பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறப்பு விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் செயற்படும் தமிழர் அமைப்புக்கள் எதுவும் இது குறித்து பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் தமது உள்ளக நட்பு சக்திகளைக் கொண்டிராத காரணத்தால் திருப்பி அனுப்பப்ப்படுவதைத் தடுத்த நிறுத்த முடியாத சூழல் காணப்படுகிறது.
அப்படி எதுவும் நடைபெறாது.அவர்களுக்காக வாதிடும் அந்த வழக்கறிஞர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.தனி விமானத்தில் திருப்பி அனுப்புதல் நடைமுறைச் சாத்தியமானதா?இவ்வாறு ஓர் தடவை பிரான்சிலிருந்து வேறு ஓர் நாட்டவர்கள் மீள அனுப்பப்பட்டது உண்மை!எனினும் அது அந்த நாட்டிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட சில வாக்குறுதிகளின் பின்னரே இடம்பெற்றது.ஆனால்,இலங்கையுடன் அவ்வாறு ஓர் ஒப்பந்தம் செய்வதோ,உயிருக்கு உத்தரவாதமோ இல்லா நிலையில் இதனை செயற்படுத்த மனித உரிமை அமைப்புகள் இடம் கொடுக்காது என்றே எண்ணுகிறேன்.
மனித உரிமை அமைப்புகள் பிரித்தானிய தமிழர் பேரவை உலகத்தமிழர் பேரவை என்ன செய்யப்போகிறாகள்?