தமிழரசுக் கட்சி: தமிழ் பகுதிகளில் ஒரு பெயரும், தென்னிலங்கையில் வேறு ஒரு பெயரும் வைத்து மகிழ்ந்தோம்: ஏன் செய்தோம் இதை விட்டால்வேறு வழியில்லை.
அது தான் எங்கள் ஸ்டைல் :
உழைக்கும் மலையக மக்களை நாடற்றவராக்க இனவாதக் கட்சிக்கு நண்டுக்கு வளையானோம் : ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
தமிழக்கட்சிகள்: சுதந்திர கட்சியுடன் சேர்ந்து வேலை செய்ய மறுத்தோம்: ஏன் மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
சிங்கள சட்டத்தை எதிர்த்த இடதுசாரிகளை ஆதரிக்க மறுத்தோம்: எஜமான்களின் உத்தரவின் படி மறுத்தோம். ஏன் ஆதரிக்க மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
அமெரிக்க ,பிரிட்டிஷ் தூது வராலயங்களில் ஆலோசனைகள் நடாத்தினோம் : ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
இனவாத UNP இணைந்து இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் அழித்தோம்: ஏன் அழித்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
இடது சாரிகளுக்கு எதிராக அந்நிய தூதர்களின் ஆலோசனையில் ஆடினோம்; ஏன் செய்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
மாவிட்டபுரத்தில் “ஆலய நுழைவில் ” தமிழரின் ” ஒற்றுமை”யை காக்க போலீசுடன் சேர்ந்து ” சென்ட்ரி ” போட்டோம் : ஏன் போட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
திடீரென ” சோஷலிச” தமிழீழம் கோசம் வைத்தோம்.இல்லையென்றால் யாழ்ப்பாணம் ” ஷங்காய் ” ஆகியிருக்கும்.!!! இல்லாவிட்டால் ” சிவப்பு நோய் ” பரவியிருக்கும் ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
இளைஞர்களை உசுப்பி எழுச்சி ஊட்டினோம்; அரசியல் எதிரிகளின் மீது ஏவி விட்டோம் , கொக்கரித்தோம்: ஏன் உசுப்பிவிட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினோம் ; அது தான் ” பெரும்பான்மை ” தமிழரின் விருப்பம்; ஏன் நிறைவேற்றினோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
UNP யையே தான் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் : ஏன் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
பாராளுமன்றம் போனோம்: UNP யுடன் விருந்துண்டோம் : UNP யுடன் கை கோர்த்தோம் : பதவிகள் பெற்றோம் ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
தமிழ் தலைமையை நம்பி நாம் UNP யை தான் ஆதரித்தோம்: ஏன் ஆதரித்தோம் இதை விட்டால் நமக்கும் வேறு வழியில்லை
கொழும்பில் வந்த அமெரிக்க போர் கப்பலை UNP தலைவர்களுடன் பார்த்து மகிழ்ந்தோம்: ஏன் செய்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
தமிழ் மக்களை UNP என்ற கசாப்புக் கடைக்கு கொண்டு போய் விட்டோம்: ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
அதிஉத்தம ஜனாதிபதி JR இப்படி செய்து விட்டாரே என்று புலம்பினோம்: ஏன் இப்படி புலம்பினோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
உலகில் ஒரு எதிர்க்கட்சி அகதியாக இந்தியா ஓடியது: ஏன் இப்படி ஓடினோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
” முன்பு ஏவி விட்ட ” காளைகள் மார்பை குதறின: அவர்களுக்கும் இதை விட்டால் வேறு வழியில்லை துரோகத்தின் சம்பளம் என்றார்கள் ” வந்தவர்கள்”.
வந்தவர்கள் “தலைவர் ” காலத்தில் ” ஈழம் மலரும் ” என்றார்கள் ; அருகில் படுத்தவர்களை எல்லாம் சுட்டு தள்ளினார்கள்: சுட்டவர்கள் சொன்னதென்ன : ஏன் சுட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
முப்பது வருடசமாக தமிழ் மக்கள் காணாத பயங்கரங்களை எல்லாம் ” படம் ” போல காட்டினார்கள். காட்டியவர்கள் சொன்னதென்ன : இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
பாராளுமன்ற தமிழ் தலைமைகள் ” புது ” ஹீரோவின் ” நல்ல படம் ” என்று சான்றிதழ்கள் கொடுத்தார்கள் :- இல்லை கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஏன் செய்தோம் . இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
புதிய , புதிய படத் தயாரிப்பாளர்கள் படமெடுக்க வேண்டும் என்றால் நமது புது ஹீரோவோடு தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்கள்: அப்போ தான் படம் ஓடும் என்றார்கள்:
ஏன் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
நவரசங்களும் கொப்பளிக்க படம் நன்றாய்த்தான் ஓடியது. வெளியே படம் ஓடிய தியேட்டரை யார் யாரோவெல்லாம் இடிப்பதை மறந்தும், மறுத்தும் படத்தை ஓட்ட நேர்ந்தது.
ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
” அமெரிக்க போர் கப்பலை UNP தலைவர்களுடன் பார்த்து மிகிழ்ந்த தலைமையின் “ மரபில் வந்தவர்களல்லவா முள்ளிவாய்க்காலில் ” கப்பல் ” வரப்போகிறது என்றார்கள்: ஏன் நம்பினோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
மக்கள் ஓலம் நமது காதுகளை அறுத்தது … இதுவும் ஒரு வாழ்வா என்று அலைகழிக்க வைத்தது… இன்னும் அதற்க்கு ஒரு முடிவில்லை:…
இந்தப் புண் ஆறவில்லை ..ஆற்றுவாரில்லை … அதற்குள் தேர்தல் வரப் போகிறது … தேர்தலால் ஏதாவது தீர்ந்திருக்கிறதா …?
இந்தியாவை விட்டால் வழியில்லை :அமெரிக்காவை விட்டால் வழியில்லை; தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டால் வழியில்லை : இப்போ விக்கியை விட்டால் வழியில்லை. ஏன் இதைச் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
வழியுண்டா …!?
வழியுண்டு…!!
மீண்டும் மீண்டும் தோற்றுப் போன வழி முறைகளையும் பல முறை தோற்றுப்போனவர்களையும் நிராகரித்தால்..!! வழியுண்டு…!!
Forward Defence Line collapsed at Mullivaikkal. End of the beginning and the beginning of the end. Valvetiturai guys could not go beyond that and Europe.
அண்ணை யோகன்! இதில வெளியார் இருந்தவையோ எண்டும் தெரியாது.வெளியிலிருந்து ஒண்டுமே நடக்கல்லை போலெயிருக்கு; இந்தத் தீவில நாங்க மட்டுந்தான் ஒத்தைகுடி;எல்லாம் எங்கிட பிழை;நடந்ததிற்கெல்லாம் நாங்கதான் முழுப்பொறுப்பு.
பண்டைக்காலத்தில ஒத்தைகுடியா இருக்கேக்கை,அந்தக்கிழம் சொன்ன ஒரு வசனம்,இண்டைக்கு இப்பிடி ஊத்தெடுத்திருக்கு.
அந்தக் கிழம் சொன்னது இதுதான்:’தீதும் நன்றும் பிறர் தர வாரா.’
அட உலகில ஒரு மாற்றம் ஒண்டும் நடக்கல்லையா? சிந்தனையில வளர்ச்சி?
எழுத்தாணி கீபோர்ட்டாக மாறியும்,’சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்ளதான்.’
// இதில வெளியார் இருந்தவையோ எண்டும் தெரியாது.வெளியிலிருந்து ஒண்டுமே நடக்கல்லை போலெயிருக்கு..// ——செய்வினை
அண்ணை செய்வினை
எங்கட அப்பகாத்து எம்.பி மார் பாராளுமன்ற கதிரையை கூடாக்கினது போல , அமெரிக்க, பிரிட்டிஷ் எம்பசி கதிரைகளையும் தான் கூடாக்கினார்கள்.அதிலே முக்கிய பங்கு UNP அப்பகாத்துமாருக்கும் பங்கு உண்டு.10 லட்சம் மலையக தமிழர்களை இப்படி அமெரிக்க, பிரிட்டிஷ் எம்பசி களில் குந்தியிருந்து தான் நாடற்றவராகினார்கள்.
ஏனென்றால் அவர்கள் இருந்தால் கம்யூனிசகட்சி ஆட்சியை பிடித்து விடும் என்ற பயமிருந்தது.
பண்டாராநாயக்க போட்ட “நடிப்பு ” சோஷலிசத்தையே அமெரிக்க, பிரிட்டிஷ் எம்பசிகாரர் நம்பவில்லை.அதை முற்றாக ஏற்றதால் தான் தமிழ் தலைமைகள் UNP யுடன் நட்பை பாராடினார்கள்.
விளையாட்டா கொஞ்சம் வரலாறையும் படித்தல் நலம்.
/////////////சிங்கள சட்டத்தை எதிர்த்த இடதுசாரிகளை ஆதரிக்க மறுத்தோம்://///////
///////தமிழக்கட்சிகள்: சுதந்திர கட்சியுடன் சேர்ந்து வேலை செய்ய மறுத்தோம்://////
Above two lines gives some basic idea about you Mr Yogan ,
ஆரண்ணை நீங்கள் அந்த இடது சாரி கொல்வின் ஆர் டி சில்வாவா அன்ட் கோவையா பாடுறியள்? என்ன கூலி தந்தாங்க ? 1972 குடியரசுச் சட்டத்தை இயற்றி இருந்த கொஞ்ச நஞ்ச உரிமையை வழங்கிய சோல்பரி அரசியல் அமைப்பின் 29 ஆவது பிரிவை இல்லாதொழித்த இடது சாரிகள் முதல் இன்று ராஜபக்சேயுடன் நிற்கும் இடதுசாரிகளையும் , பண்டாரநாயக்காவும் ஆரம்பத்தில் தன்னை இடதுசாரி என்றுதான் சொன்னார் என்பதையும் தெரியுமா ?
அதுசரி உலகில் இடதுசாரிகள் நிர்வகிக்கும் அல்லது நிர்வகித்த ஏதாவது ஒரு நாட்டில் மேற்குலகில் உள்ள நோயாளி ஜனநாயகத்தை விட சிறந்த முறையில் மனிதனை மதிக்கும் பண்பு இருக்கா சொல்லுங்க ?
யோ! “கன்” உலகில் உள்ள உங்கள் மொடல் இஸ்டேட் எது ? ஓட்டாதையுங்க பதில் வேணும் இல்லாட்டில் கண்ட இடத்தில் துரத்தி துரத்தி கடிப்பேன் !!
யோகன் டானியல் தனது பதிலைச் சொல்வார் என நம்புகிறேன். உங்களைப் பொறுத்தவரையில் நிர்வாகம்,நிர்வகித்தல், மில்லியன் கணக்கில் பணத்தைக் குவித்துக்கொள்வதற்காக உலகம் முழுவது தேடித்தேடி – தமிழ் மக்கள் உட்பட – அழிக்கும் நாடுகளை ஜனநாயக நாடுகள் என்று வாய் கூசாமல் நீங்கள் சொல்வது உங்கள் அரசியல் சூனித்தைக் காட்டுகிறது. நீங்கள் வாழும் நாடுகளில் இருப்பவர்கள் போலி இடதுசாரிகளாக இருந்தாலும் அவர்கள் தான் உங்களை அகதியாக அங்கீகரிக்குமாறும் போராடுகிறார்கள். அங்கு வறிய மக்களுக்கு சமூக உதவித்தொகை வழங்குவது கூட அவர்கள் போராடிப்பெற்ற உரிமைகளே. இன்று உங்களைப் போன்றவர்கள் அனுபவிக்கும் இலவச மருத்துவம், சமூக உதவிகள் ஓய்வூதியம் போன்ற எல்லாமே இடதுசாரிகளின் தொழிற்சங்கப்போராட்டங்களும் தியாகங்களும் பெற்றெடுத்த உரிமைகளே.
எண்ணைக்காகவும், கனிமங்களுக்காகவும், மலிவான கூலிக்காகவும், நில ஆக்கிரமிப்பிற்காகவும் கொலை செய்வதை ஜனநாயகம் என்று ஐந்தாம் படைகள் போன்று நீங்கள் பிரச்சாரம் செய்வதற்கு முதல் நீங்கள் வாழும் நாடுகளின் உரிமைப் போராட்ட வரலாற்றைப் படித்துப்பாருங்கள். அது கூட வரிக்கு வரி பொய்களை மக்கள் மீது திணிக்கும் வர்த்தக ஊடகங்களிடமிருந்தே நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் புதைகுழிகளில் புற்கள் முளைக்கும் போது 30 வருடத்திற்கு ஒரு தடைவை தேசிய ஆவணக்காப்பகம் சில உண்மைகளைக் கண்துடைப்பிற்காக வெளியிடும் போது இலங்கையில் கொலைகளைத் திட்டமிட்டதில் உங்களின் ரட்சகர்களும் பங்குபற்றியதாகக் குறிப்புவந்தாலும் வியப்படைவதற்கில்லை.
I clearly stated “மேற்குலகில் உள்ள நோயாளி ஜனநாயகத்தை விட சிறந்த முறையில் மனிதனை மதிக்கும் பண்பு இருக்கா சொல்லுங்க ? “
இதற்கு உங்கள் மற்றைய பின்னூட்டத்தில் பதில் உள்ளது. இன்னொரு தடவை இரமியாவின் மொழிபெயர்ப்புக் கட்டுரையை வாசிக்கவும், அதிலும் பதில் உள்ளது.
பிரித்தானிய தொழிற்சங்கங்களின் நேரடிப்பணத்தில் பதவிக்கு வந்த தொழிற்கட்சி பிரதமரான ரொனி பிளோ் தான் ஈராக்கின்மேல் படை எடுக்க அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகோர்த்தவா்.
மேற்குலக இடது சாரிகளாயினும் மூன்றாம் உலக இடது சாரிகளானாலும் தமது தேசிய நலன்களுக்கப்பாற்பட்டு ஒருபோதும் இயங்கப்போவதில்லை.
ஒரு இனவிடுதலைகுறித்த தா்க்கத்துடன் முதலாளித்துவ நாடுகளில் உள்ள இடதுசாரி கட்சிகளின் தமது நாட்டு தொழிலாளிகள் நலன் சார்ந்த போராட்டங்களையும் ஒப்பிட முற்படும்போது இலங்கையில் உள்ள இடசாரியத்தின் சரித்திரத்தையும் நடைமுறையில் எந்த அழவிற்கு சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு போராட முற்படுகின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு நாட்டின் தேசிய அரசியலும் அது சார்ந்த வலது, இடது சார்பு கட்சிகளது அரசியல், பொருளாதார கொள்கைகள் யாவும் தனித்தன்மைவாய்ந்தவை. இதில் அகிலம் என்ற சொல்லிற்கு அா்த்தமே கிடையாது.
குமார் ரொனி பிளேர் தொழிற்சங்கப் பணத்தில் வெற்றிபெறவில்லை. பிரித்தானியாவின் பல்தேசியக் கம்பனிகளின் மில்லியன்களிலேயே வெற்றிபெற்றார். சிந்துஜா பிரதேர்ஸ் என்ற இந்திய பங்குச்சந்தை மோசடிக்காரன் 1 மில்லியன் தேர்தலுக்காகக் கொடுத்து பிரஜா உரிமை பெற்றுக்கொண்டதெல்லாம் பழையக கதை. அதை விடுங்கள் தொழிற்கட்சி என்று பெயர் வைத்துக்கொள்பவர்களும் மக்கள் என்று பெயரை வைத்துக்கொள்பவர்களும் இடதுசாரிகளோ மார்க்சிஸ்டுக்களோ அல்ல, மார்க்சியம் என்பது முதலில் அறிவியல் சார்ந்தது. இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டது கடவுள் விட்ட வழி என்று சொல்கிறீர்களே அதற்கு எதிராக இல்லை அதற்கு வேறு சமுதாயப் புறக்காரணங்கள் இருக்கின்றது என்று கூறுவீர்களானால் நீங்கள் முதலிக் மார்க்சிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியான காரணத்தைக் கண்டுகொள்வதும் அதற்கான எதிர்கால தீர்வை அறிவியல் பூர்வமாக முன்வைப்பதும் இந்த அணுகுமுறையின் அடுத்த வளர்ச்சி நிலை, இன்னும் ஆழமாக மக்கல் மத்தியில் எவ்வாறு முரண்பாடுகள் காணப்படுகின்றன அதனை எவ்வாறு கையாள்வது என்பதை கண்டுகொண்டு அதற்காக பெரும்பான்மை ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதற்காகப் போராடினால் நீங்கள் சோசலிஸ்ட். கடந்த அறுபது வருட இலங்கையில் அரசியல் வரலாற்றில் இதுவே மிஸ்ஸீங் பகுதி.
உலகில் பெரும்பான்மை நாடுகளால் அங்கிகரிக்கப்பட்ட பாலஸ்தீனியா்கள் கூட வேறுவழியின்றி மறுபடியும் பேச்சுவார்த்தை மேசைக்குபோகும் போது நாம்??.
Kumar, the American Secretary of State John Kerry is going to the West Bank of the Palestine. For Menachem Begin it is Judea and Samaria. John Kerry was also a Democratic Senator from the state of Massachusettes. Held the seat not touched by the Kennedys since 1962. He is also a Vietnam Veteran like the Bob Kerry of Nebraska. and Dr. David E. Lincoln. 803-777-7306. Lincoln@sc.edu. Thank you.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி வாலில் தொங்கும் போது எதிர்ப்பதை தவிர…
இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை…!!!
வாக்கு வேட்டைக்கு புலிச்சாய தேசியம் பூசிய தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டால் வழியில்லை…
இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை…!!!
புலியும் இல்லாத நிலையில் எங்காவது தொங்க வேண்டும்…
இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை…!!!
Who is a tiger?
//என்ன செய்யப் போகிறோம்……? :ச. நித்தியானந்தன் (யாழ். பல்கலைக்கழகம்)/// என்றும்
////அரசியல் சூனியம் – வேறு வழியில்லை : யோகன்/// எண்றும்
///கதவை மூடுங்கள் காற்று நிற்கட்டும் : ச.நித்தியானந்தன்///என்றும்
//// இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கியையும் தேர்தலையும் புறக்கணிப்போம் : ஜவாகர் (வவுனியா) /// என்றும்
பல்வேறு தலைப்புக்களில் வந்து மக்களிம் ஒரு வெறுப்பை , ஒரு மன்ச்சோர்வை, விரக்தி நிலையையை உருவாக்கும்
உளவியல் யுத்தம் ஒன்று திட்டம் இட்ட முறையில் நடாத்தப்படுகின்றது போல எனக்குப் படுகின்றது . ஏனெனில் தவறுகளை தோல்விகளை அவலங்களை அடுக்கிச் செல்லும் இவர்கள் தீர்வை முன்வைக்காமல் ஏன் விடுகின்றார்கள்??,
நித்தியானதனிடம் கீழே உள்ள கேள்வி கெட்டேன் சவாலை ஏற்றார் பதில் வரவில்லை .
Pஒச்டெட் ஒன் 07/26/2013 அட் 08:23
சவால் விடுகின்றேன். சவால் விடுகின்றேன். சவால் விடுகின்றேன்.
தமிழீழம் தான் ஒரே தீர்வு என தெளிவாக வலியுறுத்தி ச.”நிதி” ஆனந்தன் ஒரு கட்டுரை வரைவாரா? முடியவே முடியாது .
ஏனெனில் ஆறாவது திருத்தச் சட்டம் அங்கு வாழ்வோரைக் கட்டிப் பொட்டிருக்கின்றது . அது தான் உண்மை. சும்மா சப்பைக் கட்டுக் கட்டக் கூடாது.
றெப்ல்ய்
ணிதிஅனந்தன்
Pஒச்டெட் ஒன் 07/26/2013 அட் 10:19
சவாலை ஏற்றுக்கொள்கிறேன் சந்திரமௌலி சகோதரனே
விரைவில் சந்திக்கிறேன்
யாமார்க்கும் குடிஎல்லோம் நமனை அஞ்சோம்
ஜவாகரிடம் கீழே உள்ள கேள்வியை கேட்டேன் பதில் வரவில்லை .
றெப்ல்ய்
சி.சந்திரமெளலிசன்
Pஒச்டெட் ஒன் 07/28/2013 அட் 00:07
ஐயா ஜவாகர்Jஅநகர் , “மேட்டுக் குடி” என்று அடிக்கடி எழுதுகின்றீர்கள் . அது உந்த சாதி பார்கிற மாதியோ? அந்த பததுக்கு அரசியல் சமூக ரீதியாக நீங்கள் வைத்திருக்கும் விளக்கம் என்ன?
இப்பொழுது யொகனிடம் இந்த கேள்வி கெட்கப்பட்டிருக்கின்றது
றெப்ல்ய்
சி. சந்திரமௌலீசன்
Pஒச்டெட் ஒன் 08/03/2013 அட் 17:27
/////////////சிங்கள சட்டத்தை எதிர்த்த இடதுசாரிகளை ஆதரிக்க மறுத்தோம்://///////
///////தமிழக்கட்சிகள்: சுதந்திர கட்சியுடன் சேர்ந்து வேலை செய்ய மறுத்தோம்://////
ஆபொவெ ட்நொ லினெச் கிவெச் சொமெ பசிc இடெஅ அபொஉட் யொஉ Mர் Yஒகன் ,
ஆரண்ணை நீங்கள் அந்த இடது சாரி கொல்வின் ஆர் டி சில்வாவா அன்ட் கோவையா பாடுறியள்? என்ன கூலி தந்தாங்க ? 1972 குடியரசுச் சட்டத்தை இயற்றி இருந்த கொஞ்ச நஞ்ச உரிமையை வழங்கிய சோல்பரி அரசியல் அமைப்பின் 29 ஆவது பிரிவை இல்லாதொழித்த இடது சாரிகள் முதல் இன்று ராஜபக்சேயுடன் நிற்கும் இடதுசாரிகளையும் , பண்டாரநாயக்காவும் ஆரம்பத்தில் தன்னை இடதுசாரி என்றுதான் சொன்னார் என்பதையும் தெரியுமா ?
அதுசரி உலகில் இடதுசாரிகள் நிர்வகிக்கும் அல்லது நிர்வகித்த ஏதாவது ஒரு நாட்டில் மேற்குலகில் உள்ள நோயாளி ஜனநாயகத்தை விட சிறந்த முறையில் மனிதனை மதிக்கும் பண்பு இருக்கா சொல்லுங்க ?
யோ! “கன்” உலகில் உள்ள உங்கள் மொடல் இஸ்டேட் Model state எது ? ஓடாதையுங்க பதில் வேணும் இல்லாட்டில் கண்ட இடத்தில் துரத்தி துரத்தி கடிப்பேன் !!
//ஆரண்ணை நீங்கள் அந்த இடது சாரி கொல்வின் ஆர் டி சில்வாவா அன்ட் கோவையா பாடுறியள்? என்ன கூலி தந்தாங்க ? 1972 குடியரசுச் சட்டத்தை இயற்றி இருந்த கொஞ்ச நஞ்ச உரிமையை வழங்கிய சோல்பரி அரசியல் அமைப்பின் 29 ஆவது பிரிவை இல்லாதொழித்த இடது சாரிகள் முதல் இன்று ராஜபக்சேயுடன் நிற்கும் இடதுசாரிகளையும் , பண்டாரநாயக்காவும் ஆரம்பத்தில் தன்னை இடதுசாரி என்றுதான் சொன்னார் என்பதையும் தெரியுமா ?//
பண்டாரநாயக்க ஏன், ஹிட்லரே இடதுசாரி என்று தான் தன்னைச் சொன்னார் பின்னர் தேசியவாதி என்றார். இவர்கள் எல்லாம் தவறிழைத்தார்கள் என்பதற்காக இடதுசாரியம் என்பதையும் தேசியவாதத்தையும் நிராகரிப்பது அரசியல் சூனியம் நண்பரே!
//அதுசரி உலகில் இடதுசாரிகள் நிர்வகிக்கும் அல்லது நிர்வகித்த ஏதாவது ஒரு நாட்டில் மேற்குலகில் உள்ள நோயாளி ஜனநாயகத்தை விட சிறந்த முறையில் மனிதனை மதிக்கும் பண்பு இருக்கா சொல்லுங்க ? யோ! “கன்” உலகில் உள்ள உங்கள் மொடல் இஸ்டேட் Model state எது ? ஓடாதையுங்க பதில் வேணும் இல்லாட்டில் கண்ட இடத்தில் துரத்தி துரத்தி கடிப்பேன் !!//
இங்கு இடதுசாரியம் என்பதும் சமூகத்தை அறிவியல்பூர்வமாகப் பார்ப்பதும் மொடல் போட்டு வியாபாரம் செய்ய மைக்ரோசொப்ட பிரச்சனை அல்ல நாங்கள் மனிதர்களையும் மக்களையும் பற்றிப் பேசுகிறோம். இருந்தாலும் உங்கள் அறிவுப் பசிக்காக சில மொடல்களைத் தருகிறேன். ரஷ்யாவிலும் சீனாவிலும் அவை முதலாளித்துவ நாடுகளாக மாறுவதற்கு முன்னர் உலகில் அதிசிறந்தத ஜனநாயகம் இருந்தது. அது உற்பத்திப் பொருட்களை எப்படி அதிக இலாபத்தில் விற்பது என்பதற்கான ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். கம்யூன்களின் ஊடான தேர்த்தல் முறையும் பிரதிநிதிகளை தவறிழைக்கும் பட்சத்தில் உடனடியாகவே திருப்பியழைக்கும் ஜனநாயகமும் இருந்தது. இதைக்கண்டு மிரண்ட வின்ஸ்டன் சேர்ச்சில் இப்படிச் சொன்னார் ‘அரசியல்வாதிகள் எப்போது கூலி வேலைசெய்யும் முட்டாள்களால் அரசியல் நீக்கம் செய்யப்படலாம் என்ற பயத்தில் ரஷ்யாவில் வாழ்கிறார்கள். அதனால் சுயாதீனமாக முடிவெடுக்க முடிவதில்லை’
என்கிறார். பிறகு அதே சேர்ச்சில் ரஷ்யா சர்வாதிகார நாடு என்கிறார். பெரும்பான்மையான மக்களால் ஆழமான ஜனநாயகத்தால் தெரிவாகும் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயகமா அல்லது சிறுபான்மை மக்களால் தெரிவுசெய்ப்படும் ஜனநாயகமா சிறந்தது? பிரித்தானியாவில் இப்போது 30 வீதமான மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே ஆள்கிறார்கள். 70 வீதமானவர்கள் ஆட்ச்சிக்கு எதிரானவர்கள்.
இதனை மறைத்த பணம்படைத்த ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்தன இதை நம்பிய உங்களைப் போன்றவர்கள் கம்யூனிசத்தில் ஜனநாயகம் இல்லை என்று அரசியல் சூன்யத்தனத்தோடு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
//பண்டாரநாயக்க ஏன், ஹிட்லரே , ஏன் பிரபாகரனும் தான் சோஷலிச தமிழ் ஈழம் என்று தான் சொன்னார்.//
மௌலீசன் ஐய்யா ,
அரசியல் ,சமூக ,தத்துவார்த்த விவாதத்திற்கு நீங்கள் அருகதையற்றவர் என்பது உங்கள் பின்னூட்டங்களில் தெரிகிறது.தமிழ் மக்களை உலகெல்லாம் புலம் பெயர வைத்த குறுந்தேசியவாதிகள் முழு இலங்கைக்கான அரசியலில் தமிழ் மக்களையோ ,முஸ்லீம் மக்களையோ அரசியல் ரீதியாக ஒன்றுபட வைக்காத,அதற்க்கான ஒரு அடி கூட எடுத்து வைக்காத கருங்காலிகள்.
முறைப்படி நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு கோசத்தை [ தமிழீழம் ] கொள்கையாக்கி மக்களை ஏமாற்றி , இன்று கொன்று குவித்ததற்கு தமிழ் தலைமைகள தார்மீகப் பொறுப்பெடுத்து அரசியலிலிருந்து விலக வேண்டும்.மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அது தான் ஜனநாயகவாதிகளின் பண்பு.அந்த பண்பில்லாத மூளைக்கோளாறுகளுடன் விவாதிப்பதில் என்ன பயன்??
சிங்களவர் அறியாத ,தெரியாத தமிழ் பகுதிகளில் எல்லாம் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்த உதவியது யார்?
அது தான் உலகின் சிறந்த ராணுவத்தை நிர்வாகித்த தலைவனின் யோக்கியதையா..?
அது தான் யூதர்களுடன் போட்டி போடும் அறிவு படைத்த கல்விமான்களின் சாணக்கியமா..?
கடிக்க வேணும் என்றால் வீட்டு சுவரை கடிக்கவும்.
You all indeed have a forum to dump all this from England
மௌலீசன்
உங்கள் பித்தம் கலைய “Yaaro ” அருமையாக பதில் சொல்லியுள்ளார்.அப்பகாத்துமார் அழிச்சது போக , இப்போ நீதவானை நீங்கள் கொண்டு வந்தது உங்கள் “அரசியல் வீழ்ச்சியே “.
ரஷ்யாவிலும் சீனாவிலும் அவை முதலாளித்துவ நாடுகளாக மாறுவதற்கு முன்னர் உலகில் அதிசிறந்தத ஜனநாயகம் இருந்தது//ரசியாவும் சீனாவும் முதலாளித்துவ நாடுகளாக ஏன் மாறின?மனிதனை அவனின் இயங்கியலை , சமூகத்தை அதன் இயங்கியலை புரியாது மார்க்சியத்தை ஒரு மதமாக நடைமுறைப்படுத்திய லெனின் மாஒ வை மீள் பரிசீலிக்கவேண்டியுள்ளது. இவர்களும்( லெனின் மாஒ) மார்க்ஸ் இன் இயங்கியலிட்கு எதிரானவர்களே.
மார்சியம் எனும் பொழுதே ஒரு மத தன்மை அதில் இருக்கிறது தானே!!! when you say ism then it becomes a religion. religion means followers,followers means blind or fanatics. is not true?
don’t be HINDUISMist ,or budhismist or marxisimsit. but be MARXIST,hiuduist or budhist.
ie only follw the theroy or belive in that theroy. don’t be fantic of that thoery. or blindly promoting that theory. if you are the then you are working againsth that theory.
MARX AID THIS IN PAGE 236 clause 3.26 amen, arokara, saranam kachaami.
தம்பி யோகன்! மலடாக்கப்பட்ட சிந்தனையினூடாக வரலாற்றுப் புனைதல் செய்து விட்டு,’விளையாட்டா கொஞ்சம் வரலாறையும் படி’யென்கிற ஏகத்தாளம்,உங்கள் சட்டியில் எதுவும் இல்லையென்பதையே காட்டுகிறது.
அமெரிக்கன் மாவும்,சீன வெள்ளை அரிசியும் கண்ட இலங்கைத்தீவில்,சீன வெள்ளை அரிசியை மேலோங்கச் செய்த ‘இடதுசாரிகள்’,சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் போசித்து,அதைத் தமிழினத்தை அழித்த ‘ட்ராகன்’ ஆக்கிவிட்டார்கள்.
‘தமிழர்க்கு சுயநிர்ணய உரிமை என அன்று பேசிய லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து,’ஏதோ கொஞ்ச இனப்பிரச்சினை ‘ எனப் பேசும் நேற்று வந்த முன்னிலை சோசலிஸக் கட்சி வரை,’மகாவம்ச இனத்தின்’ கீரிடங்களாகத்தான் ஜொலிக்கின்றன.
தம்பி யோகன்! ஒன்றைப் புரிந்து கொள்ளும்;கடந்த அறுவதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்கள்,தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதை,ஓட்டுகளாலும்,வேட்டுகளாலும்,உலகச் செவிப்பறை கிழியத் தெரிவித்திருக்கிறார்கள்.
அது விளங்காது,தமிழர்கள் அலங்கார நடை நடந்ததாக ‘செங்கண்ணாடி’ போட்டுப் பார்த்து, ‘தொப்பி சரியில்லை’யென விமர்சனம் எழுதுவது,’இடதுசாரிகளின்’ வழமையான திண்ணைப் பேச்சு.
////முறைப்படி நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு கோசத்தை [ தமிழீழம் ] கொள்கையாக்கி மக்களை ஏமாற்றி —-யோகன்Posted on 08/03/2013 at 23:53////
இந்த வரிகள் யோகனை அப்படியே அம்மணமாக்கி விட்டிருக்கின்றது . யோகன் சொல்லும் காலனித்துவவாதிகள் வருவதற்கு முன் தனினாடாக தமிழீழம் இருந்தது என்பதை விட்டாலும் , இனப்படுகொலை நடைபெறும் இடத்தில் சுயநிர்ணய உரிமை என்பது கம்யூனிச ததுவத்திலும் உண்டு என்பதை மறுத்து நிற்கும் யோகனுடன் இனியொரு உடன்படுகிறதா என்பதை அறிய விரும்புகின்றேன்.
நடைமுறைச் சாத்தியமற்றது என்பது யோகனின் கருத்து, அது சுயநிர்ணய உரிமை குறித்த கருதோ அன்றி மார்க்சியமோ அல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்துபோகும் உரிமைக்காகப் போராட வேண்டும் அந்த உரிமை உறுதிசெய்யப்பட்ட வேளியில் பிரிந்து போவதா இல்லையா என்ற முடிவை அந்தத் தேசிய இனமே தீர்மானிக்கும். இன்றுள்ள சூழலில் பிரிந்து போகும் உரிமைக்கான போராட்டம் தவிர்க்க்க முடியாததும் அவசியமானதும் ஆகும்.
செய்வினை அண்ணே
அமெரிக்க மாவையும் , சீன அரிசியை பற்றியும் பேசியுள்ளீர்கள்.தமிழர்களின் வெங்காயத்தைப் பற்றி பேச மறந்து விட்டீர்களே!தமிழர் “தலைமைகள்”செய்த “வெங்காய” அரசியலை அல்லது தந்தை பெரியார் சொன்ன “வெங்காயத்தை” நான் சொல்லவில்லை. உணமையான வெங்காயத்தை தான் குறிப்பிடுகின்றேன்.
நீங்கள் குறிப்பிட்ட ‘இடதுசாரிகள்’ தான் “தமிழ் விவசாயிகள் “கல்வீடுகள் கட்டி வசதியாக் வாழ வழி செய்தவர்கள்.அவர்கள் வளர்த்த சுய பொருளாதார அல்லது அப்படி ஒரு முயற்ச்சியை மேற்கொண்டவர்களை மட்டுமல்ல தமிழ் விவசாயிகளின் முதுகெலும்பையும் உடைத்த “கண்டிக்கு யாத்திரை போன “காலை நக்கியது யார்? தமிழர் தலைமை இல்லையா?
“பொம்பாய் வெங்காயம் ” வரப் பட்ட மாயம் இது தான்.
// ..ஒன்றைப் புரிந்து கொள்ளும்;கடந்த அறுவதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்கள்,தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதை,ஓட்டுகளாலும்,வேட்டுகளாலும்,உலகச் செவிப்பறை கிழியத் தெரிவித்திருக்கிறார்கள்.//
அண்ணே !
நீங்கள் என்ன கிழிய கத்தினாலும் உங்களுக்கு “தமிழீழம் ” கிடைக்காது.ஏனென்றால் அது ஒரு யாழ்ப்பாண குறுந்தேசியவாத கோட்பாடாகும்.யாழ்ப்பாணத்துக்கு வெளியே பார்க்க விரும்பாதவர்களின் “குறை மாதக் குழந்தை”.
தங்களுக்கு கீழே சாதிகளை அடக்கியாள , படிக்காதவர்கள் என சிலரை வைத்திருக்க விரும்பியவர்களின் அற்ப ஆசை.யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்த தமிழர்களை பற்றி , முஸ்லீம் மக்கள் பற்றி எள்ளளவும் சிந்திக்காத ” துரைத்தன ” கொள்கை.
நீங்கள் சொன்ன இடது சாரிகள் கொண்டுவந்த தேசியமயமாக்கல் , நில சீர்திருத்தம் ,கல்வி சீர்திருத்தம் ,குடியரசு
தமிழ் மக்களுக்கு எதிரானவை அல்ல.அமெரிக்காவுக்கும் ,இங்கிலாந்துக்கும் எதிரானவை.அது தான் தமிழ் தலைமைக்கும் பிடிக்கவில்லை.
ஆனந்தசங்கரி ஒரு வாக்கு மூலம் தருகிறார்.
/// தேசம்: உங்களுடைய அரசியல் அனுபவம்:
சங்கரி: என்னுடைய அரசியல் வாழ்க்கை இடதுசாரிக் கட்சியில் தான் துவங்கியது. நாங்கள் பெரியதொரு பிழைவிட்ட நாங்கள். அதே பிழையை இப்போதும் விடுறம். எங்களுடைய முதலாவது பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டியவரே இடதுசாரியாகிய என் எம் பெரேரா தான். யுஎன்பி டி எஸ் செனநாயக்காவுக்கு பெரும்பான்மை இல்லை. அனைத்து தமிழ் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தால் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும். அது கை கூடவில்லை. பிரஜாவுரிமைச்சட்டம் வரும்போது அதற்கு எதிராக வாக்களித்து சமசமாஜக்கட்சி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்போது என்றாலும் இந்த தமிழ் சாதிக்கு அறிவு வந்திருக்க வேணும்.
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்.
அதற்குப் பின் 1960 அம் ஆண்டுத் தேர்தல். அதில் நானும் சமசமாஜக் கட்சியில் தேர்தலில் நின்றனான். அப்ப அ அமிர்தலிங்கம் வந்து என்ன பேசினவர். ‘அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன்;.’ இந்த வாய்க்கொழுப்பு தான் எங்கள் இனத்தின் கேடு. அப்போதாவது இடதுசாரிக்கு கட்சிகளுடன் தோழமை கொள்ளவில்லை. ஒரு ஆசனம் கூட வெல்லப்படவில்லை. தமிழர்களுக்கு குரல்கொடுத்ததாலேயே அழிந்த கட்சி அது. 1960இல் இலங்கையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஆட்களைப் போட்டனர். ஒரு சீற்றும் வெல்லவில்லை. அப்படி இருந்தும் சம அந்தஸ்து கொள்கையை அவர்கள் விடவில்லை.
1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். உங்களுக்கு தந்த இன்ரவியூவிலும் அந்தத் தவறை ஏற்றுக்கொண்டனான். அந்த நேரம் இடதுசாரிக் கட்சிகள் எவ்வளவோ தியாகத்தைச் செய்தும் நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ‘நாங்கள் தமிழர்களுக்காகக் கதைத்து தோற்றுப்போகிறோம். தமிழர்கள் வெற்றி பெற்று யுஎன்பி உடன் போகிறார்கள்’ என்ற எண்ணம் சிங்கள இடதுசாரிகள் மத்தியில் எழுந்தது. இடதுசாரிகளில் சிலரையாவது நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமானநிலை வந்திருக்காது.
அப்போது நடந்த மே தின ஊர்வலத்தில் ‘அப்பிட்ட எப்பா மசாலாவடே. அப்பிட எப்பா கடல வடே’ என்று சில பேர் கோசம் போட்டுக் கொண்டு போனதைத் தொடர்ந்து நாங்கள் சிலபேர் கட்சியில் இருந்து விலகிவிட்டோம். அதை நாங்கள் ஒரு பெரிய குற்றமாக எடுத்திருக்கக் கூடாது. அதனை என் எம் பெரேரா சொல்லவில்லை. அங்கிருந்த யாரோ ஒரு சிலர் கோசம் போட்டதே. அது நான் விட்ட பெரிய தவறு. 1970க்களில் சமசமாஜக் கட்சிக்கு 18 சீட்டுக்கள் இருந்தது. கொம்யூனிஸ்ற் கட்சியையும் சேர்த்தால் 22 – 23 சீட் இருந்தது. இப்ப சமசமாஜக் கட்சி ஒன்று, கொம்யூனிஸ்ற் கட்சி ஒன்று. இது தான் நாங்கள் விட்ட பிழை. எங்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை.
(செப்ரம்பர் மாதம் லண்டன் வந்திருந்த போது வீ அனந்தசங்கரி தேசம்நெற் க்கு இந்நேர்காணலை வழங்கி இருந்தார். இந்நேர்காணல் செப்ரம்பர் 5ல் பதிவு செய்யப்பட்டது.) ////
விளையாட்டா இன்னும் கொஞ்சம் வரலாறையும் படித்தல் நலம் தரும்.
விளையாட்டா இன்னும் கொஞ்சம் வரலாறையும் படித்தல் நலம் தரும்.
றெப்ல்ய்
சி. சந்திரமௌலீசன்
Pஒச்டெட் ஒன் 08/04/2013 அட் 21:27
///முறைப்படி நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு கோசத்தை [ தமிழீழம் ] கொள்கையாக்கி மக்களை ஏமாற்றி —-யோகன்Pஒச்டெட் ஒன் 08/03/2013 அட் 23:53////
இந்த வரிகள் யோகனை அப்படியே அம்மணமாக்கி விட்டிருக்கின்றது . ///முறைப்படி நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு கோசத்தை [ தமிழீழம் ] கொள்கையாக்கி மக்களை ஏமாற்றி —-யோகன்Pஒச்டெட் ஒன் 08/03/2013 அட் 23:53////
இந்த வரிகள் யோகனை அப்படியே அம்மணமாக்கி விட்டிருக்கின்றது . யோகன் சொல்லும் காலனித்துவவாதிகள் வருவதற்கு முன் தனினாடாக தமிழீழம் இருந்தது என்பதை விட்டாலும் , இனப்படுகொலை நடைபெறும் இடத்தில் சுயநிர்ணய உரிமை என்பது கம்யூனிச ததுவத்திலும் உண்டு என்பதை சிங்கள இனவெறியின் இத்தனை கொடுமைகளுக்கு படுகொலைகளுக்கு பின்னும் மறுத்து நிற்கும் யோகனுடன் பேசுவது அர்த்தம் அற்றது எனநான்நினைக்கின்றேன் .
ஐயா மௌலீசன்
தமிழீழம் சாத்தியமா? என்றொரு விவாதம் 1970 களின் மத்தியிலே சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சன்முகதாசனுக்கும் ,கூட்டணி அணியினருக்கும் இடையே நடைப்பெற்றது.விவாத முடிவில் ” தமிழீழம் சாத்திமில்லை ” என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.அது பழங்கதை.அதை விடுவோமே.
30 வருடமாகப் போராடிய புலிகளாலும் தமிழீழம் எடுக்க முடிந்ததா?
இப்போது நம் கண் முன் தமிழ் ஈழம் சாத்தியம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
வலிந்து இனவாதத்தை இரண்டு பக்க முதலாளி வர்க்கமும் வளர்த்ததால் வந்த வினையே இவை.
நல்லுறவு ,சமாதனம் பற்றி பேச சாமானியருக்கு இடைவேளை கிடைக்கவில்லை என்பதும் உண்மை.
ஆக்குதல் கஷ்டமானது. அழித்தல் இலகுவானது.
இரண்டு பக்க முதலாளி வர்க்கமும் கைக்கொண்ட வழி இரண்டாவது வழியாகும்.
சுயநிர்ணய உரிமை பற்றி முதலில் பேசியவர்கள் இடதுசாரிகளே.தமிழ் மக்கள் பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அங்கு வாழும் தமிழ் மக்களுக்கே உண்டு.
அந்த உரிமை அப்பக்கத்துமாருக்கும் , நீதவானுக்கும் இல்லை.புலத்து புலிகளுக்குமில்லை.
எனாக்கும் ஒரு குளப்பம் உள்ளது. கம்யூனிசத்தில் ஜனநாயகம் உள்ளது எஙிறீர்கள் ஆனால் ஒரு கட்சிதானே ஆட்சி செய்ய வேண்டும் என்று சொலிகிறார்கள், அது நியாயமா? அது சர்வாதிகாரமில்லையா? யாரோவே சொல்லுங்கள்.
சாரா, ஒகே, முதலாளித்துவ நாடு ஒன்றில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியும் தானே? நிறைய பணம் வைத்திருப்பவர்கள் பெரிய நிறுவனங்களின் ஆதரவோடு பதவிக்கு வருகிறார்கள். அப்படித் தேர்தல் நடைபெறும் முறையை யார் தீர்மானித்தார்கள்? மக்களா? கட்சிகள?? யாரும் இல்லை. ஆனால் அது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? அதனைத் தான் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அதிகார வர்க்கம் என்கிறோம். இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களை ஒழுங்கு படுத்த வேண்டாமா?? அதை யார் செய்வது ?? அது தான் கம்யூனிஸ்ட் கட்சி என்கிறோம். அது வேறு ஒரு சமூகப் பொறிமுறையை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் நிர்வாகத்தை கட்சி அல்ல மக்களே நடத்துவார்கள். அவர்களே தீர்மானிப்பார்கள். சமூகத்தின் ஒழுங்குமுறையை முதலாளித்துவத்தில் இருப்பது போலவே வேறு ஒரு அமைப்பு தீர்மானிக்கிறது. அதனைக் கட்சி என்று ஏதோ அழைக்கிறார்கள். நாங்களோ கட்சி என்றதும் தேர்தலில் வாக்க்குக் கேட்கும் கட்சி போன்றது என்ற தவறான முடிவிற்கு வருகிறோம். கம்யூனிச நாடுகளில் தேர்தல்களில் மக்கள் பிரதினிதிகளை அடிமட்டத்திலிருந்து தெரிவுசெய்து ஆட்சி சபைக்கு அனுப்புவார்கள். அவர்கள் தவறு செய்தால் திருப்பி அழைப்பார்கள். 24 மணி நேரமும் அவர்கள் மக்களின் கண்காணிப்பில் இருப்பார்கள்.
தம்பி யோகன்! கிளிப்பேச்சாக மீண்டும்,’விளையாட்டா இன்னும் கொஞ்சம் வரலாறையும் படி’ என்பது போலவே,உங்களுக்கு ஊட்டப்பட்ட செய்திகள், வரலாறு எனும் பேரில்,இங்கே கழிவகற்றப்படுவது,உங்கள் அறியாமையைக் காட்டுகிறது.
வாக்குப் பொறுக்கிகளதும்,தொழிற்சங்க சந்தாவில் சாய்மனைக் கதிரை அரசியல் நடத்தியவர்களது,சோவியத்,சீனக் கைக்கூலிகளினதும் வாய்மொழிதான் வரலாறு என்பதை,நீங்கள் வலிந்து திணிக்கிறீர்கள்.
ஏகாதிபத்திய வளர்ச்சி என்பதே,தலைமைகளின் வாய்மொழி மூலம் வனையப்பட்ட வரலாறுதான்.அதைப் போலவே, இந்தப் போலி இடதுசாரிகளும்,இலங்கை வரலாறை நகர்த்துவது,இன்னொரு ஏகாதிபத்திய முகாமை உருவாக்கவே.
இந்த இடதுசாரிகள், மக்களின் உணர்வுகளை தூக்கி வீசிவிட்டு,
தலைமைகளின் விருப்பு வெறுப்புகளுடாக சரித்திரம் படைக்கிறார்கள்.
இலாபகரமானது,இலகுவானது எது என்பதில்தான்,
இடதுசாரியத்தை,இலங்கையில் மூலதனமாக்கியிருக்கிறார்கள்.
தங்கள் சிந்தாந்த, செயற்பாடு முரண்பாடுகளை அறிய முடியாதவர்களாக,
எழுதிக் கொண்டு போகிறார்கள்.
சட்டியில் இருப்பதே அகப்பையில் வருமென்பதை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இலங்கையின் வரலாறு என்பது,மக்களின் உணர்வுகளினூடாக நகர்ந்து போவதை ஏற்க மறுத்து,தலைமைகளினூடே எழுவதாக மாய்மாலம் காட்டுகிறார்கள்.வரலாற்றின் நகர்வில் மக்கள் முட்டாள்கள் என்பதை நிருபிக்க,கதாநாயகர்கள் கொண்ட இடதுசாரிய முகமூடி அணிந்து கொள்கிறார்கள்.
மக்கள் நிராகரித்ததால் தலைவர்கள் மாறிக் கொண்டார்கள் என்ற நொள்ளைவாதமும்,தலைவர்கள்தான் மக்களை முட்டாளாக்கினார்கள் என்ற கிளிப்பிள்ளைவாதமும்,இவர்களது இடதுசாரிய இரட்டைவேடத்தை வெளிப்படையாக்கி நிற்கிறது.
இலங்கை இடதுசாரிய தலைமைகளில் கூட,அனைத்து சிங்கள தலைமைகளும்,சிங்கள பௌத்த பேரினவாதத்தை வளர்த்து விட்டதும்,
இருந்த ஒரே யொரு தமிழ்த்தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தூக்கி வீசப்பட்டு,’தனிநாடு’ கோரியதும் வரலாறாகப் பார்க்க,ஏனிந்த இடதுசாரிகளால் முடியாமல் இருக்கிறது?
ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தொடர்ந்து போராடும்;போராடியே ஆக வேண்டும்.அதுதான் இயங்கியல்.
சிந்திப்பவர்களோடு கருத்தாடல் செய்யலாம்;செக்குமாடுகளோடு……
செய்வினை அண்ணே
// ….
இதில வெளியார் இருந்தவையோ எண்டும் தெரியாது.வெளியிலிருந்து ஒண்டுமே நடக்கல்லை போலெயிருக்கு; இந்தத் தீவில நாங்க மட்டுந்தான் ஒத்தைகுடி;../// – செய்வினை
” இந்தத் தீவில நாங்க மட்டுந்தான் ஒத்தைகுடி; ../// நல்லா கூட்டணி காரரிண்டே பேச்சைக் கேட்டு , மதவோரங்களில் குந்தி இருந்து அரசியல் ஞானத்தை வளர்த்திருக்கிறீர்கள் போலே.
நீங்கள் தெரியாது என்பதற்கு தான் சில விசயங்களை சொல்ல வேண்டி வந்தது.நாங்க சொன்ன நீங்க விசில் அடிப்பீங்க என்று
தான் கூட்டணி ஐயாவின் வாக்கு மூலம் தந்தோம்.அவர்களின் பாஷை தான் உங்களுக்கு புரியும் என்று தவறாக நினைத்து விட்டேன்.அவர் சொன்னதும் புரியவில்லை என்றால்.உங்கள் கிழவன் சொன்னது தான் ” உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேணும்”.
அண்ணே !
மீண்டும் ஆனந்த சங்கரி அவர்களின் வாக்கு மூலத்தின் ஒரு பகுதியைத் தருகிறேன்.அது பொய் என்று உங்கள் ஆசான்களின் வரலாற்று ஏட்டிலிருந்து ஆதாரங்ககளை காட்டுங்கள் பார்க்கலாம்.நீங்கள் போட்ட ரத்தப் பொட்டு சாட்சியாகக் கேட்கிறேன்.
//..1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்./// – ஆனந்த சங்கரி
//…இலங்கையின் வரலாறு என்பது,மக்களின் உணர்வுகளினூடாக நகர்ந்து போவதை ஏற்க மறுத்து,தலைமைகளினூடே எழுவதாக மாய்மாலம் காட்டுகிறார்கள்…//
என்று புலம்பல் விடுகிறீர்கள்.என்ன வெறுப்புணர்வா..?
//.. தலைமைகளினூடே எழுவதாக மாய்மாலம் காட்டுகிறார்கள்…// காலத்துக்குக் காலம் இந்த விளையாட்டு ஆடித்தானே தமிழ் மக்களை அரசியல் அனாதைகள் ஆக்கினார்கள் உங்கள் தலைவர்கள்.சட்டத்தரணிகள் தான் அரசிய பேசுவார்கள் ,அவரும் லோயர் ,ஐவரும் லோயர் ..என்று மக்கள் உரிமையை அப்பகாத்துமாரின் கையில் கொடுத்தீர்கள்.
பிறகு சொன்னீர்கள் “தேசிய தலைவர் ” இருக்கேக்கே ஈழம் எடுத்திட வேணும் என்று.எல்லாற்றை வாயையும் பொத்தினீ ர்கள்.
அண்ணே இப்ப நீங்க தான் செக்குமாடு போல 1983 க்கு முன் சுற்றின இடத்துக்கு வந்துள்ளீர்கள்.இப்படியே சுத்த வேண்டியது தான்.
இன்னும் சுற்றத்தான் போகிறோம் என்று அடம் பிடித்தால் அது உங்கள் உரிமை.
இதைத்தான் சொன்னோம் இதை விட்டால் நமக்கும் வேறு வழியில்லஎன்று
முதலாpத்துவம் பதுவுடமை போன்ற தத்துவங்களில் தவறுகள் கிடையாது. அவரவர் தமது நலன் நாடியே செயற்படுவர.. ஆனால் சேர்.பொன் சகோதரர்கள் முதல் இன்று சம்பந்தன் சுமந்திரன் விக்னேஸ்வரன் வரை தமிழர் தலைவர் எனப் புறப்பட்ட அனைத்துத் தலைவர்களும் தமிழ் மக்களின் நலன் கருதி ஏதாவது ஒன்றை செய்தார்கள் என யராவது சொல்ல முடியுமா?
இதுதான் எங்கள் ஸ்டைல்!
Obama cancels meetings with Putin over Snowden
Russia’s decision to grant asylum to U.S. whistleblower Edward Snowden worsened an already troubled relationship, says White House
U.S. President Barack Obama has cancelled a much-talked-about summit with his Russian counterpart Vladimir Putin next month, blaming Russia’s decision to grant whistleblower Edward Snowden temporary asylum and other components of a bilateral morass.
In a statement on Wednesday, the White House delivered the “snub” saying, “Following a careful review begun in July, we have reached the conclusion that there is not enough recent progress in our bilateral agenda with Russia to hold a U.S.-Russia Summit in early September.”
இதை விட்டால் வேறு வழியில்லை!
இதுவும்… இதுதான் எங்கள் ஸ்டைல்!
ஸ்டைலு ஸ்டைலுதான் சுபர் ஸ்டைலுதான் ஸ்டைலுக்கேத்த மைனர் நானுதான். ஓபாமாவா கொக்கா என்ன.