நேற்று அதிகாலை வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் நிமலரூபனின் உடலை அடையாளங்காட்டிப் பொறுப்பேற்குமாறு கூறி ஜீப்பில் ஏற்றி தென்பகுதியிலுள்ள ராகம வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
அவர்கள் ஜீப்பில் ஏற்றப்பட்ட உடனடியாகவே அவரது கைப்பேசி பொலிஸாரால் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது.
ராகமவில் மகனின் உடலை தாய் அடையாளங் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையை தாயாருக்குக் காட்டிய அதிகாரிகள், சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல முடியாது எனவும் இறுதிக் கிரியைகளை உடனடியாக கொழும்பில் செய்வதற்கு ஒப்புதல் தருமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அது தொடர்பான கடிதம் ஒன்றில் கையொப்பமிடுமாறும் தாயார் வற்புறுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில் கையொப்பமிடாவிட்டால் இதுதான் நடக்கும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தயாரை அடிப்பதற்கு கை ஓங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலின் மத்தியிலும் குறிப்பிட்ட ஆவணத்தில் கையொப்பமடுவதற்கு தாயார் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
தனது மகனின் கால்கள் உடைக்கப்பட்டிருப்பதையும், உடலின் பல பகுதிகளிலும் கடுமையான அடிகாயங்கள் இருப்பதையும் அவதானித்த அவர், மகனின் மரணத்துக்கு மார்படைப்பு காரணமல்ல எனத் தெரிவித்திருக்கின்றார்.
The Police are following standard procedure. The American Embassy had started making statements about the combatants still in custody. They all have to be released unconditionally like Sarath Fonseka. They are trying to down play the national priority. Otherwise this is going to cause further embarrassment and economic burden to the country.
தாயே,எம்மை மன்னித்துவிடு “முள்ளிவாய்க்கால் முடிவல்ல”என்பதன் அர்த்தம் இப்போதுதான் விழங்குகிறது.
கருவறை,சிறையறை,கடைசியில் கல்லறை வரை உன் மகனை சுமக்கிற தாயே எம்மை மனித்துவிடு.
சண்டை சாவை விட சமாதானத்தில் சாவுக்கு அதிக வலி உண்டு தாயே
சாந்தமும்,அமைதியும் என்ற வார்த்தைகளை விட வேறு ஒரு வக்கும் எங்களிடம் இல்லை தாயே
திறந்த கடிதத்திலும்,புத்தக வெளியீடுகளிலும் எம் புரச்சியாளர்கள் புடுங்குப்பட்டுகொண்டிருக்கிறார்கள், பொறு தாயே உன் கண்ணீருக்கும் ஒரு கதை கட்டாயம் அவர்கள் எழுதுவார்கள்….
no sri lanhan goverment human rights
இனியும் நாம் மெளனிப்பதில் அர்த்தம் உள்ளதா? அந்தத்தாயின் துயரத்தில் பங்குகொள்வோம்.
உலகத்தில் நம்பிக்கைகொண்டு போராடியபோது இனக்கலவரம் என்றார்கள்.
உலகத்தில் நம்பிக்கையில்லாது போராடியபோது பயங்கரவாதம் என்றார்கள்.
உலகத்தை வெறுத்துப் போராடுவோம் மாயா கணிப்பு தவறினாலும் தவறாது நிறைவேற்ற நவீன அறிவியல் உலகில் ஒரு தமிழன்தானும் இல்லையா.
ஏன் போராட்ட முறைகளை மாற்றிக் கொள்ளக்கூடாது. ‘கல்லோடு மண்தோன்றாக் கலத்து முன் தோன்றி கத்தியோடு களமிறங்கிய மூத்த குடி தலைகள்’ தங்கள் நலனுக்காக இல்லாமல் மக்கள் நலனுக்கான போராட்ட வழிமுறை ஒன்றை இன்னும் ஏன் முன்வைக்க முடியாமல் தவிக்கிறது?
எமது பலத்தைப் பலமாகவும் பலவீனத்தைப் பலவீனமாகவும் முன்வைத்து எம்மை சுய விமர்சனம் செய்துகொண்டு அறிவியல் பூர்வமாக உலக மக்களுக்கு எம்மை இனிமேல் நியாயமானவர்களக அறிமுகப்படுத்துவோம்.;;; Thanks நிவேதா நேசன்
https://inioru.com/?p=28995
யார் போராடினார்கள் ? யாருக்காக போராடினார்கள்? எப்படி போராடினார்கள்? ஏன் போராடினார்கள்?
ஏன் நாம் இதை விட மோசமாக எம் போராளிகளையே(?) கொல்லவில்லையா?
தவறு தான் .அரச படைகள் செய்வது தவறுதான் .சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்வது முழுக்க தவறு தான் . இந்த தவறுகள் தான் நமது போராட்டத்தின் முதற் புள்ளியே. இந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசிட்கெதிர் ஆகவே நாம் போராட முற்பட்டோம்.சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிராக போராட புறப்பட்ட நாம் எமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள நாம் எத்தனை சிவருபன்களை அடித்து, எரித்து கொன்றோம். எம்மில் தவறில்லையாயின், சிங்கள பௌத்த பேரினவாத அரசிலும் தவறில்லை .இது அதிகாரப் பசி செய்யும் வேலை, இதற்கு நாமும் விதிவிலக்கல்ல . நம் கையில் அதிகாரம் இருந்தபோதும் இதையே செய்தோம், கிடைத்திருந்தாலும் தொடர்ந்தும் செய்துமிருப்போம்.
அதிகாரத்தின் முன் மனித உரிமைகளிற்கு பெறுமதி பூச்சியமே .
அது பாட்டாளிவர்க்க தலைமயிலான அதிகாரத்திற்கும் பொருந்தும்.
முதலில் என்னை ,பின் நாம் இருக்கும் குடும்பத்தை,சமூகத்தை,பிராந்தியத்தை,அதன் பின் உலக அரசியலை தெளிவாக எமக்குள்ளாக பார்ப்போம். எமது பலத்தைப் பலமாகவும் பலவீனத்தைப் பலவீனமாகவும் முன்வைத்து எம்மை சுய விமர்சனம் செய்துகொண்டு அறிவியல் பூர்வமாக உலக மக்களுக்கு எம்மை இனிமேல் நியாயமானவர்களக அறிமுகப்படுத்துவோம்.;;; அதன் பின் எம் போராட்ட வழிமுறை பற்றி விவாதிப்போம் .. Thanks நிவேதா நேசன்
நிமலரூபா உன் இறப்பு பின்னே ஓர் பிறப்புண்டு
ஓ என் தோழனே
நீ செய்த குற்றம் ஒன்றுதான்
காவலர்களின் சப்பாத்துக் கால்களை
நக்க மறுத்த உன் நெஞ்சில்
நூறாயிரம் முறை
ஓங்கி …ஓங்கி மிதித்தன
ஆதிக்கக் கால்கள்
உன் உடல் பிழிந்து
உயிரைத் தோண்டி எடுத்துத்
தெருவில் எறிந்தனர் அவர்கள்
நேற்று நீ இட்ட கூக்குரலில்
வளைந்த சிறைக் கம்பிகளின்
நிழல் விழுந்த நிலத்தில்
உறைந்து கிடக்கிறது உன் குருதி
சிறையின் இருளின் முடக்குகளில்
எங்கோ
அப்பிக் கிடக்கிறது
உன் உயிர்
இருள் வடிந்து விடிகின்ற ஓர் பொழுதில்
உயிர் மடிந்து வீழ்ந்தாய் என் நண்பனே
மரணித்தாய் என் தோழனே நீ மரணித்தாய்
அனுராதபுரத்தில்;
உன் உடனிருந்த நண்பனை சித்திரவதை செய்ததும்,
மனிதக் கழிவூற்றி மண்டியிடச் சொன்னதும்- உன்
காதை அடைந்ததும் கனன்றேழுந்தாய் – தோழருடன்
காவலர் மூவரைச் சிறைப் பிடித்தாய்
சிறையிலிருந்து கொண்டு
சிறை மீட்கப் போரிட்டாய்
ஆயிரம் சிலுவைகளை நீ சுமந்து கொண்டு
அவனை அறைந்து வைத்த
ஆணியை பிடுங்கக் கரங் கொடுத்தாய்
என் போராளித் தோழனே!
மூன்றாண்டு கால அமைதிக்குப் பின்னால்
அதிகாரத்தின் முகங்களை நோக்கிச்
சுட்டுவிரல் நீட்டிய வீரனே!
மயங்கிக் கிடந்த உன்னைப்
படுகொலை செய்தனர் வீரர்கள்
பிணத்தைத் தூக்கித்
தூக்கில் போட்டு கொக்கரித்தனர் அவர்கள்
தோழனே நீ மரணித்தாய்
உன் காயங்களைத் தொட்டுத் தடவி,
முத்தமிட்டு, பெரு மூச்செறிந்து
குருதி படிந்த உன் கேசம் கோதி
ஐயோ மகனே என்று ஆர்பரித்து
அழுது தேற உன் அம்மாவுக்கும்
அனுமதி மறுக்கப்பட்டதடா
சுண்ணம் இடித்து சுற்றி நின்று
கொள்ளிதடி பிடித்து
எரிகின்ற நெருப்பிடையே
அசைகின்ற உன் உடல் பார்த்து
தேம்பி அழுது தெருவுக்கு
உன் பாடை எழுகின்ற போது;
ஓங்கி குரலுயர்த்தி
ஐயோ! என் செல்லத்தை எரிக்க வேண்டாம் என
பாடை பிடித்திழுத்து சுற்றம் மயங்கிச் சரிய……
மயானம் ஏகும் உன் உடல்
இல்லையடா உனக்கு இறுதி கிரியையும்
தோழனே உனக்கு இல்லை
அதற்கும் ஆணை வழங்கவில்லை நீதிமன்றம்
ஏனெனில்,
உன் இறப்புக்கு பின்னால்
ஓர் பிறப்பு உண்டு என்பதை
அதிகார பீடம் நன்கறியும் நண்பனே
என் போராளித் தோழனே!
நீ இறந்தாய்
ஆனால்
நீ சுமந்த நெருப்பின் வேர்களை
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
உள்ளங்களில் ஊன்றி விட்டுச் செல்கிறாய்
போய் வா என் தோழனே போய் வா
One Briigadier De Silva said it right that the Tamils should get out of the Minority Complex. There are so many Tamil lawyers in Sri Lanka. There was a time that only my brother ventured to go with the late lawyer politician M. Sivasithamparam to see Kutty Mani at the Mahara prison. 1980 .
Sri you did not have to be descriminated when you went to college. You did not get descriminated because you didn’t know the Sing Lang, you choose to go to the us. It appears you don’t know what the minority mindset is and so is the Sing gent you’ve quoted. Unless you have felt hungry you don’t know what hunger is I guess ?
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளாது அநியாயத்தை தட்டிக்கேட்க முடியாது. அநியாயத்தை தட்டிக்கேட்பதற்கு தடைகளைத் தாண்டாது முடியாது. கர்னன் மானுடரில் உயர்ந்தவன், உத்தமன், தர்மதேவதையே போற்றும் ஒப்பற்ற தர்மதயாளன். ஆனாலும் கெளரவரை அழிப்பதற்கு தடையாக இருந்தானென்று கொன்றுவிடும்படி அன்று அதிகாரம் கட்டளையிட்டது, அதை இன்றும் கீதா உபதேசமென்று மக்கள் தலையில்வைத்து கூத்தாடுகிறார்கள். சிறார்களுக்கும் பாடமாக பள்ளியிலும் புகட்டுகிறார்கள். அதனையே இன்றைய மனிதன் பின்பற்றியபோது பின்பற்றிய மனிதனைப் பின்னி எடுக்கிறார்கள், அறிவியல் உலகத்தின் அதிபுத்திசாலிகள்.
நவீன அறிவியல் உலகில் ஒரு தமிழன்தானும் இல்லையா??
இல்லை!!!
கேள்வியின் நாயகனே , உம்மிடமே பதிலும் உள்ளது.
“இன்றும் கீதா உபதேசமென்று தலையில்வைத்து கூத்தாடும்”தமிழன்
நவீன அறிவியல் உள்ள தமிழனை தேடுவது முரண் நகையன்றோ.
Philip it is a Single Sri Lanka Citizenship. That means rights, previlages and responsibilities. Police is checking checking whether a person has individual criminal record or not. What happened in East Pakistan in 1971 did not happen here. I do had a good life because my father is a hard worker. I also like to confine myself to Batticaloa the future provincial capital and the Sengunthar community. There is a national problem that is brewing and that needs outside help. Indiana, USA. 1964.
Karikalan the Human Rights Commission in Geneva is a one time experience for Sri Lanka. India voting against Sri Lanka is actually of no use to the Sri Lankan Tamils.
மன்னிக்கவேண்டும் தேவன் இது நகைச்சுவைக்கும், விதண்டாவாதத்திற்கும் அப்பாற்பட்ட ஆதங்கம். புரிந்துகொள்ள முடியாவிட்டால் புண்படுத்தாமல் இருப்பது நல்லது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் பாடல் தந்த படிப்பினை கொண்டு எழுதப்பட்டதே தவிர, நகைச்சுவைக்காக எழுதப்பட்டதல்ல. கையில் கிடைத்த பூமாலையை பிய்த்தெறிந்த பலனை இன்று எல்லோருமே அனுபவிக்கிறோம். இதுவரை தூற்றியது போதும். தூற்றுவதும் நல்லதை பெறுவதற்கே. என்று தேற்றமடைந்து அங்கு விளைந்த நல்லவைகளை மக்களுக்கும் உணர்த்தி விடிவைத்தேடுங்கள்.
Mahendra you have mentioned the famous poet Bharathy. You are going back to Tamil Nadu, India. They need a special department in their state government if they really want to help the Sri Lankan Tamils solve their problems here. Big brother hegemony is counter productive. They and we must know how to work the existing system for our own good..
தூற்றுவதும் நல்லதை பெறுவதற்கே, அங்கு விளைந்த நல்லவைகளை மக்களுக்கும் உணர்த்தி விடிவைத்தேடுங்கள்.//
மக்களுக்கு
உணர்த்த வேண்டியவை /உணர்த்த கூடியவை :
1.
அதிகாரத்தின் முன் மனித உரிமைகளிற்கு பெறுமதி பூச்சியமே.
2.
முதலில் என்னை ,பின் நாம் இருக்கும் குடும்பத்தை,சமூகத்தை,பிராந்தியத்தை,அதன் பின் உலக அரசியலை தெளிவாக எமக்குள்ளாக பார்ப்போம். எமது பலத்தைப் பலமாகவும் பலவீனத்தைப் பலவீனமாகவும் முன்வைத்து எம்மை சுய விமர்சனம் செய்துகொண்டு அறிவியல் பூர்வமாக உலக மக்களுக்கு எம்மை இனிமேல் நியாயமானவர்களக அறிமுகப்படுத்துவோம்.;;; அதன் பின் எம் போராட்ட வழிமுறை பற்றி விவாதிப்போம்.
இவை இரண்டையும் உணர்ந்துள்ளீர்கள் என்பதையிட்டு மகிழ்ச்சி Mahendra. இனி விடிவு தான்.
Thevan, this is new Sri Lanka – Shri Lanka. People from Point Pedro to Dondra Head are very de – sensitized by the violence of past 30 years. Dr. Ariyaratne is right, say something soothing.
Dr..Dr.. you are Dr in which field Dr?
why our Tamil Drs don’t come to the point Dr?
அவுரு ஒண்ணும் தமிழ் டாக்டர் இல்லப்பா, விவசாய பட்டதாரி. தமிழ் டாக்டரெல்லாம் இங்கிலீசு பேசுறாங்கப்பா. இதுல ஒரு பகிடி என்ன தெரியுமோ, ஊருல தமிழ் பேசுனவங்க எல்லாம் வெளினாட்டுல இன்னொரு தமிழன கண்டா இங்கிலீசுல கதைகிறாங்க, ஊருல இங்கிலீசு பேசுனவங்க தமிழ்ல கதைகிறாங்க. ஏன் எண்டுதான் புரியல்ல.
Thevan and Philip I got my Ph.D. in Life Sciences from the Indiana State University in USA in December 1994. I was born on December 27, 1950. I went to Peradeniya Campus in 1970. Sarath Fonseka was born on December 18, 1950 and he had joined the Army in 1970. I came back home in November 1997. I left in 1981. The Police, Army and STF had been mapping since then. They have recruited Brigadier Sarath Fonseka in 1999 at Vavuniya. All of us Sengunthars know that Sella Killi (Sathasivam Selvanayagam) did not die in the crossfire in July 1983. The State Funeral for the eleven soldiers was the biggest blunder. I do not know how to write in Tamil in this web site. I do not have a computer at home. I spend time in an Internet Cafe everyday. Just good hobby.
இடையில் மகிந்தாவுடன் ரணில்யுடன் பிரபாகரனும் கோப்பி குடித்த கதையையும் சொல்லியிருக்கலாம். மறந்து விட்டுடீர்கள் என நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்நேரத்தில் அதையும் பதிவிடவும். இதுவே கோழிக்கால் கடித்து தமிழீழக் கனவுகளுடன் இருப்பவர்களை
ஆசுவசப்படுத்தும். நன்றி கலாநிதி சிறீஸ்கந்தா அவர்களே.
நீர் மட்டும் என்ன காக்காய் காலா கடிச்சிட்டு இருக்கிறீர். அதுவும் சோசலிசம் பேசிட்டு முதலாளித்துவ நாட்டுல அந்த முதலாளித்துவத்த பாவிச்சு பணமும் சம்பாதித்துக்கொண்டு … யாருக்கு காணும் இங்க பீலா விடுறீர்.
thanks Dr Hobby
Guys I had an unusual experience. I want to write a book titled, Arasady to America. Gotha’s War, his book should evaporate to oblivion.