அரியானா மாநிலத்தில் விவசாயிகள் ஊர்வலத்தில் பாஜக எம்.பி ஒருவரின் கார் மோதியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு போராடுகிறார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசமாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் காரை ஏற்றியதில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுக்க கொந்தளிப்பை உருவாக்கிய இந்த பிரச்சனையே ஓயாத நிலையில் அரியானாவில் மீண்டும் ஒரு கார் தாக்குதல் பாஜகவினரால் நடத்தபப்ட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநிலத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று உத்தரபிரதேச விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் என்ற இடத்தில் விவசாயிகள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அம்பாலா எம்.பி நயாப் சைனியின் கார் விவசாயிகள் பேரணிக்குள் மோத ஒரு விவசாயி படுகாயமடைந்தார் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பாஜகவினர் விவசாயிகள் மீது பயங்கரவாத தாக்குதல் போல தொடர் தாக்குதலை நடத்தி வருவதை அரியானா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.