பொது பல சேன என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பின் செயலாளரும், இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசு மற்றும் அமெரிக்கக் கூட்டணியால் தெரிவுசெய்யப்பட்டவருமான கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் முதல் இணையங்கள் வரை பதிவேற்றப்பட்டுள்ள இப் பௌத்த பயங்கரவாதியின் அருவருப்பான உரையை அனைவரும் பார்வையிடக் கூடிய நிலையில் உயர்மட்ட அரச அதிகாரி இவ்வாறு தெரிவிக்கிறார்.
ஒரு நாட்டின் ஊடகத்துறைப் பேச்சாளர் பொதுமக்கள் மத்தியில் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பேசுகிறார் என்பதே இதன் மறுபக்க உண்மை. காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் போது ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டியமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என மேலும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனூடாக இலங்கை பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடு என்பதைக் கூறுகிறார். போர்க்குற்றவாளிகள், பயங்கரவாதிகள், பல்தேசியக் கொலையாளிகள் ஆகியோரின் தங்குமடமாக ஒரு நாடு முழுவதும் மாற்றப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் போலிஸ் – இராணுவப் பாதுகாப்பு, தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகம் எனப்படும் அதிகாரவர்க்கத்தின் பாதுகாப்பு என்பவை இலங்கையில் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
That is not entirely true. It is nice to see him finally. I have been hearing a lot abvout him in the media. More time is needed fpr adjustments in the country..after war. 2009.r
Are all BCO folks nut cases like you or is it only the ones with the title of Dr like you and Arun Vincent. I feel ashamed to say me too is from that part of this world.