உலமயமாதல் உருவாக்கிய அமைப்பியல் நெருக்கடி உலகின் பொருளாதார அரசியல் எல்லைகளை மறுபடி வெட்டி ஒட்டித் திருத்தியமைத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் புதிய நகர்வுகள், ஏக போக அரசுகளின் வெளியுறவு அரசியல் என்ற அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளகின்றன. அதிகார வர்க்கம் தன்னை மறுபடி ஒழுங்கமைத்துக்கொள்கிறது.
இந்த ஒழுங்கமைவின் நெரிசலில் நந்திக்கடலோரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் நசுங்கி மாண்டுபோனார்கள்.
அரேபிய நாடுகளில் ஏற்பட்ட மூலதன உருவாக்கமும் உள்ச்சுற்றும் அதன் அதிகார வடிவத்தில் மாற்றத்தைக் கோரி நின்றது. மக்கள் புரட்சியாக எழுச்சிபெற்ற இந்தச் சமூகத் தேவை சர்வாதிகாரத்தை குறைந்தபட்ச ஜனநாயக வடிவங்களாகப் பிரதியீடு செய்திருக்கிறது.
இதே வகையான உலக அசைவு தெற்காசியாவில் உருவாக்கிய மாற்றங்கள் இந்திய அரசை தென்னாசியத் துருவத்தின் வல்லரசாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. அமரிக்காவும் அதன் கூட்டணியில் ஐரோப்பாவும் என்ற ஒற்றைப்பரிமாண, ஒருதுருவ வல்லரசு என்ற ஒழுங்கமைவு காலவதியாகிப் போக புதிய துருவ வல்லரசுகள் உருவாகியுள்ளன.
இந்தியத் துருவ வல்லரசு ஏனைய துருவ வல்லரசுகளான சீன, ஐரோப்பா, அமரிக்கா, ரஷ்யா போன்றவற்றுடன் சமரச உறவைப் பேணிக்கொள்வதனூடாகவே உலகின் அதிகாரங்களைப் பங்கு போட்டுக்கொள்கிறது.
துருவ வல்லரசுகளிடையேயான முரண்பாடுகள் பத்தாண்டுகளின் முன்னர் காணப்பட்ட பகை முரண்பாடுகளாக இல்லை. முரண்பாடுகளை சமரசங்கள் ஆட்கொள்கின்றன. இந்த நிலையில், சீன-இந்திய முரண்பாடு என்பது வெறும் மிகைப்படுத்தல் மட்டுமே.
சரிந்து விழும் அமரிக்கப் பொருளாதாரத்தை ஒபாமா அரசு ஏற்றுமதி வர்த்தகத்தின் வழியாகச் சீர் செய்துகொண்டிருபதாக மார்தட்டிக்கொள்கிறது, சீன- இந்திய அரசுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம் நான்கு மடங்காக அதிகரித்திருப்ப்தாகக் கோடிட்டுக்காட்டுகிறது. ஆக, சீனாவைவும் இந்தியாவையும் தவிர்த்து அமரிக்கப் பொருளாதாரத்தின் இருப்புச் சாத்தியமற்றதாகிவிட்டது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் இனப்படுகொக்குத் தலைமை வகித்த ராஜபக்சவை ஆதரிக்க, படுகொலைகளை செயற்பாட்டுத்தளத்தில் நிகழ்த்திய சரத் போன்சேகாவிற்கு அமரிக்க அரசு வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தது. இவை வெறுமனே இந்திய சீன அரசுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்களுக்கான அரசியல் அழுத்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதி மட்டுமே.
அரேபிய நாடுகளில் உருவானது போன்ற மூலதனச் சுற்றை அங்கிருந்த சர்வாதிகாரிகள் கையகப்படுத்திக்கொண்டதன் மறு விளைவாக உருவான வறுமை மக்கள் எழுச்சியாக உருவெடுத்தது. அதே மூலதனத்தை விரிவுபடுத்த விரும்பிய மத்திய தரவர்க்கத்தின் மேலணிகள் எழுச்சியின் தலைமைப் பாத்திரத்தைக் கைப்பற்றிக்கொள்ள அமரிக்க, ஐரோப்பிய ஏகபோகங்கள் தமது அதிகாரத்தை நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றன.
துருவ வல்லரசாக இந்தியா நிலை மாற்றம் பெற ஆரம்பித்த கடந்த பத்தாண்டுகளில் இந்திய சமூக அமைப்பில் முரண்பாடுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. மாதம் 2000 டொலர்கள் வரை ஊதியம் பெறும் மத்தியதர வர்க்கத்தின் மேலணியின் உருவாக்கமும் மிகப்பெரும் வறுமைச் சமூகமும் எதிரெதிரான முரண்பட்ட சமூகங்களாக பிளவுபட்டுள்ளன.
பெரும்பாலும் முகாமைத்துவ வர்க்கமாக (managerial class) மேலெழுந்துள்ள இந்த மேலணிகள் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களின் குறைந்தபட்ச பண்புகளைக் கூடக் கொண்டிராத சமூகவிரோதக் கூறுகளைக் கொண்டுள்ளது. இன்றைய இந்திய அதிகாரவர்க்கம் இவர்களையும் இவர்களின் சமூகவிரோதக் கூறுகளையும் பிரதிநித்த்துவம் செய்கின்ற அபாயகரமான அரசியலை முன்வைக்கிறது.
இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நிகழ்ழ்சி நிரலோடு இணைந்து கொள்ள முறபடுகின்ற ஒவ்வொரு அரசியற் செயற்பாடும் இந்திய அதிகாரவர்க்கத்தின் சமூகவிரோதச் செயற்பாடுகளை மீண்டும் மக்கள் மீது திணிப்பதாகும். மீண்டும் அவலத்தையும், மரண ஓலத்தையும் கேட்பதற்கு இடப்படுகின்ற அத்திவாரமாகும்.
(இன்னும்வரும்…)
அழுதாலும் பிள்ள அவளே பெற வேண்டும் என்பது நினைவில் நிற்கும் முது மொழி.இந்தியாவோடு முண்டிக் கொண்டு நின்றதால்தான் நம்மவர் கப்பலில் ஓட்டை விழுந்து யாரும் காப்பாற்ற வராமல் கடலில் மூழ்கிப் போனது இனியாவது கண்ண மூடிக் கொண்டிராமல் திறந்து பார்த்தால் மட்டுமே நாம் நடக்கும் ஒழுங்கையில் தடக்காமல் நடக்க முடியும் எனவே இந்தியாதான் நம் துண மட்டுமல்ல தூணூம்.
தமிழ் மாறன், இந்தியா வல்லரசாகின்றதோ இல்லையோ இன்னும் 20 வருடங்களுக்கு இந்தியா எனும் சந்தையை பயன்படுத்தவும் தமது அரசியல் பொருளாதார சமநிலையை பேணிக்கொள்ளவும் மேற்குலகிற்கு இந்தியா ஒரு வரப்பிரசாதமாகும், ஆதலால் முள்ளிவாய்க்காலுக்குள் எப்படி தலைகாட்டமுடியாமல் போனதோ அதே நிலையைத்தான் மேற்குலகம் தொடரும் அதாவது இந்தியாவை மீறி இலங்கையில் தலையிடாது.
பலா் புலம்புவது போல இந்தியா உருவாக்கிய வங்காளதேசம் இந்தியாவின் அடிமையாகவா உள்ளது அது இந்தியாவை மிரட்டுவது போலல்லவா நடந்து கொள்கின்றது ஒரு தடவை அவா்கள் தயவால் ஒரு தீா்வை அடைந்துவிட்டால் பின்பு நமது தலைவிதியை நாமே பார்த்துக்கொண்டுவிடலாமல்லவா அப்படிப்பட்ட சந்தா்ப்பங்களை நழுவவிட்டுவிட்டு இப்போது தத்துவங்கள் பேசுவதால் எந்த இலாபமும் இல்லை. இந்தியாவை மீறி எந்த ஒரு வல்லரசும் இலங்கைத்தமிழா் விடயத்தில் தலையிடும் என்று நம்புபவா்கள் இன்னும் 30 வருடங்களை தொலைக்கப்போகின்றார்கள் என்றே அா்த்தமாகும்.
நான் உமது கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.
இந்தியாவின் துணையில் சவக்குழிகள் நிரம்பிவிட்டன, இனி அதற்குமேல் (நினைவு) தூண் கட்டவேண்டியதுதான் மிச்சம்.
இந்தியா எங்களிடம் நிரம்ப அன்பாம். பாருங்கள் ரெலோவைக் கொண்டு எங்களுக்கு மக்கள் அமைப்பெல்லாம் கட்டத் தொடங்கி விட்டதாம். தூண் கட்ட கொஞ்ச காலம் எடுக்குமாம். இன்னும் எவ்வளவோ அலுவல்கள் இருக்கிறதாம். தயாராக இருங்கள்.
எங்கட பிள்ளைகள் ரெடிமேட் தூணை தூக்கிக்கொண்டு வாறத்துக்குத்தான் நடையில டில்லிக்கு போயினம் அது தெரியுமோ உங்களுக்கு. நல்ல பாம்பு ஆடுதெண்டு மண்னுழிப் பாம்பும் ஆடிச்சாம்.
அமெரிக்காவை நம்பி பெற்ற தூண் எப்படிப்பட்டதோ??
நம்பி நம்பியே நம் மக்களை மரணகுழிகளில் தள்ளுகதற்கு ஆளானோம்……