வவுனியா மாவட்டத்தின் நெலுக்குளத்தை சேர்ந்த கணேசன் நிர்மலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மரணச்சடங்கானது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக நடத்தப்படுமென்ற உறுதிமொழியை சட்டமா அதிபர் கேட்டுள்ளார்.
நிமலரூபனின் பெற்றோர் அவரின் உலை அடக்கம் செய்வதற்காக வவுனியாவுக்கு எடுத்துச் செல்வதற்காக தாக்கல் செய்துள்ள விண்ணப்பம், உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயக்க, நீதியரசர்கள் பி.ஏ. ரட்ணாயக்க, சந்திரா ஏக்கநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே, இந்த உறுதிமொழி கோரப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பொலிஸ் அதிகார பீடத்தின் அறிவுறுத்தல்களை பெறுவதற்கு சட்டமா அதிபர் சார்பில் தோன்றிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கால அவகாசம் கோரினார். இதை தொடர்ந்து இவ்விசாரணை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை எனக் கூறப்பட்ட நடவடிக்கையொன்றின்போது இராணுவத்தினாலும் விசேட அதிரடிப்படையினராலும் மூர்க்கத்தனமாக வவுனியா சிறையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் 31 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான நிமலரூபன், ராகம வைத்தியசாலையில் காயங்களுக்காக அனுமதிக்கப்பட்டு மரணமானதாக கூறப்பட்டுள்ளது.
நிமலரூபனின் உடலை ராமக பகுதியில் புதைக்க வேண்டுமென மஹர நீதவான் கட்டளையிட்டிருந்தார்.
நிமலரூபன் தமது ஒரேயொரு பிள்ளை எனவும் அவர் இரண்டரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்தார் எனவும் அவரின் பெற்றோர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் விற்பனை பிரதிநிதியாக தொழில்புரிந்த தமது மகனை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் நவம்பர் 05.2009 ஆம் திகதி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வவுனியா வேப்பங்குளத்தில் கைது செய்ததாகவும் பெற்றோர் மனுத்தக்களின் போது குறிப்பிட்டுள்ளனர்.
Anyone who watched the celebrations in the last three years about the war victory must know somethings. There are was no real fighting. He just kept on puling the Forward Defense Line. His final gamble the last stand collapsed. Now if the combatants have to be given a general amnesty and released without conditions like Sarath Fonseka. Otherwise, matters will reach the United Nations and cause further problems to the country.