இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளரும், நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் ஆசிரியருமான ஜகத் தர்மசிறி ஹெட்டியாராச்சி, அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் அடியாட்களினால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் வீட்டிக்கு நேற்றிரவு சென்ற இந்த அடியாட்கள் ‘நீ நாளைக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போகிறாயா’ என கூறியாறு தாக்கியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் ஹெட்டியாராச்சியின் கையடக்க தொலைபேசியையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் செயலாளர் திசாநாயக்க, மற்றும் அவரது சாரதி நுவான் ஆகியோர் தலைமையிலான அடியாட்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வாகண ஓட்டுணர்கள் சங்கப் பொருளாளர் கத்துக்குத்துக்கு இலக்காகி உள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இந்த தொழிற்சங்கவாதி கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறுகின்ற நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை அடுத்து பல பகுதிகளிலும் இனம்தெரியாதவர்கள் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.