கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் .
சர்வகட்சி குழு பேச்சுவார்த்தை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை ஓரங்கட்டியுள்ள அரசாங்கம் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பது தீர்வுக்கான நகர்வில் அக்கறையற்று அரசு கூட்டமைப்பின் மீது பழிபோடுவது பரிகாசத்திற்குரியதாகும்.
கூட்டமைப்பு மீது புலி முத்திரை குத்தி சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்திடமும் ஆதரவு திரட்டும் நோக்கமே.