வரலாறு முழுவதும் ஒரு சிறுபான்மையினரை பிரதிநிதிப்படுத்தும் அரசாங்கங்கள் தமது அதிகாரத்தையும், இலாபங்களையும், வசதிகளையும் பாதுகாத்துக்கொள்ளுவதற்கு அடக்குமுறை அரச இயந்திரத்தையும், சமூக நிறுவனங்களையும் எப்போதும் சார்ந்துவந்துள்ளன.
கடந்த காலங்களில் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் அதிகார ஆளும் அரசாங்கங்கள் சுரண்டப்படும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்களுடைய அதிருப்தியை மதம்சார்ந்த வகுப்புவாத போட்டிகளாகவும், மோதல்களாகவும் மாற்றுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு மதவாத அமைப்புக்களுக்கு நிதி அளித்து ஆதரித்து வந்துள்ளன.
தாழ்த்தப்பட்டோரைத் தலித் அடையாளமிட்டு அவர்களை ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப்போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் நோக்கோடு தலித் அமைப்புக்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் என்ற வகையில் பணம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதிக பணத்தைப் பெறும் அரசு சாரா நிறுவனமாகக் கருத்தப்படுவது விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து மத வெறி அமைப்பு.
2000 ஆம் ஆண்டின் பின்னான புதிய மூன்று தசாப்தங்களும், அதாவது 2030 வரையான காலப்பகுதி வரைக்கும் மக்கள் போராட்டங்களுக்கான காலப்பகுதி என அமரிக்க உளவுத்துறை ஆராய்ச்சி மையம் கூட ஒத்துக்கொள்கிறது. இந்தக் காலப்பகுதியில் இப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான முதன்மையான தந்திரோபாயங்களில் ஒன்றாக அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன.
30 ஆயிரம் அப்பாவிகள் வரை போபால் நச்சுவாயுக் கசிவில் கொல்லப்பட்ட பின்னர் இந்திய அமரிக்க அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்ட சக்திகளின் பின்னார் அணிதிரள ஆரம்பித்தனர். இவர்களின் போராட்டங்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் சிறிய அளவிலான போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி மக்களின் உணர்வுகளைத் தணித்தன. இறுத்தியில் போபால் வாயுக் கசிவிற்குப் பொறுப்பானவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு மக்களும் உரிய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் அங்கிருந்த தன்னார்வ நிறுவனங்கள் அனைத்தும் அரசியலில் தலையிடுவது தமது கடமையல்ல எனக் கூறிப் பின்வாங்கிவிட்டனர்.
ஏன் இன்று இலங்கையில் உள்ள அந்நியநிதி உதவியால் செயற்படும் அரசுசாராத அமைப்புகள் எனப்படுவன மறைமுகமாக துயரம் விளைவிக்கும் அமைப்பு வடிவங்கள்தான். அவை பெரும் முற்போக்கான அமைப்புகள் போலநடிக்கும், ஆனால் இருக்கும் சமூக நிலைக்கு எதிரான சக்திகளை கலைக்க செயற்படும் இந்த வகை அமைப்புக்கள் உலகம் முழுக்க குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன. இன்று நாம் அனைத்து போராட்ட சக்திகளிலும், அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகள் மத்தியிலும் அவற்றை நாம் எதிர்கொள்வதால் அவற்றின் பாத்திரத்தை புரிந்துகொள்வது மிக மிக அவசியமாகின்றது.
என்ற அமைப்பு மட்டும் தான் இலங்கை அரசிற்கு எதிராக பேசிவருகின்ற அமைப்பு. ஜேர்மனிய அரசின் பணக் பணத்தில் இயங்கும் இவ்வமைப்பு இலங்கை அரசின் ஊழல் குறித்துப் பேசுகின்ற அளவிற்கு அதன் போர்க்குற்றங்கள், பேரினவாத அரசியல் ஆகியன குறித்துப் பேசுவதில்லை.
சமூக உணர்வுள்ள பல படித்த இளையோர் இவ்வமைப்புக்களை நோக்கி உள்வாங்கப்படுகின்றனர். அவர்கள் போராடுவதற்குப் பதில் சமூக சேவை என்ற பெயரில் இவ்வமைப்புக்க்ளோடு இணைந்து கொள்கின்றனர். மக்கள் சார்ந்த எதிர்ப்பியக்கங்கள் குறித்துச் சிந்திக்க கல்வியறிவுடைய யாரும் முன்வருவதில்லை. அவர்களெல்லாம் இவ்வமைப்புக்களில் இணைந்து தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் ஆடம்பர உலக நகரங்களிடும் செலவிடும் நிலைக்கு வந்துவிடுகின்ரனர்.
பல அமைப்புக்கள் பல குறிப்பான பிரச்சினைகளில் மக்களை நேர்மையாக திரட்டுகின்றன. ஆனால் இந்த அரசுசார்பில்லாத என்று சொல்கின்ற அரசுசார்ந்த அமைப்புகள் எம் மக்களின் உரிமைக்கான போராட்ட சக்திகளை போராட்டதிலிருந்து சுய உதவிப் பொருளாதார நடவடிக்கைக்கு திசை திருப்ப உணர்வுபூர்வமாச் செயல்படுகின்றன. பின் அதிகார அரசாங்கத்தின் தரகர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் பரவலாக இவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இன்று வடக்கு கிழக்கில் உள்ள பாதிக்கும் உட்பட்ட மக்களுக்கும் ஏன் மனிதகுலத்துக்குமே பெரிய சேவை செய்வதாக தனிநபர்கள் புகழாரம் சூட்டப்படுகின்றனர். இவை அடிமட்டத்தில் சமூகக்கூறில் இது என்ன உண்மையான விளைவை ஏற்படுத்துகின்றது என்பதை பொருத்தம் இல்லாத வகையில் ஊதிப் பெருப்பித்துக்காட்டுகின்றனர்.
மேற்கு நாடுகள் அறிமுகப்படுத்திய இந்த அடக்குமுறை கருத்தியலை, இன்று ஒடுக்கும் அரசுகள் நேரடியாகவே உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்துகின்றன. குறிப்பாக இலங்கையில் இது மிகத் தீவிரமாகவே நடைபெறுகிறது.
தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புகழ் பெற்ற நூலை எழுதிய சசங்க குணத்திலக என்பவர் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர். இவரின் ஆலோசனையின் பேரில் புலம் பெயர் நாடுகளில் வாழும் அரசியல் வியாபாரிகளும், முன்னை நாள் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கை அரசின் தன்னார்வ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கு இலங்கை அரசின் பெருந்தொகைப் பணமும் சலுகைகளும் கிடைக்கும் அதே வேளை புலம் பெயர் நாடுகளிலும் பணம் திரட்டிக்கொள்கின்றனர்.
தேசம் நெட் ஆசிரியர்களில் ஒருவரும் மகிந்த அரசின் ஆசிபெற்ரவருமான கொன்ச்டன்டைன்(Littte Aid,) மற்றும் முன்னைனாள் சர்வதேசியக் குற்ரவாளி கே.பி(Nerdo) ஆகியோர் நிறுவியிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள்குடும்பம், பொதுமக்கள், மேலும் அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலுமுள்ள உண்மையான அக்கறை கொண்ட மக்கள் போன்றோர்களிலிருந்து அறிவு ஜீவிகள் கொண்ட ஒரு பெரியகூட்டம் இவ்வாறு உருவாக்கப்படுகின்றது. இவர்கள் மூலம் இந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திட்டவட்டமான நன்மைகளை அளிக்கும் சில உண்மையான வளர்ச்சிப்பணிகளில் சில ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை நம்புமாறு செய்யப்படுகின்றது.
இயல்பாகவே பாதிக்கப்பட்ட மக்களின் பால் அக்கறைகொண்ட இந்த அறிவுஜீவிகளின் பிரிவுகள் எம் மக்களின் உரிமையின்பால் அக்கறை கண்டு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகள், முன்னால் போராளிகள், பொறுப்பாளர்கள் போன்றவர்கள் எல்லோரையும் இந்தப்பிரிவினர்கள் திட்டமிட்ட முறையில் இந்த நிறுவனங்களில் உள்வாங்குகின்றனர்.
இந்த தன்னார்வு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலர் நேர்மையானவர்களாகவும், உண்மையான சமூக சேவகர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நிறுவனங்கள் வேறு நோக்கத்திற்க்காகவும் வேலை செய்கின்றன என்பதை இவர்கள் உணர்வார்களா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த தன்னார்வு நிறுவனங்கள் ஆர்வம் மிக்க போராளிகள், புரட்சியாளர்கள், சமூக ஆவலர்கள் போன்றவர்களை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுடைய இயல்பான சமூக உணர்வுகளையும், அடிமட்டமக்கள் மேல் கொண்ட இயல்பான உணர்வையும் இவர்கள் சூழல் வெப்பம்மடைதல், பூமியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுதல், அடிமட்டமக்கள் பற்றிய ஆய்வுகள், கட்டுரைகள், ஆன்மிகம், மனஅமைதி என்ற குறுகிய வட்டத்திற்கான திட்டங்களை தீட்டி அவர்களை செயலிழக்க வைக்கின்றார்கள். இதற்காகவே இந்த அரசு சார்பு இல்லாத என்று சொல்கின்ற அரசு சார்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றன.
இருந்தும் இப்போதைய அரசின் மீது அவர்களுடைய அதிருப்தியை காட்டுகின்றார்கள். ஆனால் அதை எதிர்த்து போராடுவதில்லை. அதிகபட்சம் அதிலிருந்து விலகி நிற்கின்றார்கள். அனைத்து வகையான வன்முறைகளும் மோசமானவை என்ற போலியான கருத்தை அடிப்படையாக வைத்து உடைமையாளர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலுள்ள உண்மையான போராட்டத்தில் இவர்கள் நடுநிலைமை வகிக்கின்றார்கள். ஏன் சிலவேளை அரசாங்கத்தை எதிர்க்கும் அவர்கள் அதற்கு எதிரான கருத்தையோ, அல்லது முற்போக்கான ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையோ பார்ப்பதில்லை. ஆகவேதான் எம் சமூகக்கூறுகள் அளிக்கப்படுகின்றன என்பதை பார்க்காமல் இருக்கின்றார்கள். மேலும் இந்த நிறுவனங்களுக்காக வக்காலத்து வாங்குகின்றார்கள்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்த நிறுவனங்களிலிருந்து அவர்கள் ஏராளமான நிதிகளை பெறுவதால் அதன் நலன்களோடு மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணிகள் உடனடியுதவி போலிருந்தாலும் நீண்டகாலத்துக்கு பலவழிகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பதை பார்க்கவேண்டும். அதாவது:
1 ) போராட்டத்தை தவிர்ப்பதை அவர்கள் மிகவும் முக்கியமாகப் பார்க்கின்றார்கள். மருத்துவமனைகள், பாடசாலைகள், தொழில்பயிற்சி கூடங்கள், நுன்கடன் திட்டங்கள், சிறு உற்பத்திமையங்கள் போன்றவற்றை நடத்தும் வளர்ச்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். அதாவது அரசாங்கத்தால் வேண்டப்படும் அனைத்து வேலைகளையும் இந்த நிறுவனங்கள் செய்கின்றன.
அநீதிக்கு எதிராக மக்களை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்த உள்ளூர் செயல்வீரர்களும், புலம்பெயர் நாட்டு ஆவலர்களும் இந்த திட்டங்களாலும், வளர்ச்சித் திட்டங்களாலும் ஈர்க்கப்படுகின்றனர். அதற்கு சம்பளமும் கொடுக்கப்படுகின்றது. இந்த வகையில் அவர்களது போராட்டகுணம் அழிக்கப்படுகின்றது.
அவர்களது அடிப்படையான உரிமைப்பிரச்சனையின் முயற்சி திசை திருப்பப்படுகின்றது. இந்த சிறந்த பண்புகொண்ட மனிதர்கள் இவ்வாறு மந்தப்படுவதால் மக்கள் மத்தியில் எம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான செயலாக மாறிவிடுகின்றது. இதை இப்போது புலம் பெயர் நாடுகளில் அதிகம் பார்க்கலாம்.
2 )இந்த நிறுவனங்களின் வளர்ச்சி நடவடிக்கைகள் உலகநாடுகளின் வியாபாரத்துக்கு உதவியாக உள்ளன. இவர்களது முதலீடுகளாலும், சிறு வியாபாரங்களாலும் அழிவினால் வறுமையான, நலிந்த மக்கள் மத்தியில் சிறு உற்பத்தி மற்றும் கடன் பொருளாதாரம் சிறுசிறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும் இவ் நிறுவனங்கள் உலகவங்கி அல்லது அரசுடன் சேர்ந்து அவர்களின் திட்டங்களை நேரடியாக நடைமுறைப்படுத்துகின்றன.
3) இலங்கை அரசு புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களைத் தனது வட்டத்திற்குள் கொண்டு வரவும், அவர்களிடமிருந்து உருவாகும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கவும் தன்னார்வ நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றன. தவிறவும், புலம் பெயர் மக்கள் மத்தியில் அரசினூடாக மட்டுமே உதவிகள் வழங்க முடியும் என்ற கருத்தைப் பரவலாக்கி அரச செல்வாக்கில் இயங்கும் நிறுவனங்களை நோக்கி மக்களை உள்வாங்க முனைகின்றன.
ஆனால் இவர்களை மக்களின் உரிமையை நோக்கி போராட வைக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். ஆகவே இன்றைய கால கட்டடத்தில் அரசு உதவுயுடன் இயங்கும் அரசு சார்பில்லாத நிறுவனங்கள் பற்றி முழுமையான தேடலும் அவதானமும் எங்கள் மத்தியில் ஒரு தேவையான விடயமாகின்றது.
very correctly said. The government if want to siphon off monies, it is easy through these NGOs and welfare schemes which cannot be detected that easily by others
நம்மைச் சிந்திக்க வைக்கும் சிறப்பான கட்டுரை.
இதனை எழுதியவர் காலம் அரசியல் சூழல் குறித்த தெளிவில்லாமல் எழுதியிருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு புரட்சிகர அரசியல் போராட்டம் நிலைகொண்டிருக்கிற சூழலில் இவ்வாறான கணிப்புக்கள் சாியானதாக இருக்கலாம் முற்றிலும் படு மோசமான நிலையில் இருக்கும் போது அவர்களின் நல்ன்களை ஓரளவிலாவது புர்த்தி செய்ய விழையும் இவ்வாறான அரசுசாரா அமைப்புக்களை அரசியன் முகவர்கள் போன்று காட்ட முனைவது அடிப்படையிலேயே அறிவுக் குறைபாடொன்றின் விழைவுதான். அரசுசாரா நிறுவனங்கள் இன்றைய உலக ஒழுங்கில் ப்ல்வேறு பாத்திரங்களை ஆற்றி வருகின்றன என்பது உண்மையே அவற்றில் சில குறிப்பிட்ட சில மேற்கு அரசுகளின் நல்ன்களையும் பிரதிபலிக்கலாம் ஆனால் அதற்காக மக்களின் நல்ன்களுக்காக செயலாற்றும் எல்லா அமைப்புக்களையும் ஒரே தராசு கொண்டு அளவிடுவது பிழையானது. அரசு சாரா நிறுவனங்கள் தவிர்த்துச் சொல்ல முடியாதவை. தவிர இன்று இலங“கை அரசு பல அரசுசாரா நிறவனங்களை கட்டுப்படுத்தி வருகின்றது அவ்வாறாயின் அரசு கட்டுப்படுத்த விழையும் நிறுவனங்கள் எல்லாம் புரட்சிகர நிறுவனங்கள் என்றா அர்த்தம். அனைத்தையும் குறிப்பான சூழலில் வைத்து நோக்க வேண்டும். அவ்வாறில்லாது நோக்கும் போது ஆய்வு என்ற போில் அபத்தங்களே மிஞ்சும். இனியொருவில் வெளிவருகின்ற அனேகமான கட்டுரைகள் மேலோட்டமானவையாகவும் எழுந்தமானவையாகவுமே இருக்கின்றன.
பிள்ளயையும் கிள்ளீ தொட்டிலயும் ஆட்டுவது தான் இந்த தொண்டர்படை.வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் திரு மனோரன்ஞ்சிதம் அவரது கட்டுரை ஒரு நல்ல ஜேர்னலிஸ்ட்டிக்கான அடையாளம்.
சிலருக்குத் தங்கள் வயிற்றுப் பிழைப்புடன் சம்பந்தப் பட்ட விடயங்களைச் சொன்னால் தாங்க முடியாது தான்.
என்ன செய்வது!
தேவசொருபி அவர்களுக்கு !
இன்றைய கட்டத்தில் எல்லோருமே சிந்திக்கவேண்டிய விடயம்
இதுதாம் சரியான கட்டம், இப்ப இதை பற்றி சிந்திக்கவிட்டல் பின்
சிந்தித்து பலன் இல்லை . இன்னும் சிலவிடயக்கள் ..
1)இவர்களின் உதவி மக்கள்தொகையில் சிறுபிரிவினரையே சென்றடைகின்றது இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக
சமூதாயபிரிவினரிடையே போட்டியை ஏற்படுத்துகின்றது.இவர்கள் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் இடையில் மோதலை ஏற்படுத்தும் தீய வேறுபாடுகளையும் துண்டிவிடுகின்றது.
2 )இவர்கள் வெளிநாட்டு ,அல்லது அரசு நன்கொடையாளர்களின் விருப்பத்துக்குரிய வகையில் தமது முன்மொழிவுகளை
குறைந்ததொகையில் குறிப்பிடுவைப்பதின்மூலம் தம்மைபோன்ற பிறஅமைப்புகளுடன் போட்டிபோடுகின்றன . அதே நேரத்தில் தம்மால் கூடுதல் மக்களை திரட்டிக்கொள்ளமுடியும் என்று கூறுகின்றார்கள் .
இதன் விளைவாக இந்த நிறுவனங்களில் எண்ணிக்கை பெருகுகின்றது
இதனால் இன் நிறுவனங்கள் பதிக்கப்பட்டமக்களை குழுக்களாகவும்
உபகுழுக்களாகவும் பிரிக்கின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட சமூகத்த்தின் முழுத்தோற்றத்தையும் காணமுடியாதவாறு செய்துவிடுகின்றது .இது தான் இப்ப நடந்துகொண்டு இருக்கின்றது .
3 )இவ்வகை நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிபோடுவதால், இதை
அரசு தன்னுடைய நலனுக்கு முழுமையாக,இவர்களை கையாள்கின்றது, இதனால் இன் நிறுவனங்கள் அரசின் நலனையே சார்ந்திருக்கின்றன.
தன்னார்வு நிறுவன அதிகாரிகள் தமக்கு தாமே நியமித்துக்கொண்டவர்கள், இவர்களுடைய முதன்மையான கடமை
நிதியை வரவளைப்பதுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதுதான் .
நன்கொடையாளர்களிடம் ,பணக்காரர்களிடமும் இருந்து நிதியை
பெறுவதில் தான் இந்த அமைப்பாளர்களின் திறமை அடங்கியள்ளது
இவற்றை ஒட்டி நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் .
நன்றி மனோகரன்
தத்துவங்கள் எப்பவும் சிக்கலானவையே. ஏன் சிக்கலானவை என்றால் இது பெரும் பகுதியான பாமரமக்களுக்கு அன்றாடகாச்சிகளுக்கு புரிவதில்லை. இதை புரியவைப்பது அந்த சமூகத்தில் வளர்ந்திருக்கும் ஒரு சில நபர்களே. அந்த ஒரு சிலர் யார்…? முதாலித்துவ அமைப்பு முறை என்பது லாபநோக்கு அமைப்பு முறை இது காலத்தைதிற்கு காலம் காலாவதியாகும். ஆகும் போது முதாலித்துவம் அதற்காக தாம் சேர்த்துவைத்த சொத்துகளில் பெரும்பகுதியை (சிறுபகுதியென்றும் சொல்லலாம்) செலவிடும். அதற்காகா பிரச்சாரங்கள் உதவிகள் தொண்டு நிறுவங்களை எல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. வெள்ளம் அணையை உடைக்காத மாதிரி. அணையில் பொத்தல் விழுந்திருக்கிறது. அதற்கு மண்போட்டு நிறுத்துப் பார்ப்பதே இந்த உதவிநிறுவனம் பெயரில் வருகிற முதாலித்துவ பரோபகாரிகள் முழுமையாக அணை உடைபடும் போது….உலகப் பாட்டாளிகள் தமது கூடைமண்களை தம்பங்கிற்கு போட்டு தனியொரு சிலரின் வயல்களில் பாய்யாதவாறு தமது வயல்களுக்கு பாய்ச்சுவதற்கு………! உரிமை கோர வேண்டும்.
என்ன மாதிரி எவ்வளவு இலகுவாக விளங்கப்படுத்திவிட்டீர்கள். பாமர மக்களால் நிறைந்த இந்த சமூகத்திற்கு இவ்வளவு தூரம் அறிவில் வளர்ந்து இருக்கும் நீங்கள் ஒருவரே இந்த மனிடம் தேடிக்கொண்டு இருக்கும் மகாத்மா, புரட்சிவீரன்.
அதுசரி யார் அந்த அன்றாடகாச்சிகள்?
தேவ சொருபி நீங்கள் மக்களின் வயிற்றில் கத்தி சொருகுவது போலிருக்கிறது.
//இதனை எழுதியவர் காலம் அரசியல் சூழல் குறித்த தெளிவில்லாமல் எழுதியிருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு புரட்சிகர அரசியல் போராட்டம் நிலைகொண்டிருக்கிற சூழலில் இவ்வாறான கணிப்புக்கள் சாியானதாக இருக்கலாம்// புரட்சிகரப் போராட்டம் நிலைகொள்ள முடியாத சூழலில் தான் இவ்வாறான தன்னார்வ நிறுவனங்கள் நிலை கொள்கின்றன.
குழப்பமான சூழலைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்தி புரட்சியை நோக்கி முன்வரும் அரசியல் சக்திகளை திசை திருப்பிக்கொள்கின்றன. பங்களாதேஷ் இதற்கு நல்ல உதாரணம். இப்போது அங்கு வங்கிகள், தொலைத் தொடர்புச் சேவை, உடைகள், நெற்செய்கை, கணனிச் சேவையில் ஒரு பகுதி அனைத்துமே தன்னார்வ நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உலகத்திலேயே ஊழலும் சீரழிவும் மலிந்த நாடு பங்களாதேஷ் ஒன்று. போதைப்பொருள் மாபியாக்களிலிருந்து கொலை, கொள்ளை என்று அனைதும் அங்கு சர்வ சாதாரணம். இதற்கெல்லாம் தன்னார்வ நிறுவனங்கள் தான் அடிப்படைக் காரணம்.
//முற்றிலும் படு மோசமான நிலையில் இருக்கும் போது அவர்களின் நல்ன்களை ஓரளவிலாவது புர்த்தி செய்ய விழையும் இவ்வாறான அரசுசாரா அமைப்புக்களை அரசியன் முகவர்கள் போன்று காட்ட முனைவது அடிப்படையிலேயே அறிவுக் குறைபாடொன்றின் விழைவுதான்.//
வேடிக்கையாக இருக்கிறது! மக்களின் தேவையை ஓரளவு பூர்த்திசெய்வதாகக் காட்டிக்கொண்டு தமது எஜமானர்களின் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்கிறார்கள். அன்பரே, இப்படித்தான் நான் சொன்ன பங்களாதேஷில் கூட ஓரளவு பூர்த்தி செய்கிறோம் என்று 20 வர்ருடங்களின் முன்னர் கால்பதித்த இவர்கள் இன்றும் பூர்த்தி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். மக்களுக்கு ராலைப் போட்டுவிட்டு அவர்கள் சுறாவையல்லவா பிடித்துச் செல்கிறார்கள்?
இலங்கையில் அரசின் முகவர்கள் எப்படித் தொழிற்படுகிறார்கள் தெரியுமா? நாங்கள் ஒரு வேளையாவது சாப்பாடு தருகிறோம் என்ற ராலைப் போடுகிறார்கள் ஆனால் உரிமை பற்றிப் பேசக்கூடாது என்று சுறாவைப் பிடிக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இவையெல்லாம் புற்று நோய் போல வளர்ந்து செல்கிறது.
//அதற்காக மக்களின் நல்ன்களுக்காக செயலாற்றும் எல்லா அமைப்புக்களையும் ஒரே தராசு கொண்டு அளவிடுவது பிழையானது//
உங்களுக்குத் தெரிந்த ஒரு அரச சாரா நிறுவத்தையாவது மக்கள் சார்ந்து செய்ற்படுகிறது என்று பெயர் குறித்துக் கூறிங்கள் பார்க்கலாம். நான் சவால் விடுகிறேன். பகலில் விளக்குப் பிடித்துத் தேடினாலும் கிடைக்காது நண்பரே.
//அரசு சாரா நிறுவனங்கள் தவிர்த்துச் சொல்ல முடியாதவை.//
அரச அடக்குமுறையும் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையில் பாசிசமும் தான் தவிர்க்க முடியாதவை. அதற்காக அவர்களை ஆதரிக்கவா சொல்கிறீர்கள்.. வேடிக்கைதான் போங்கள்.
//இன்று இலங“கை அரசு பல அரசுசாரா நிறவனங்களை கட்டுப்படுத்தி வருகின்றது அவ்வாறாயின் அரசு கட்டுப்படுத்த விழையும் நிறுவனங்கள் எல்லாம் புரட்சிகர நிறுவனங்கள் என்றா அர்த்தம். //
இலங்கை அரசு புலிகளின் கருத்தை கொண்டவர்களையும் ஏன் சரத் பொன்சேகாவையும் கூடத்தான் கட்டுப்படுத்துகிறது. அவர்களையுமா நாம் புரட்சிக்காரர்கள் என்கிறோம்? அல்லவே. அவை அவர்களிடையேயான உள்முரண்பாடுகள். மேற்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுதான் அந்தத் தன்னார்வ நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
//அனைத்தையும் குறிப்பான சூழலில் வைத்து நோக்க வேண்டும். அவ்வாறில்லாது நோக்கும் போது ஆய்வு என்ற போில் அபத்தங்களே மிஞ்சும்.//
குறிப்பான சூழல் என்று சந்தர்ப்பவாத நிலையெடுக்கும் போது அருவருப்புத் தான் மிஞ்சும். கட்டுரையில் மிகக் குறிப்பாக தன்னார்வ நிறுவனங்களின் நவ-தாராளவாதச் சூழலிலான பங்கு குறித்து ஆராயப்படுகிறது. தவிர, இலங்கையில் குறிப்பான சூழல் தொட்டுச்செல்லப்படுகிறது.
//இனியொருவில் வெளிவருகின்ற அனேகமான கட்டுரைகள் மேலோட்டமானவையாகவும் எழுந்தமானவையாகவுமே இருக்கின்றன.//
ஆக, தன்னர்வ நிறுவனங்கள் குறித்து ஆழமான கருத்தை வாசகர்களுக்குக் கூற வேண்டிய பொறுப்பை நீங்கள் சிரசின் மேல் கொள்கிறீர்கள். ஆரம்பித்து வையுங்கள் விவாதிப்போம். ஆனால் ஆழமாக ….. இறுதியில் தனிப்பட்ட தாக்குதல் என்ற விரக்தியில் முடிக்காமல் தத்துவார்த்தப் பிரச்சனையை ஆழமாகச் சொல்லுங்கள் பார்ப்போம்.
போகிற போக்கில் இந்தக் கட்டுரையையும் படித்துப்பார்த்துவிட்டு மறுபடி வாருங்கள்.
https://inioru.com/?p=7893
“ஆக, தன்னர்வ நிறுவனங்கள் குறித்து ஆழமான கருத்தை வாசகர்களுக்குக் கூற வேண்டிய பொறுப்பை நீங்கள் சிரசின் மேல் கொள்கிறீர்கள். ஆரம்பித்து வையுங்கள் விவாதிப்போம்“ இன்றைய சூழலில் இலங்கையின் புரட்சிகர வாயப்புக்கள் எவ்வாறு சிறப்பாக உள்ளன. எந்தெந்த இடத்தில் புரட்சிகள் வெடிப்பதற்கான ஏதுவான சூழல் நிலவுகின்றது. இதற்கு தலைமை தாங்கப் போகின்றவர்கள் யார்? அவர்களது தற்போது ஈழத்தில் இருக்கின்றனரா அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனரா? அவர்களது குடும்பங்கள் எங்கிருக்கின்றன? அரசுசாரா நிறுவனங்கள் எல்லாவற்றையும் துரத்தி விடுவோம் பிறகு உருக்குலைந்து போன மக்களின் தேவைகளை ஓரளவிலாவது கவனிப்பதற்கான பொறுப்பை எடுக்கப் போகும் அந்த புரட்சிக் கொடையாளிகள் யார்? இவற்றுக்கெல்லாம் நீங்கள் மழுப்பாமல் கோட்பாடு பேசாமல் நேரடியாக பதில் சொல்லு வீர்களானால் உங்களுக்கு பதிலளிக்க நான் தயார்? ஆனால் ஒன்றை நாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மழுப்பாமல் பதிலளிக்க வேண்டும்.
தேவசொரூபி, இத்தனை கேள்விகளையும் கேட்ட நீங்களே இவற்றையெல்லாம் உள்ளடக்கி ஒரு விரிவான கட்டுரையொன்றை எளுதுங்களேன். உங்களின் இத்தனை கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியாமலா இப்படி சவால் விட்டுள்ளீர்கள்? அப்படி தலைமை தாங்க ஒருவருமில்லையென்றால் நான் தயார்! நீங்கள் உங்கள் கட்டுரையை எழுதிவிடுங்கள்.
தமிழர் தாயகத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் தமிழர்களை சிதைத்து அழிப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன. இவை பகுப்பாய்வு, புலனாய்வு போன்ற வேளைகளில் ஈடுபட்டன. வன்னியில் சேவாலங்கா, ZOA போன்ற நிறுவனங்களில் புலனாய்வு வேலையில் ஈடுபட்டன. இது புலிகளுக்கும் தெரியும் இருப்பினும் இவர்களை இனங்கண்டு அப்புறப் படுத்துவதில் புலிகளுக்கு என்ன தடை இருந்ததோ நானறியேன்!?. பரந்தனில் இருந்த ZOA நிறுவனத்தில் பணியாற்றிய பொறுப்புவாய்ந்த ஒரு பெண்மணி (கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர்) இலங்கை புலனாய்வு பிரிவை சார்ந்தவர் என அறியக் கிடைத்தது. அதே போன்று சேவா லங்காவின் பணிப் பாளர்களில் ஒருவர் (மலையாளி முல்லைத்தீவு பெண்மணி ஒருவரை திருமணம் செய்தவர்) புலிகளை மேயவும், மற்றும் பகுப்பாய்வு, புலனாய்வு என்பவற்றுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டார் என அறியக் கிடைகிறது.
எப்படி ராகவா உங்களால் மட்டும் இப்படியெல்லாம் முடிகிறது. புல்லாிக்க வைக்கின்றீர்களே! இவ்வளவு உளவுத் தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்கக் கூடியவராக இருப்பின் நீங்களும் ஒரு உளவு அமைப்பில்தானே வேலை செய்ய வேண்டும். அது எந்த உளவு அமைப்பு என்று செல்லம் கொஞ்சம் சொல்லுங்களன். நான் யாாிட்டயும் சொல்ல மாட்டன். இது எனது மெயில் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டால் இதற்குச் சொல்லுங்களன். vs37770@gmail.com
இது உளவுத் தகவல் இல்லையே!. உலகறிந்த உண்மை.இந்த குட்டி முதாலித்துவ போராட்டங்களை வளர்த்து விடுவதும் இறுதியில் பயன் படாதபோது அதை சிதைத்து அழித்துவிடுவதும் முதாலித்துவத்தின் கைவந்த கலையாயிற்றே! இதை அறிவதற்கு தேவசொரூபிக்கு இமெயில் தேவைப்படுகிறது.தமிழ்மக்களின் போராட்டம் மட்டுமல்ல.உலகின் அடக்கியொடுக்கப் பட்டபோராட்டங்களிலும் ராகவன் சொன்னவையே வெவ்வேறு மாதிரிகளில் நடந்து கொண்டிருக்கின்றன். தமிழன் என்கிற குண்டுசட்டியில் இருந்து வெளிவரும் போது தேவசொரூபியாலும் இதை கண்டு கொள்ள முடியும்.
உளவுத் தகவல்களை தம்பி சாதாரண நபர்களெல்லாம் அறிந்து கொள்ள முடியாது உளவுத் தகவல்கள் பொதுவாக கசிவது பிறிதொரு உளவு அமைப்புக்கள் மூலம்தான். ஊகங்கள் உளவு ஆகிவிடாது. இந்த சிறிய உண்மை கூடத் தொியா உம்மைப் போன்றவர்கள் உளவுத் தகவ்லகள் குறித்து பேசவது நகைச்சுவைக்குாிய ஒன்று. இந்த அர்த்த்தில்தான் ராகவன் போன்றவர்கள் எவ்வாறு இப்படியான புலிகளுக்கே தொியாத தகவல்களை எல்லாம் நுட்பமாக அறிந்து கொள்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பே! இந்த புரட்சி பற்றியும் இடதுராாித்துவம் பற்றியும் பேசபவர்கள் போதுவாகவே தங்களது வீழ்சிக்கு தங்களவில் காரணங்களை தேடுவதை விடுத்து மற்றவர்களின் சதியாயால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று சாதிப்பதுண்டு. இது அடிப்படையிலேயே ஒரு அறியாமைதான். பொதுவாக ஒரு அமைப்பின் வீழ்ச்சி ஒருவரது பலம் மற்றவாின் பலவீனம் ஆகயவற்றால்தான் சாத்தியப்படுவதுண்டு. உலக வரலாறு முழுவதும் இதுதான் உண்மை. ஆனால் நாம் மட்டும் வீழ்த்வுடன் மீசை மண்ணில் படவில்லை என்பது போன்று சி.ஜயே. றோ என்றெல்லாம் உளறத் தொடங்கிவிடுகிறோம். எங்களுக்குள் இருக்கும் இடைவெளிகள் குறித்து யோசிப்பதில்லை. ஒவ்வொரு சர்வதேச சக்திகளும் தங்களது நலனில் நின்றுதான் செயற்படுவார்கள் அதற்கான பல கட்டமைப்புக்களை அவர்கள“் ஏற்படுத்துவார்குள். இது நடந்து கொண்டுதான் இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து இலக்கை அடைந்தால்தான் வெற்றி. இல்லாவிட்டால் தலையில் துண்டை போட வேண்டியதுதான். எனவே உங்களைப் போன்றவர்கள் இனியாவது ஆழமாக யோசிக்கப் பழகுங்கள். கடந்த அறுபது வருட கால தமிழர் அரசியலால் ஏதாவது உருப்படியாக சாதிக்க முடியாமல் போனது. அதுவும் உளவுச் சதிதானா? முதலில் உங்களைப் பார்ப்போம் பிறகு வெளியில் இருப்போர் குறித்து உளவு பார்ப்போம்.
இந்த வகையில் பா
ர்த்தால் உமக்கு விளங்கும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது நீரா நானா என்று. ஒரு மௌஸ் கிடைத்துவிடுவதால் மட்டுமே தம்பி எல்லோரும் புரட்சியாளராகி விட முடியாது.
கொன்சன்ரைன் இப்படி தேசத்தில் கெகலியவின் காதல் பற்றி எழுதிவிட்டு எப்படி சிறிலங்காவுக்கு பயமில்லாமல் சென்று வருகிறார்? சந்தேகம் வருகுது இல்லையா?
Sri Lankan Minister & Defence Spokesman Keheliya Ramukwella Link to the LTTE? T.Constantine
Sri Lankan Government Defence Spokesman and Minister of Foreign Employment Promotion and Welfare Keheliya Ramukwella was interrogated by Sri Lankan Government Intelligence Unit in respect of his girl friend Janaki Vijeyaratne’s links/ connections in London. Miss. Janaki Vijeyaratne is very intimate to Minister. Kehaliya Ramukwella at present. This Miss. Janaki Vijeyaratne had been in the London as a student and Janaki was a prominent star in Sinhala cinema and also won many prizes in beauty contest.
Janaki worked as a Coordinator in the Sinhala Service of the Vectone Television during het stay in London. It is known that the Vectone Television which was prominent few years ago belongs to Mr. Baskaran. Mr. Baskaran a founder of “Gnanam Calling Card” and is one of the millionaire in Asia.
The methods Miss. Janaki used to contact with minister Keheliya Ramukwella is being interrogated by the Sri Lankan Government Intelligence Unit. The telephone conversation took place the nights between Miss. Janaki and Minister Keheliya Ramukwella was recorded and Minister Keheliya Ramukwella was contempt by the Sri Lankan President Mahinda Rakapaksa according to governing party sources.
It is remarkable that President Mahinda Rajapaksa has given comments to press on Minister Keheliya Ramukwella’s issue. According to latest information it is said that Minister Kehaliya Ramukwella has given assurance to the President that relationship with Miss. Janaki and him with top secret and under control.
At present Minister Kehaliya Ramukwella is most prominent person next to President Mahinha Rajapaksa.
கொண்டை இருப்பதால் ஒரு வசதி பின்னால் பார்ப்போர் கட்டோடு குழலாட ஆட…ஆட…என மயங்கிப்போய் அந்த மயக்கத்தில் தம்மையும் மறந்து போவர்.இதுதான் ஆடற்கலை.அகிலமே அடங்கும் போது ரம்புட்டான், மங்குஸ்தான் அடங்காதா.சிறீய உதவி போதும்.
யாரையும் குறை சொல்லக் கூடாது என்பது மட்டுமல்ல அப்படி சொல்லாமல் விடுவதும் தப்பே! கொண்ரன்றைனுக்கு அவரது கணணியில் தமிழ் எழுத வராது ஆனால் தமிழில் கட்டுரை எழுதுவார். தேசம்நெற்றில் மாக்ஸியம் தோற்றுப் போய்விட்டது. முதாலித்துவம் எல்லா மருத்துவங்களை மானிடபிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு விட்டது. இனியும் காணும் இருப்பவர்கள் எல்லாம் கீபோட்மாஸ்சிட்டுகள் என்பவரும் அவரே! அதற்கு பின்னால்
செய்வினை கோழிக்குஞ்சு மாதிரி தன்னைமறந்து திரிபவர் த.ஜெயபாலன். அன்று தெரியாத சுயரூபம் இன்று தெரிகிறது. இன்று இவர்கள் தங்கள் இணையத்தளத்தில் முஸ்லீங்களும் இந்துகளுக்கும் பெரியதொரு பிரிவினையை ஏற்படுத்துவத்தாக சில தமிழ்-முஸ்லீம் அற்பபுத்தி படைத்தவர்களால் நீண்ட கருத்து உரையாடல்களை விவாதம் என்கிற போர்வையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் தெரியவருவது என்ன வென்றால் தற்போதை பொருளாதார நெருக்கடியில் சர்வதேசபாட்டாளிமக்களை பிரிப்பதற்கு இனவாதத்தையோ மதவாதத்தையோ வெளிக்கொண்டு வருவது தான். இதன் ஒருபகுதியாகவே முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் என ஏகாதிபத்தியவாதிகளால் பெரியதொரு பிரச்சாரம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதையே முஸ்லீம்கள் இந்துகள் பிரச்சனையாக தேசம்நெற் முன்னெடுக்கிறது. இது சந்தேகம் இல்லாமல் என்.ஜி.யோக்களால் உதவிபெறும் நிர்வகிக்கப் பட்ட கூட்டமே! மில்லியன் கணக்காண காலவதியாகப் போகிற மருந்துகளை இலங்கைக்கு உதவி என்கிற பெயரில் அனுப்புகிற போதிலும்………
தேசம்நெற்றின் ஊடகசேவையும் காரூணியமும் அதன் ஏகாதிபத்திய விசுவாசக் கொள்கையும் பகிரங்கமாக அம்பலப்பட்டு நெருங்கி சின்னாபின்னப் படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கொண்சன்ரான்றையின் ஜெயபாலனைக் கெடுத்தாரா? அல்லது ஜெ.கொ..ரை கெடுத்தாரா? எதுவென்று புரியவில்லை. இதில் எள்ளுத்தான் எண்ணைக்கு காயுதாக இருந்தால் இந்த சோதியான வெள்ளை மனம் படைத்த நல்ல
உள்ளமான சோதிலிங்கத்திற்கு ஏன் இந்த வேலை? நாமே சிலவருடங்கள் கண்டுதான் குஷ்திபோட்டு பிரியவேண்டியதாயிற்று சோதிக்கு…? சகாப்தம் வேண்டுமா?……இன்னும்.
தமிழினத் தேசிய வளர்ச்சியை திட்டமிட்டு சின்னாபின்னப் படுத்த,’புலியெதிர்ப்பு’ என ஆரம்பித்து,”சின்ன உதவி”யுடன் தமிழர்களின் உள்ளக முரண்பாடுகளை(சாதி,மத,பிரதேச) ஊதிப் பெருக்கி,நன்றிப்பெருக்கால் யாழ் பல்கலைக் கழகத்தை பள்ளிக் கூடமாக்கியவர்களுக்கு,சிங்கள பவுத்த பேரினவாத அரசு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.
உலகில் துன்பத்தில் வாடும் மக்களுக்கு சுயநலமற்ற சேவை செய்யவென எந்த ஒரு தொண்டா் நிறுவனமும் இதுவரை இந்தப்பூமியில் இதுவரை உருவாக்கப்படவேயில்லை இதுதான் உண்மை.
லண்டனில் உள்ள கோவில்களில் அன்னதானம் கொடுக்கின்றபோது சில பிரித்தானிய மக்களும் அந்த அன்னதானத்தில் பங்குகொள்வதை பார்த்திருக்கிறேன் அது சுவையோ இல்லையோ இந்த உலகில் உணவு இலவசமாக கிடைக்கின்றதென்றால் அது அபூா்வமான விடயம்,அதாவது பேய்த்தன்மை கொண்ட முதலாளித்துவம் இலவசமாக எதையும் யாருக்கும் வழங்கும் வழமை கொண்டதல்ல எப்படி இந்த சா்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நன்மைகள் செய்ய முன்வருகின்றன என்றால் அவைகளின் பின்னே பயங்கர அரசியல்,மத,பொருளாதார அடிமைப்படுத்தலுக்கான திட்டம் மறைந்திருக்கும் ஆனால் சாதாரண சாமானியனால் அதை ஒருபோதும் உணரமுடியாது.
U.N.O விற்கு நிதியை வழங்கும் நாடுகளில் ஐக்கிய அமேரிக்கா 70 வீதமான நிதியை வழங்குகிறது,அப்படி வழங்கும் போது ஒரு பிச்சைக்கார நாட்டிற்கு நீதி கிடைப்பதற்கு அந்த நாடு விரும்பாவிட்டால் U.N.O என்ன செய்துவிடும் என்று ஒரு தடவை யோசித்துப்பாருங்கள்.
இருந்தாலும் தேவசொருபி கூறுவதுபோல் சிலவேளைகளில் காகம் இருக்க பனம் பழம் விழுந்துவிடுவதுண்டு அவா்கள் தங்கள் நலன்கழுக்காக அலைகின்ற வேளையில் பெரிய மீனைப்பிடிப்பதற்காக சிறிய மீனை விட்டுவிடலாம் அதுதான் அவா் கூறுகின்ற நம்புகின்ற இலாபம்.
இரண்டாம் உலக யுத்தகாலத்தில் அமேரிக்கா இத்தாலிக்குள் நுழைய பயன்படுத்தியது இத்தாலியின் மாபியா கும்பலைத்தான் என்பது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அரசுகள் தங்கள் நலன்களுக்காக மாபியாக்களை இன்றும் பயன்படுத்துகின்றன உலகம் இந்த வகையில் நிறுவப்பட்டிருப்பது நமக்கு புதுமையான விடயம்தான்.
என்.ஜி.ஓக்கள் என்ன நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டுச் செயற்படுகின்றனர் என்பது பற்றித் தெரியாத மாதிரிப் பாசங்கு செய்கிறவர்களைநம்ப வைப்பது கடினம்.
ஏனெனில் அது அவர்களது சீவணோபயத்தை மிரட்டுகிற விடயம்.
அரசின் நோக்கங்கள் நல்லவை அல்ல, அதனால் என்.ஜி.ஓ. நோக்கங்கள்நல்லவையாகி விடா.
தேவசொருபிக்கு என்ன பதிலை கொடுப்பது என்று எனக்கு விளங்கவில்லை அதனால் பேசாமல் இருந்துவிட்டேன். அவரது ஈமெயில் கூட கூட இரகசிய குறியீடு போலவே தென்பட்டது (சும்மா தமாசுக்குதான் ). ஆனால் சந்திரன் ராஜா தக்க பதிலை மிகச் சரியாக தந்திருக்கிறார், அவருக்கு எனது நன்றிகள்.
“ராகவன் புலிகளுக்கே தெரியாத தகவல்களை எல்லாம் நுட்பமாக அறிந்து கொள்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பே!”
** புலிகளுக்கே தெரியாது என்பது தவறு உதாரணமாக புலிகளின் ஒரு பிரிவினர் சிங்கள தொழிலார்களை கட்டுமான தேவைக்காக வன்னியில் வேலைக்கு அமர்த்தியிருந்தனர் இதனை புலிகளின் புலனாய்வு பிரிவு எதிர்த்து இருந்தது ஆனால் தலைவரின் செல்வாக்கை பயன் படுத்தி மற்றைய அணியினர் சிங்கள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். புலிகளின் உயர் பாதுகாப்பு பிரதேசங்களில் கூட சிங்களவர்கள் வேலை செய்தனர். குறிப்பாக புலிகளின் இரணைமடு விமானப் படைத்தளத்தின் வெளிச்சுற்று மண் அணையை நிர்மாணித்த இயந்திர இயக்குனர்கள் சிங்களவர்கள். சிங்களவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் புலனாய்வு வேலைக்கு சுலபம் என புலிகள் காரணம் கூறினர். புலிகளின் புலனாய்வு உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த சிங்களவர்களுடன் மாத்தறை வரை சென்றனர் ஆனால் அங்கு அவர்களுக்கு இலங்கை புலனாய்வுதுறை ஆப்பு வைத்தது மதுவையும் மாதுவையும் தாராளமாகவே வழங்கி தமது கைக்குள் போட்டுகொண்டது. இவர்களில் பலர் இரட்டை முகவர்களாக மாறினர். எனது அவதானம் ஒன்றையும் இங்கு பதிவு செய்கின்றேன் புலிகளின் புலனாய்வு உறுப்பினர்கள் புத்தளம் நீர்கொழும்பு போற்ற இடங்களில் பல்வேறு ரூபங்களில் ஊடுருவி இருந்தனர். குறிப்பாக லொறி டிரைவர், ஊழியர்கள், வியாபாரிகள், பஸ் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் போன்றோராக அவ்வழியால் நாம் பிரயாணம் செய்யும் போது மச்சான் இஞ்ச பெரிசின்ற ஐயன்னா திரியுதடா சன்று சொல்லுவார்கள் சாதாரண சாமானியர்கள் கூட இதனை கண்டு பிடிக்க முடியுமானால் இலங்கை புலனாய்வு சும்மாவா இருந்து இருக்கும். புத்தளம் நீர்கொழும்பு போன்ற இடங்களில் பின்னாளில் இவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப் பட்டனர் என்பதை அனைவரும் பத்திரிக்கை வாயிலாக அறிந்தது இருப்பீர்கள்.
ஆக இந்த வழிமுறைகளில் மாத்திரம் அல்ல கிடைக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளிலும் இலங்கை இந்திய புலனாய்வு துறை ஊடுருவி புலிகள் மேயப் பட்டனர். இதில் NGO களுக்கு கணிசமான பங்கு உண்டு. இந்த ஆராச்சிகள் எமக்கு படிப்பினையாக அமைவதற்கு மாத்திரம் வேண்டுமே ஒழிய வீண் விவாதத்திற்கு அல்ல. வில்பத்து காடுகளில் அமெரிக்க ராணுவம் ஆழ ஊடுருவி தாக்கும் பயிற்சி நெறியை ஆரம்பிக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரியும் போதே அதற்கு எந்த முற்காப்பும் எடுக்காதவர்கள் புலிகள் பின்னாளில் புலிகளின் அனைத்து முக்கிய கேந்திர நிலையங்களும் ஆழ ஊடுருவல் படையால் தாக்கி கைப்பற்ற பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள் புலிகளுக்கே அதிரடித்தாக்குதலை படையினர் நாடாத்தினார்கள்.
இருப்பினும் தேவசொருபி இங்கு மிக அழகாக, தெளிவாக குறிப்பிடுவது போல் “தங்களது வீழ்சிக்கு தங்களவில் காரணங்களை தேடுவதை விடுத்து மற்றவர்களின் சதியாயால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று சாதிப்பதுண்டு. இது அடிப்படையிலேயே ஒரு அறியாமைதான். பொதுவாக ஒரு அமைப்பின் வீழ்ச்சி ஒருவரது பலம் மற்றவரின் பலவீனம் ஆகயவற்றால்தான் சாத்தியப்படுவதுண்டு. உலக வரலாறு முழுவதும் இதுதான் உண்மை.ஒவ்வொரு சர்வதேச சக்திகளும் தங்களது நலனில் நின்றுதான் செயற்படுவார்கள் அதற்கான பல கட்டமைப்புக்களை அவர்கள் ஏற்படுத்துவார்கள். இது நடந்து கொண்டுதான் இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து இலக்கை அடைந்தால்தான் வெற்றி. இல்லாவிட்டால் தலையில் துண்டை போட வேண்டியதுதான்”. என்பது மிக யதார்த்தமானது என்பதில் மாற்று கருத்து என்னிடம் இல்லை.
தொண்டர் நிறூவனங்கள் எல்லாம் என்னத்துக்கு தோளீல் சால்வையோடு அலைகின்றன எனும் வாதம் இன்னும் விவாதிக்க வேண்டியது.