தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் போராட்டங்களில் பங்காற்ற மறுத்து வெறும் அறிக்கைக் கட்சியாக தமது இருப்புக்களை நிலைநாட்டிக்கொள்ளும் இந்தச் இன்றைய இலங்கைச் சூழலில் ஏனைய கட்சிகள் மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தி வருகின்றன. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி, மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளை நோக்கி மக்கள் ஆதரவுத் தளம் விரிவடைய ஆரம்பித்துள்ள நிலையில் இக்கட்சிகள் மீதான அரச அடக்குமுறை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், வடக்கில் செயற்பட்டு வரும் தமது உறுப்பினர்கள் மீது பல்வேறு வழிகளில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமது கட்சியுடன் தொடர்புகளைப் பேணிய மக்களிடம் இராணுவத்தினர் தீவிர விசாரணை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மலையகம் பகுதிகளில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி மீதான அரசபடைகளின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.