அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் 25.10.2010 திங்கட்கிழமை நடாளாவிய ரீதியலான மூன்று மணித்தியாலய பணிப்பகிஷகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு முன்பாக ஒரு மணித்தியாலய சத்தியாக் கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சர் நாடு திரும்பியவுடன் பேச்சு வார்த்தைக்கான சந்தர்ப்பம் பெற்றுத் தரப்படும் என்ற உறுதியின் பேரில் அதற்கு வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுக்கு அழைத்து தீர்வைப் பெற்றுத் தரத் தவறும் பட்சத்தில் நடாளவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.