அசியல் கைதி அடித்துக் கொல்லப்பட்டமை நிமலரூபன் மரணமடைந்தது தொடர்பில் அரசு இப்போதைக்கு உடனடியாகப் பதில் வழங்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர் கூறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வவுனியா சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சம்பந்தன் இச்சபையில் விசேட அறிக்கை ஒன்று விடுவது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. எமக்கு முன்கூட்டி அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பொதுவாக அறிக்கை ஒன்று விடுவதாக இருந்தால் எம்மிடம் அறிவிக்கவேண்டும். அப்போதுதான் எம்மால் பதிலைத் தயார் செய்யமுடியும். ஆகவே, சம்பந்தனின் இந்த அறிக்கை தொடர்பில் அரசால் உடனடியாகப் பதில் வழங்க முடியாது. இருப்பினும், இது தொடர்பில் அரசு மிக விரைவில் பதிலளிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
If you leave them alone they will dig deeper and deeper into mud. We will get a seat in United Nations Organisation like the Palestinians.
“தொழுவத்திற்குள் போன விடயம் தூண்மையுடன் திரும்பி வராது”