எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருகும் பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக பிரித்தானியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன. பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஆதரவில் இடம்பெறும் தமிழர்களின் அனைத்துக் கட்சிகளின் பாரளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இழப்புக்களும் தியாகங்களுன் வலிகளும் வடுக்களும் நிறைந்த தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அனைத்துக் கட்சிகளும் வாக்குப் பொறுக்குவதற்காகப் பன்படும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான லீ ஸ்கொட் என்ற ஆளும் பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஈழத் தமிழர்கள் மீது பிறந்த அக்கறை ஓநாய்கள் ஆடுகள் நனைவதாக அழுவதைப் போன்றது. இவரது கட்சியின் ஆட்சியில் இனப்படுகொலை இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் மட்டுமல்ல ஆலோசனையும் வழங்கப்படது. கோத்தாபயவின் அவன்கார்ட் மரிடைம் என்ற தனியார் இராணுவச் சேவைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. கடந்த 30 வருடங்களாக பிரித்தானிய உளவுத்துறையும், அரசுகளும் இலங்கை அரசின் இனவழிப்பிற்கு பின்பலத்தை வழங்கி வந்தன.
இவர்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வாக்குக் கேட்கும் எம்.பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு ‘தமிழ்த்தேசியம்’ பேசினர். இதில் லீ ஸ்கொட் எம்.பி இலங்கையில் ஆட்சி மாறினாலும் அதே முகங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளன என்று ஒருபடி மேலே சென்று கவலையை வெளிப்படுத்தினார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவரது கட்சியே பின்னணியில் செயற்பட்டது என்பதைக் கூட மறைத்து தமிழர்களை முட்டாளாக்கியுள்ளார்.
இலட்சக்கணக்கான மக்களதும் போராளிகளதும் தியாகங்கள் கொடிய கொலைகாரர்கள் வாக்குப் பொறுக்குவதற்காகப் பயன்படுகிறது. இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதையும் இரத்தம் பெருக்கெடுக்கும் பாதுகாப்பற்ற பிரதேசங்களாக மாற்றிவரும் அரசியல்வாதிகளின் காலடியில் நமது இழப்புக்களையும் தியாகங்களையும் சமர்ப்பிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை வரலாற்றில் அழுக்கான பாத்திரம் வகிக்கின்றது. தமிழர்களை அதிகாரவர்க்கக்களின் அடிமைகள் என உலகிற்குக் கூறுகின்றது.
இதன் இன்னொரு பகுதியாகவே இலங்கைக்குச் சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் புலம்பெயர் நாடுகளில் இலங்கைப் பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியலில் மாற்றம் கொண்டுவரப்போவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத் தமிழர்கள் தமது வீரம்செறிந்த போராட்ட்த்தில் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் இன்னொருவனுக்கு அடிமையாக்குவதற்குப் பயன்படுத்தபடுகின்றது.
that is realy true