அவசரகால சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அரசியல் கைதிகளைத் தடுத்துவைப்பதற்காக எட்டு புதிய தடுப்பு முகாம்களை நிறுவதற்கு காவல்துறை மா அதிபரினால் பெப்ரவரி மூன்றாம் திகதி மற்றும் 8ம் திகதிகளில் 1639-19, 1640-01, 1640-02 ஆகிய மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய தடுப்பு முகாம்கள் கொழும்பு இராணுவத் தலைமையகம், பனாகொட இராணுவ முகாம், இராணுவக் காவல்துறைப் படைப் பிரிவின் தலைமையகம், நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி முகாம், கடற்படைத் தலைமையகம், வெலிசர கடற்படை நூதனசாலை முகாம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் என்பவற்றில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு முகாம்கள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க, அரச விரோத சூழ்ச்சி குற்றச்சாட்டின்பேரில் 12 ஆயிரம் பேர் தடுத்துவைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.