போராடி வாழும் வாழ்வுதனை
நினைவின் எச்சமாக்கி விட்டுப்
புலம் பெயரந்து சென்ற
தோழனே…
புலம் பெயர் தேசங்களில்
குளிரும் ஓய்வில்லா உழைப்பும்
வாட்டிவதைக்கிற சேதிகள் – உரத்துச்
சொல்லப்படுகிற போதும்..
அன்னியப்பட்ட வாழ்வின்
அபத்தங்கள் பற்றி அறிகிற போதும்
பிடுங்கெறியப்பட்ட வாழ்வின் அவலப்
புனைவுகளை வாசிக்கிற போதும்…
உன் சட்டைப்பையின் மூலையில் கிடக்கிற
டொலர் பற்றியதே என் சிந்தனை
அந்த ஒரு டொலர் – இங்கே
நூற்றி முப்பத்து மூன்று மடங்காகப் பெருகும் !
நூற்றி முப்பத்து மூன்று மடங்காகப் பெருகும் !
தோழனே
அற்புதமானது அந்த ஒரு டொலர் !
நாலு மணித்தியலாம் இணைய உலாவலாம்.
ஆறு நாள் பத்திரிகையை வாங்கி வாசிக்காலம்.
நாற்பது நிமிடம் கைப்பேசியில் உரையாடலாம்.
சஞ்சிகையொன்றை வாங்கி வைத்திருக்காலம்.
அலைந்து அலைந்து
களைத்துப் போகிற வேளையில்
கடலையைக் கொறித்த படியே
ஒரு பியர் அடிக்கலாம்.
இவ்வாறே அமைகிற
என் சின்னத்தனமான கனவுகள் நிறைவுறும்.
இவையெல்லாம்
உன்னால் கைவிடப்பட்டு
கவனிப்பாரற்றுக் கிடக்கிற அந்த ஒரு டொலரில்.
நான் எல்லாவற்றையும்
பொறுமையாய்க் கேட்டேன்.
நீயும் எல்லாவற்றையும்
பொறுமையாய் விசாரணை செய்
முடிவில்,
முடிந்தால்
அந்தப் பெறுமதி மிக்க டொலரைத் தேடியேடு.
அது பழுதுறா வண்ணம்
உன் தெருவில் கொட்டிக்கிடக்கிற
பனிக்கட்டித் துண்டொன்றுடன் இணைத்து
அனுப்பிவிடு.
என் விலாசம் வழமைப்படி.
வங்கி இலக்கமும் வழமைப்படி
எந்த மாற்றமின்றியே கிடக்கின்றன !
புலம்,நிலம் என்ற பாகுபாடின்றி எல்லோரும் கற்றறியவேண்டிய அற்ப்புதமான படைப்பு.மேலும் எழுதுங்கள் அன்பரே…வாழ்த்துகள்.
American Dollar they call it Green Backs. It is still a printed Note. In Canada it is coins and they call it Looney and Towney..
நன்றிகள்
மிகநல்ல கவிதை. பாராட்டுகள்
பாராட்டுக்கள் 1000 டொலர்(1000 பொன்னுக்குப் பதிலாக 1000 டொலர் கொஞ்சம் அதிகம் போல) 100 டொலர் பெறுமதியானவை..
பனியோடு அனுப்பு என்று பணிக்கப்பட்ட அந்த டொலர் இன்னும் அற்புதமாய் இருக்கிறதோ என்னவோ நானறியேன். ஆனால் தங்கள் கவி வரிகள் அற்புதமாய் இருக்கின்றன.