இந்தியாவின் மூன்று மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. அதில் அருணாச்சலப் பிரதேசமும் ஒன்று. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சில நாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் சென்றார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தலாய்லாமாவும் அருணாச்சலபிரதேசத்திற்குச் சென்றிருந்தார். சீனா கடந்த சில வருடங்களாக அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவுக்குச் சொந்தமானது என்று சொல்லிவருகிறது. மன்மோகனின் பயணம் குறீத்து, சீன
வெளியுறவு துறை அமைச்சக இணையதளத்தில் அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மா சாவ்சூ வெளியிட்டுள்ள செய்தியில்,இந்தியா, சீன அரசுகளுக்கு இடையை சுமூக உறவு வளர்ந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இந்திய தலைவர்கள் வருவது அமைதியை கெடுத்துவிடும். சீனாவுக்கு கவலை தரும் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் விசாரித்து வருகிறோம் என்றார். அதுவல்லாமலும் அருணாச்சலப் பிரதேசத்தை அண்டிய சீனா எல்லையில் இந்தியா விமானப்படையை நிறுத்தியுள்ளது. இதற்கும் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.