ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை பதவிப் பிரமாண செய்தி சேகரிப்புக்காக இலங்கை வரவிருந்த, அல்ஜெசீரா தொலைக்காட்சியின் மூன்று செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது.
அண்மையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி பல வீடியோ படங்களை அல்ஜெசீரா தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையிலேயே அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மூன்று செய்தியாளர்களுக்கு வீசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.