்டும் பறந்ததல்ல அந்தக் கொடி. இந்து மகா சமுத்திரத்தின் கரையோரங்களிலுள்ள அத்தனைத் தீவுகளிலும் பறந்தது இந்தப் புலிக் கொடி. கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக கன்னா பின்னா என்று கண்டதையும் கேட்டு வைக்கக் கூடாது. ஆயிரமாயிரமாண்டுகலாகப் பறந்தப் புலிக்கொடியைப் பார்த்து, தமிழீழப் புலிகளுடன் உங்களுக்கு முரண்பாடு உண்டென்பதட்காக, இந்தக் கொடி எப்படி தமிழர் தேசியக் கொடியாகலாம், இந்த உரிமையை யார் கொடுத்தது என்று கேட்பது இவர்தான் எந்தந்தையா என்று ஒரு தாயைப் பார்த்துக் கேட்பதுபோல். புலிக்கொடி வாதம் என்பதெல்லாம் வீன்விதண்டாவாதமாகப்படுகின்றது எனக்கு.(இது என் கருத்துச் சுதந்திரம்).சிங்களவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லும் நீங்கள் ( அப்படி வாழ விரும்பும் நீங்கள் சிங்களவனுடனேயே வாழாமல் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை) சிங்கக் கொடிதான் தூக்குவேன் என்று அடம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை.. புலி ஆதரவாளர்கள் புலியைப் பற்றி தினம் தினம் பேசுகின்றார்களோ இல்லையோ, புலி எதிப்பாளர்கள் தினம் தினம் புலி என்ற நாமத்தை தங்கள் இணையங்களில் உச்சரித்து உச்சரித்தே தங்கள் வயிறு வளர்க்கிறார்கள். அதாவது புலிகள் பெயரை உச்சரித்தே மகிந்தர் அரசியல் நடத்துவதுபோல்.., தமிழர் நன்றாக வாழவேண்டுமென்றுதானே தம் உதிரம் சிந்தினர் நம் மாவீரர். அந்தத் தமிழரில் நீங்களும் அடக்கம்தானே..ஏதோ எழுதித் தள்ளி பிழைப்பு நடத்துங்கள்..
Gowrie,
நீங்கள் இதயச்சந்திரன் என்ற ஊடகவியலாளரை முதலில் கேழுங்கள் உங்களை பேசவிடாது தடுத்த அனஸ் என்ற ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடலாமா அல்லது அதற்கு மேலே சென்று ஏதாவது தண்டனை கொடுக்கலாமா என்று அவா் நிச்சயமாக இதற்கு உடன்படமாட்டார் என்றே நம்புகிறேன். பேசவிடாமல் தடுக்கின்றார் என்றால் அவா் தோற்றுப்போக நேருகிறதல்லவா அவ்வளவும் விபரம் தெரிந்த பார்வையாளா்களுக்கு போதுமல்லவா?
இதற்குப்போய் முட்டாள்தனமாக வன்முறையை கையிலெடுப்பதும் அதற்கு நியாயம் கற்பிக்க முயல்வதும் நாம் இன்னும் இருட்டுக்குகையைவிட்டு வெளியே வரவில்லை என்பதை காட்டவில்லையா?
வன்முறையை நாம் கையில் வைத்துக்கொண்டு உலகைப்பார்த்து வாருங்கள் பாருங்கள் சிங்கள பேரினவாதிகள் புரியும் கொடுமையை என்றால் அது எடுபடுமா இதைத்தான் நாவலன் அவா்கள் இங்கே குறிப்பிடுகிறாரேயன்றி வேறு எதுவுமில்லை என்பதே எனது வாதம்
எனது குடும்பங்களிலும் மாவீரா்கள் உண்டு அவா்களை இங்கே இழுத்து கொச்சைப்படுத்தாதீா்கள். இந்த புலிக்கொடியின் கீழ்தான் அவா்களும் வீரமரணம் எய்தினார்கள் ஆனால் சிலரோ அவா்களை களங்கப்படுத்தி சரணடைந்ததும் இதே புலிக்கொடியின்கீழ்தான் என்பதுதான் வேதனை.
தராக்கி ஒரு ஊடகவியளாளன் அல்ல .அவன் ராணுவ பயிற்சி பெற்ற கொலைகாரன். சில கொலைகளில்நேரடியாகவும் பல கொலைகளுக்கு உத்தரவிட்டவன். உமா கொலைக்கு காரண கர்த்தாக்களில் ஒருவன். இராணுவ ஆய்வு கட்டுரை எழுதுபவர்கள் ஊடவியளாளர்களாவார்களா?
சில தமிழனுக்கும் முழு சிங்களவனுக்கும் புரிகின்ற ஒரே மொழி புலிகளின் மொழி மட்டுமே. சும்மா நேரத்தையும் காலத்தையும் வீணாக்கி அலட்டாமல் ஆவதைப்பாருங்கள். அடி உதவுவதைப்போல……
காட்டில் பசித்தாலும் புல் தின்னாத புலிகளினம். தமிழர் பசிக்காவிடாலும்
தன்னினத்தை பசியாறும் இனம்.
தம்மினத்தை அவம்திப்பதாகவும் தம்மினத்திற்கு தமிழ்ரால் அவமான்ம் ஏற்படுகிறதென்றும்.காட்டுப் புலிகள் தமிழர் மீது வழ்க்குப் போடவேண்டும்
புலிகள் என்று சொல்லாமல் பயங்க்ரவாதத் தமிழர் என்பதே சரியாகும்.-துரை
தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவாத எந்த புலி சார் ,எதிர் கருத்துகளையும் முதலில் நிராகரிப்போம்.
இல்லை வைத்தேயாக வேண்டிய கட்டாயம் இருந்தால் எந்த விதத்தில் உதவும் என்று விளக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும்.
அடி உதவுவதைப்போல………- அது அந்த அடி அல்ல. உங.கள் கால்பாதம். உங்கள் கால்கள் தான் உங்களுக்கு உதவும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்கள் கால்கள் தான் உதவும். அடித்து உதைத்து புலி என்ன கண்டது? மகிந்தா என்ன அடைந்தார்/
அதில் ஒரு விஷேஷம் இருக்கிறது,கெளரி!இதயச்சந்திரன் புலம்பெயர் ஊடகங்களில் எழுதி வருபவர்!இரண்டொரு கிழமைக்கு முன்பதாக இந்தக் கேள்வி நேரம் நிகழ்ச்சி பற்றி(,வெளிப்படையாக அல்ல)ஒரு அச்சு ஊடகத்தில் எழுதியிருந்தார்!அந்த “ஒளி வீசும்”(நான் இதயச்சந்திரனிடமிருந்து திருடினேன்!)ஊடகம் கண்டு கொள்ளவில்லை,அல்லது புறம் தள்ளியது!இந்த நிகழ்ச்சியின் போது அழைப்புகளை இணைப்பவர் தெரியாமல் இணைப்பு (இதயச்சந்திரனுக்கு)கொடுத்து விட்டார் போலிருக்கிறது
கருணாநிதி என்று பெயர் வைப்பதினால் அவர்கள் ஒன்றும் கருணையின் பிறப்பிடங்களுமல்ல, தீபம் என்று பெயர் வைப்பதினால் மட்டும் அந்த தொலைக் காட்சி ஒளிபரப்பி இருட்டில் இருக்கும் விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போவதுமில்லை…சொல்லவரும் கருத்துக்களை இருட்டடிப்பு செய்யமுயலும் ஒரு தொலைக்காட்சியை ஒளிவீசும் தொலைக்காட்சி என்று இனிமேலும் அழைப்பது பொருத்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத்து..தீபம் என்று சொல்ல விரும்பாதோர் மூன்று தமிழெழுத்துத் தொலைக்காட்சி என்று கூட அழைக்கலாம்!!
எண்ணேய் இல்லாத தீபம் எரிய நிகழ்ச்சிகள் தேவை இதை நீங்கள்BBC இலேயே பார்க்கலாம் அதற்காக அனஸ் அவர்களது சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறீர்களே அதுதான் அசிங்கமாக இருக்கிறது அய்யா.
THAMILMARAN//
தமிழரை தமிழருக்கு பிடிப்பதில்லை இதுதான் நம்து பிரச்சனை.அனஸ் எனும் ப்த்திரிகையாளனை மதிக்க தெரியவில்லை என்றால நாமெல்லாம் நம்மை பத்திரிகையாளன் என சொல்லிக் கொள்ள தகுதி அற்றோர்.///அப்போ இதயச்சந்திரன் என்னும் பத்திரிகையாளனை “அவர்” மதித்தாரோ??????
நாமெல்லாம் தமிழர் எனும் பெருமை கொள்ளூம் காலம் நமக்கான விடிவும் வரும்.ஒன்றாய் இருப்போம் நம்மிடை ஒற்றூமை வளர்ப்போம்.இதயச் ச்ந்திரனும் அனஸூம் இனத்தால் தமிழர் குலத்தால் பத்திரிகையாளர் இடையே இந்த அதிர்வை இனங்கண்டு பிடிப்போம்.
அனசிற்கு இதயசந்திரன் விடயத்தில் அவர் தரப்புநியாயத்திற்கு சந்தர்பமளியுங்கள்
யோகா.சு!!!
நீங்கள் நிறையவே துடிக்கிறீர்கள் ஊடக தர்மத்தை பற்றி .
வாழ்த்துக்கள்.
ஏதோ இது தான் முதல் தடவை தமிழ் ஊடகங்களில் நடப்பது மாதிரியும் நாமெல்லாம் ஊடக தர்மத்தை பேணும் கருத்துரிமை காவலர்கள் போலும் நடிக்க வேண்டாம். இதே நிலமை தான் தலைவர் இறந்த செய்தி வந்த போது GTV கும் நடந்தது. மற்றும் புலி எதிர் கருத்துகள் சொல்ல முனையும் போது தமிழ் ஊடகங்களில் நடந்தது.ஏன் இன்று இப்போ கூட நடப்பது கூட அது தான்.
இந்த அனஸ் செய்தது தவறு என்று தான் வைத்துக்கொள்வோம் .அதை தட்டிக் கேட்கும் தகுதி உள்ளதாக
உரிமைகொருவோர் தாம் ஊடக தர்மத்தை, ஒரு
ஊடகவியளாலனை என்றும் காக்க முன்னின்றவர்கள் தான் என்பதை நிரூபிக்கட்டும்.
தம் கருத்து மட்டும் தான் சரி அது மட்டும் தான் விற்க்கப்படவேண்டும் என்று மட்டும் எண்ணுபவன் வியாபாரி,ஊடகவாதியல்ல.
வியாபாரிகளில் பலவிதம்: பரபரப்பு செய்திகள் from CARDIFF எழுதுவோர்,உள்ளை விட்டு அடிப்பார்,leningrad ,
stalingrad , பற்றி எழுதியோர். சீன இந்திய பூகோள மாற்றம் பற்றி எழுதியோர் ,புழுதி புழுதியாக எழுதியோர்
, உளவு யுத்தம் பற்றி எழுதிக்கொண்டே இருப்போர் என்று நிறையப் பேர் தமிழ் மக்களை ஏமாற்ற என்றே உள்ளார்கள், அவர்கள் இந்த அனசிட்கு எதிரான வன்முறையை எதிர்க்கவே மாட்டார்கள்.
ஒரு நாள் அவர்களிற்கும் இதே கதி தான்.
லும்பன்கள் குறுக்கு மறுக்கா ஓடி விளையாடுறாங்கள். பார்கவே சிரிப்பா இருக்கு. அவங்களுக்கும் பொயுது போக வேணாமே?
இந்த புலிக்கொடியை எதிர்பதன் காரண்ம் இது முன்னாள் புலிகளின் சின்னமாக இருப்பதல்ல.
அப்பாவி சிங்கள மக்களை கொன்ற அரக்க சினனம்
சரண்டைந்த சகோதர போராளிகளை கொன்ற சண்டாளர் சின்னம்
சிறுபான்மை முஸ்லிம் தேசியவினத்தை விரட்டியடித குறுந்தேசிய சின்னம்
மாற்று கருத்துடயோர் மற்றும் மக்கள் பிரதினிதிகளை கொன்ற கயவர் சின்னம்
சிறுவரை மூளை சலவை செய்து தற்கொலை களமனுப்பிய இழியவர் சின்னம்
தன் சொந்த மக்களையே கேடயமாக்கி தப்பியோடியவர்களை சுட்டு கொன்ற துரோகிகள் சின்னம்
அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொன்ற மூடர் சின்னம்
எதிரியிடம் சரணடைந்து போராளிகள அவமதித்த அவ்மான சின்னம்
இவ்வளவு கறைகளையும் கொண்ட புலிக்கொடிதான் தமிழரின் தேசிய கொடியென்றால் அது குற்ந்தேசிய வெறியரை தவிர வேறு யாராலும் ஏந்தபடாது.
/சரண்டைந்த சகோதர போராளிகளை கொன்ற சண்டாளர் சின்னம்/ மாற்று கருத்துடயோர் மற்றும் மக்கள் பிரதினிதிகளை கொன்ற கயவர் சின்னம்,எதிரியிடம் சரணடைந்து போராளிகள அவமதித்த அவ்மான சின்னம்./
மேற்கூறியவை பொதுவாகவே எல்லா ஆயுத அமைப்புகளிடமும் இருந்தது.
இவை புலிக்கு மட்டும் தான் இருந்தது என்று கூறி புலி மட்டும் தான் தமிழ் அமைப்புகளில் தவறு விட்டதென்று சொல்ல முனைவதும் தவறு.
தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவாத எந்த புலி சார் ,எதிர் கருத்துகளையும் முதலில் நிராகரிப்போம்.
இல்லை வைத்தேயாக வேண்டிய கட்டாயம் இருந்தால் எந்த விதத்தில் உதவும் என்று விளக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும்
ஆம் தேவன் நாம் ஒன்றாக இணைய வேண்டின் சிலவற்றை இழக்க வேண்டி வரும் அவற்றில் ஒன்றுதான் இந்த புலிகொடி..மற்றைய இயக்கங்கள் சனனாயக கோட்பாடுகளை அவர்கள் இராணுவத்தில் பேணியதாகநான் கூற வரவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் சின்னத்தை பொதுநிகழ்சிகளில் காவிவருவதுமில்லைதானே
ஆனல் அனஸ் என்ற ஊடகவியலாளனின் ஜனநாயகத்தை வன்முறை மூலம் அழிக்க முயலும் கோழைகளை நான் செத்துப்போகும் வரை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்.
நாவலன் அவர்களே தமிழரங்கம் ஆவண சுவடிகள் பதிப்பாளர் தங்களுக்கு மிக அருகில் வைத்து தாக்கபடநேர்ந்த போது அதுபற்றி களத்திலோ இணைய தளத்திலோ நீங்களும்
உங்கள் முன்னேறிய அணித்தோழர்களும் வாயை திறவாததன் காரண்ம் அனஸ் என்ற இந்த ஊடகவியளானை காப்பாற்றும்வரை உயிர் வாழவா?
சபா நாவலன் அதிர்வு இணையத்தை மாத்திரம் பார்த்தபின் இக்கட்டுரையை எழுதி இருப்பின் அவர் சொல்ல வந்த கருத்துக்கள் ஏற்புடையவை. அவர் தீபம் நிகழ்ச்சியை பார்த்த பின் எழுதியிருப்பாராயின் அவரின் கருத்துக்களின் இயங்கு விசை சமச்சீரற்ற திசைவெளியில் சென்று உருப்படியான பலனை தராமல் விடும். இருப்பினும் பின்னூட்டக் காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு ஒற்றைத்தலைவலிக் காரர்கள் ஒருகண்ணால் பார்ப்பதை போல் பதிலிறுக்க முடியாது. அதிர்வின் மிரட்டலை நானும் பார்த்தேன். தீபம் நிகழ்ச்சியில் நடந்த நாகரிகமற்ற ஊடகவியல் தர்மத்தை நான் பின்னூட்டக் காரர்களின் குறிப்புகளில் இருந்தே அறிகிறேன். சமச்சீரான விமர்சனம் என்பது தீபம், அதிர்வு என்பவற்றின் செய்தியை சமநிலையில் பார்த்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இரண்டுமே அபத்தமானவை. சபா நாவலன் அவர்களே! வாசகர்களின் நியாமான கேள்விகளுக்கு, அதிர்வு இணையம் குறித்த மிரட்டல் செய்திதான் எனது பேசுபொருள் எனச் சொல்லுவது சரியானது அல்ல. ஒருதவறை வைத்து இன்னொரு தவறை நியாயப் படுத்த முடியாது. இது நாவலனுக்கு மாத்திரம் அல்ல பின்னூட்டக் காரர்களுக்கும் பொருந்தும்.
நாம் அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு மிகவும் சரியானவர்களாகவும் பலமானவர்களாகவும் இருக்க வேண்டும். எமது சக்தியை விரயமாக்குவது பிரயோசனமில்லை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் பொறுமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கருத்துச் சொல்வதென்பது ஜனநாயக உரிமை. வேறு ஏதாவது உள் நோக்கதில் சொல்லப்படுகிறதா என்பதை அறிந்ததும் கோபம் கொண்டு கருத்துரைப்பதும் எமக்கல்ல எம்மினத்திற்கு தீங்கு. எமது சகோதரனோ எமது பிள்ளகளோ தவறானவராயின் வன்முறையை பிரயோகிப்போமா. நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு இலகுவாக கருத்துக்களை தெரிவிக்கிறோம். எம் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கனடாவிலிருந்து குரல் எழுவதும் நல்லது தான்!உண்மையில்,”புலிக்கொடி” பற்றிய விவாதம் இந்த ஒளிவீசும் தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சி மூலம்,தெளிவூட்டல் என்ற பெயரில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டிருக்கவே கூடாது.ஒரு ஊடகவியலாளன் மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டுமென விரும்புவதில் தவறிருக்க முடியாது.விவாதத்தில் பிரித்தானியாவில் உள்ள கள நிலை பற்றியே பேசப்பட்டது பிரித்தானியாவிலிருந்து ஒளி வீசும் அந்த ஊடகத்தின் குறித்த ஊடகவியலாளர்,மக்களுக்கு தெளிவூட்ட வேண்டுமென்று விரும்பினால்,பிரித்தானிய அரசுடன், ஒரு ஊடகத்தின் ஊடகவியலாளர் என்ற முறையில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நேர்காணல் மூலம் இந்த விடயத்தை தெளிவுபடுத்த முடியும்!நான்கு பேரை அழைத்து,அதுவும் தமிழர்களை அழைத்து தெளிவு பெறுவது எவ்வகையானது என்பது புரியவில்லை! யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா!!!! – யோகா.சு-
இதயசந்திரன் பாவம் ரொம்ப நல்லவர் ?, நடுநிலையாளரா? தமிழ் பத்திரிக்கை உலகில் எவனையும் நடுநிலையாளனாக சொல்லமுடியாது.இலங்கையிலும் இதே தான் நிலைமை.
அனஸ் தொடர்பை துண்டித்தார் என்றால் புரிந்துகொள்ள கூடியதே.
விட்டால், அவருக்கு தனியே ஒரு சானலை தான் உருவாக்க வேண்டும்.அவர் என்ன சொல்லுவார் என்பதும் அனஸ் அறிந்ததே.
நன்றீ.
வெக்ரோன் இலவச தொலைகாட்சி ஏன் நிறுத்தப்பட்டது
புலிக்கொடி தேவையா ? இல்லையா ? என்று வன்னி மக்களிடம் கேட்டு பாருங்கள்.
நல்ல விடை கிடைக்கும்.
இங்கே கென்டக்கி சிக்கன் சாப்ப்பிடுவர்களின் பிரச்னை வேறு …வன்னி மக்களின் பிரச்சனை வேறு..
இல்லையா தமிழ் மாறன் ?
பம்பலுக்கு புலிக்கொடி பிடித்தோரும் பம்மாத்துக்காரரும்தான் புலிக் கொடி பற்றீப் பேசுகிறார்கள்,புலிக்கொடி என்ன சுண்ணாம்பே வெத்திலயில தடவ? தலயைப் போட்டதோடே முடிஞ்சு போன அலுவல என்னத்துக்கும் இவை தொடர நினைக்கினம்.வைகோவும்,சீமானும் இன்னும் எங்கட உருத்திர குமாரும் இந்தக் குமருகளூக்கு எதையாவது செய்யலாமே அதை விட்டு விட்டு தலயும் வாலும் என்றால் என்னய்யா கத இது?
core point:
புலம் பெயர் நாடுகளில் புலி கொடி வேண்டுமா வேண்டாமா ” என்ற கருப்பொருள் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
“புலம் பெயர் நாடுகளில் புலி கொடி வேண்டுமா வேண்டாமா ” என்ற கருப்பொருள் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.”
வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்.தோற்று போனவர்கள் புதிய வழியை கண்டு பிடித்து எப்படி வெல்லலாம் என்று அறிய வேண்டும்.
முன்பு தமிழர் விடுதலை கூட்டணி தோற்றது .அதன் கொடிமறக்கப்பட்டது. பின் ஒரு இயக்கம் போராட்டத்தை நடாத்தி தோற்று போய் விட்டது.அந்த கொடியும் கை விடப்பட வேண்டியதே.ஏனென்றால் புலிகளின் ஆயுத போராட்டத்தை நாடு கடந்த ஐய்யாமார் கைவிட்டு விட்டதாக அறிவித்து விட்ட பின்னுமா இந்த லொள்ளு !கொழும்பில் இருந்து கொண்டு கே . பி ஐய்யா [ “புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர் “] ” இனி ஒரு போராட்டம் நடக்க விட மாட்டேன் என்கிறார் ”
படித்த மேதாவிகளே ! படிப்பு என்பது ஏட்டில் மட்டுமல்ல என்பது உங்களுக்கு இன்னுமா உறைக்கவில்லை? உங்களை கடவுளாலும் ??????
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக்காதீர்கள்.
இந்த ஊடகவியலாளக்கெதிரான முனைப்பிற்கு பின்னாலுள்ள வியாபார அரசியலும் ஒரு காரணம். தீபம் தொலைகாட்சிக்கு அரசியல் நோக்கில்லாதபடியால் அவர்களால் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க முடிகிறது. ஆனால் போட்டி ஊடகமான் ஜிரிவி அரசியல் நோக்கம் கொண்டதுடன் தீபம் தொலைகாட்சியின் சந்தாதாரர்களையும் தன் வசப்படுத்த அதிர்வுடன் நடத்திய சதி முயற்சி கே.பி ஜிரிவி அதிர்வு