இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியிருப்பது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், போரில் பாதித்த மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. இப்போதும் செய்து வருகின்றது.போரில் பாதித்த மக்களுக்கு 2600 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. 70 ஆயிரம் வேளாண் பொருள்கள் அடங்கிய பைகள் அளிக்கப்பட்டன. போரினால் நசிந்துபோன விவசாயத் தொழிலுக்கு புத்துயிரூட்டும் நோக்கில் இவ்வுதவி அளிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு, மத்திய பிராந்தியங்களின் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளுக்கு இடையே மீண்டும் மக்கள் சகஜமாக சென்றுவரும் நோக்கில் 55 பஸ்கள் வழங்கப்பட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான மருத்துவ சேவைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கை, கால்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்த அப்பாவி மக்களுககு செயற்கை கை, கால்களை பொருத்தும் முகாம் நடத்தப்பட்டது. ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டையால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 4 லட்சம் சிமென்ட் மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுதவிர, போரில் பாதித்த மக்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுத் தொகையாக 500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தப்படும் ரயில்வே கட்டமைப்பு, துறைமுகம், திரிகோணமலையில் நிறுவப்படும் அனல்மின் நிலையம், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாசார மையம் உள்பட இன்னும் ஏராளமான திட்டங்களுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டிவருகிறது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் அங்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ் தமிழர் உள்பட இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை பிரிவினரும் ஏற்கத்தக்க வகையில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவது அவசியம். இதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வந்திருந்த போதும் இதுகுறித்து அவரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் நிரந்தர அரசியல் தீர்வு காணுவற்கான உறுதி அளித்தார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.
விருந்தினரில் சிலர் தமது தேவைக்காக மட்டும் வருபவர்கள் சில குறகளச் சொல்வார்கள் திருத்தி விடலாம் என்றூ சொன்னாலே அதை பெரிதாக்கி தம்மையும் பிரமுகராக்கி விடுவார்கள்.கிருஸ்ணாவும் அப்படித்தான்.இவரால் இந்திய விவசாயி தமிழன் என்பதால் அவனது தண்ணீர் தடைபடுவதை தடுக்கவே முடியவில்லை இவரா இன்னொரு நாட்டுத் தமிழர் பிரச்சனைய தீர்க்கப் போகிறார்.உழுகிற மாடென்றால் உள்ளூரிலேயெ உழும்.
//இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் அங்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ் தமிழர் உள்பட இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை பிரிவினரும் ஏற்கத்தக்க வகையில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவது அவசியம். இதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வந்திருந்த போதும் இதுகுறித்து அவரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் நிரந்தர அரசியல் தீர்வு காணுவற்கான உறுதி அளித்தார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்//
மண்டு மண்டு, கிழவன் கறணைநிதியும் இதைத்தான் 1958ல் இருந்து வ(ழி)யுறுத்தி வருவதாக உ(ரி)தி அ(ழி)த்துக்கொண்டிருப்பதாக நான் பிறந்த காலத்திலிருந்து கேட்டு சலிச்சுப்போச்சு, மக்கு மக்கூ,
கிருஸ்ணா தமிழனுக்கு தண்ணீர் தர மறூத்தவர் அவரோடு மல்லுக் கட்டி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டுவர போராடியவர் கருணாநிதி அவரோடு,தமிழ் இனத் தலைவரை ஒப்பிடுவதா? உங்களூக்கு என்னதான் பிரச்சனை சாரெ.
TM
கருணாநிதி காவேரியைக் கர்நாடகத்துக்கு விற்ற கதை தெரியுமா உங்களுக்கு?
“அரசியல் தீர்வுக்கு ராஜபட்ச உறுதி அளித்துள்ளார் ”
ஐயா
இதுவரை அரசியல் தீர்வுக்கு உறுதி அளிக்காத ஒரு இலங்கை ஜனாதிபதியை தங்களால் கூற முடியுமா?
அவர்களுள் உருப்படியாக நடைமுறைப்படுத்திய ஒருவராவது உள்ளாரா?
அரசியலுக்குள் புகுந்து அதிகாரங்களை கைப்பற்றும் மக்கள் ஏனைய மக்களை எப்படி ஏமாற்றி அரசியல் சித்து விளையாட்டுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு, இந்திய மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ள “அரசியல் தீர்வுக்கு ராஜபட்ச உறுதி அளித்துள்ளார்” என்ற செய்தியை உன்னிப்பாக படித்தால் புரிந்துகொள்ளலாம். “இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், போரில் பாதித்த மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. இப்போதும் செய்து வருகின்றது, ” என தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு இடத்திலாவது தமிழ்மக்கள், தமிழ்பகுதி என்ற சொல்லைப் பாவிக்கவில்லை. போரைத்திணித்து தமிழ்மக்களைக் கொன்றுகுவித்த சிங்களமக்களும் அதேபோரினால் பாதிக்கப்பட்டவர்களே. இன்றுகுடியேற்றப்படும் சிங்களவரும், குடியேற்றப்பட்ட சிங்களர் வாழ்ந்துவரும் தமிழ்பகுதிகளும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளே.