. அரசியலமைப்பு சீர்திருத்தமும்,
• மக்கள்அபிலாசைகளின் பிரதிபலிப்பும்,
• இனப்பிரச்சினைத்தீர்வும்.
இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்வுகள் தேடப்பட்டன. எனினும் இத்தீர்வு முயற்சிகள் இருவழி பாதையிலான போக்கினாலும், அதிகார மேலாதிக்க சக்திகளின் சுயநலத்தாலும் தோல்வியிலேயே முடிந்தன என்பதை நாம் கண்டுள்ளோம். ஒன்றில் பேச்சுவார்த்தை ரீதியிலான போராட்டம்ஃ (அகிம்சா வழி போராட்டம்); இரண்டு ஆயுதப்போராட்டம் என இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் தேசிய வாதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மக்கள் அபிலாசைகளை முழுக்க முழுக்க பிரதிபலிக்காமையாலும் மேலே குறிப்பிட்ட ஏனைய சிறுபான்மை இனங்களை புறக்கணிக்கின்ற- அதிதீவிர தமிழ் தேசியவாதம், பௌத்த சிங்கள பேரின வாதம் என்பவற்றாலே இனப்பிரச்சினை முடிவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் பலருக்கு சுயநலமான இலாபம் இருப்பது எல்லோருக்கும் தெரியாமல் இல்லை. இங்கு இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தம் எவ்வாறு எல்லா மக்களினதும் அபிலாசைகளை பிரதிபலிப்பதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவும் அமைய வேண்டும் என்பதை உலக அனுபவங்கள், இலங்கையின் அனுபவங்களைக்கொண்டு ஆராய முனைகிறேன்.
இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பேச்சுக்கள் அண்மையில் மிகத்தீவிரமாக பேசப்பட்டு வந்தாலும் அவை மேலாதிக்க சக்திகளின் பேச்சுக்களாகவும், அவர்களின் விருப்பத்துக்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்பதாகவும் அமைந்துள்ளது. இதற்கு தற்போதைய அரசியலமைப்பே காரணமாகும். 1978ம் ஆண்டு 07- 21ம் திகதி து.சு ஜயவர்தன தலைமையிலான குழு வரைந்த ஐ.தே.க அரசியலமைப்பு (ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளைக் கொண்டு அவர்களுக்காக வரையப்பட்ட அரசியலமைப்பு என்பதால் இவ்வாறு கூறுதல் பொருந்தும்) அடுத்த சில மாதங்களிலேயே திருத்தத்திற்கு உள்ளானது அதன் தனிமையில் இவ்வரசியலமைப்பு இன்று வரை 17 சீர்திருத்தங்களைக் கொண்டும் இயங்க முடியாமல் இருக்கிறது.
சீரதிருத்தம் |ஆண்டு | திருத்தம்
1ம் சீர்திருத்தம் 1978/11/20 உயர்நீதிமன்ற அதிகாரம்
2ம் சீர்திருத்தம் 1979/02/26 பாராளுமன்ற உறுப்பினர்கள்
கட்சி மாற்றம்
ஆசன இடைவெளி, பூரணப்படுத்தல்
3ம் சீர்திருத்தம் 1982/08/27 சனாதிபதி பதவி காலநீடிப்பு
4ம் சீர்திரு;தம் 1982/12/23 முதலாம் பாராளுமன்ற பதவி
கால நீடிப்பு
5ம் சீர்திருத்தம் 1983/02/25 சனாதிபதி ஆசன இடைவெளி
பூரனப்படுத்தல்/பதிலீடு செய்தல்;
6ம் சீர்திருத்தம் 1983/08/08 ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும்
இறைமைகும்எதிரானசெயற்பாடுகளை தடை செய்தல்
7ம் சீர்திருத்தம் 1983/10/04 நிர்வாக மாவட எண்ணிக்கையை
அதிகரித்தல்
8ம் சீர்திருத்தம் 1984/03/06 சனாதிபதி சட்டத்தரணியின்
சிறப்புரிமை.
9ம் சீர்திருத்தம் 1984/08/24 பாராளுமன்ற உறுப்பினராக
தெரிவுசெய்ய(முடியாத)
தகைமையின திருத்தம்
10ம் சீர்திருத்தம் 1986/08/06 மக்கள் பாதுகாப்பு
11ம் சீர்திருத்தம் 1987/05/06 மேல் நீதிமன்ற, மேல்முறையீட்டு
நீதிமன்ற அதிகாரம்
12ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட வில்லை
13ம் சீர்திருத்தம் 1987/11/14 மாகாணசபை அரசாங்க
மொழியாக தமிழஅங்கிகாரம்
14ம் சீர்திருத்தம் 1988/06/24 பாராளுமன்ற உறுப்பினர்
எண்ணிக்கை அதிகரிப்பு.
விகிதாசார தேர்தல் முறை
திருத்தம்
15ம் சீர்திருத்தம் 1988/12/17 தேர்தல் விகிதாசார விகித
திருத்தம்
16ம் சீர்திருத்தம் 1988/12/23 நிர்வாக மொழி, சட்டவாக்க
மொழி நீதிமன்ற மொழி
17ம் சீர்திருத்தம் 2001/10/03 அரசியலமைப்பு பேரவை,
18ம் சீர்திருத்தம் 2010/ 09/09 ஜனாதிபதி அதிகாரம் அதிகரிப்பு
ஜனாதிபதி தவனைக் கால வரை
யறை நீக்கம், 17ம் திருத்தம் நீக்கம்
(ஏற்கனமே கொண்டு வரப்பட்ட 18ம்,19ம் சுயாதீன ஆணைக்குழுக்கள் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்ததால் நிறைவேற்றப்பட வில்லை) இச்சீர்திருதிதங்களில் 13ம் சீர்திருத்தமும், 17ம் சீர்திருத்தத்தமும,18ம் சீர்திருத்தமும்; பெரியவை, 14ம் சீர்திருத்தம் மிகவும் முக்கியமான சீர்திருத்த முறை தவிர ஏனையவை எவ்வித தீர்க்கதி தரிசனமும் இன்றி அவ்வப்போதான தேவைக்கு ஏற்பவே கொண்டுவரப்பட்டன 13ம், 17ம,18ம்; சீர்திருத்தங்களும் எமது நாட்டு மக்களுக்கான, அல்லது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அரசியல் தீர்வு காண்பதாக ஒரு முயற்சியாக அல்லாமல ;கட்சி சுயநலனுக்காகவும்,அதிகார ஆசைக்காகவும் இந்திய மேலாதி;க்க அழுத்தத்தினாலும், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவுமே பதவியில் இருக்கும் சனாதிபதி, அதிகாரத்தில்;,இருக்கும் அரசாங்கத்தின் நலனுக்காகவும் கொண்டுவரப்பட்டமை. ஒட்டு மொத்தத்தில் இவ் அரசியலமைப்பு மேலே குறிப்பிட்ட அரசியலமைப்பு ருNP அரசியலமைப்பு எனக் கண்டோம்.
இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வரும் சுயநல வாத பேரினவாத கட்சிகள் தமக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து காலம் கடத்தி ஃநாட்டை நாசமாக்கி மக்களை பிளவுப்படுத்தி வெற்றி கண்டுள்ளன. தற்போது கிளம்பியுள்ள பேச்சும் அதையே பிரதிபலிக்கிறது. இம்முறை சற்று அதிகமாக சென்று சர்வதேசத்தை ஏமாற்றவும் சேர்த்தே அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுமோ என்பது போல் தோன்றுகிறது. இம்முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியின் தவணை காலம் நீடிப்பு, தேர்தல் முறையில் ஏற்கனமே சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்ட வாய்ப்பு ஏற்படுத்திய தொகுதி வாரி தேர்தல் முறைஃ எளிய பெரும் பான்மை தேர்தல் 17ம் சீர்திருத்தத்தின்படி கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தினை அதிகரிப்பதற்கான 18ம் சீர்திருத்தம் வரைவு 2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
எனினும் அது அரசியலமைப்பின் உறுப்புரை 3,4 என்பவற்றை மீறுவதாகவும், சட்டவாட்சி கோட்பாடு, நிறைவேற்று நிர்வாக அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரசியலமைப்பு பேரவையை சட்டத்தை மேவச் செய்வதாலும் அதனை நிறைவேற்ற விசேட 2ஃ3 பெரும்பான்மையும் மக்கள் தீர்ப்பும்; தேவை என பிரதம நீதியரசர் C.J Sarath N Silva தலைமையில்7 நிதியரசர்களைக் கொண்ட () உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. அத்துடன் அந்த வரைபு உயர் நீதிமன்ற அதிகாரத்தையும் மட்டுப்படுத்த முனைந்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
இதே வேளை 19ம் சீர்திருத்தத்திற்கான வரைவு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பெரும் கட்சியைஃசாராத சனாதிபதி பொது தேர்தல் முடிந்த ஒரு வருடத்தில்ன் பின்பும் கூட 2ஃ3 பெரும்பான்மை இன்றி பாராளுமன்றத்தை கலைக்க முடியாமல் இருக்கும் ஏற்பாடு, நம்பிக்கை இல்லா பிரேரணையின் போது ½ மேற்பட்டோர் தீர்மானத்துக்கு ஆதரவளித்திருந்தாலன்றி சனாதிபதி கலைக்காமல் இருக்கும் ஏற்பாடு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் பதவி வெற்றிடமாக்குவதை தடுக்கும் ஏற்பாடு என்பவற்றை பிரதானமாக கொண்டிருந்தது இது மக்களுடைய இறைமை அதிகாரத்தினை பராதினப்படுத்துவதாக அமைவதால் அதை உறுப்புரை 3,4 இன் பிரகாரம் அரசியலமைப்பிற்கு புறம்பானது எனவே, அதனை நிறைவேற்றுவதற்கு 2ஃ3 விசேட பெரும்பான்மையையும், மக்கள் தீர்ப்பு தேவை என உயர் நீதிமன்றம் தீர்த்தது. ளு.N சில்வா தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட குழு தீர்மானித்தது(Sarath N.Silva CJ).
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 18ம் சீர்திருத்த வரைபு அவசர சட்ட மூலமாக விரிவுப்பெயரில் குறிப்பிடப்பட்டு உயர் நீதிமன்றத்திற்கு31.08.2010 இல் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் 2010.09.02ம் திகதி (Determination).). ஜனாதிபதிக்கு பதில் பிரதம நிதியரசர் கலாநிதி சிரானி யு. பண்டாரநாயக்க அவர்களினால் அணுப்பப்பட்டது.(தற்போதைய பிரதம நிதியரசர்) 18ம் சீர்திருத்தம் சனாதிபதியின் பதவிக்கால (இரண்டு தவணைக்கால) மட்டுப்பாட்டை இல்லாதொழித்தது. நீடித்தல,; மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கட்டாயமாக சனாதிபதி பாராளுமன்றதிதிற்கு சமூகமளித்தல், 17ம் சீர்திருத்த அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்து பாராளுமன்ற பேரவையை நிறுவுதல் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது.
மிக முக்கியமாக சனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பு கொண்டிருந்த ஏற்பாட்டினை திருத்தியமைத்து 2 தடவைகளுக்கு அதிகமாக எவ்வளவு காலமானாலும் பதவியிலிருக்கும் ஏற்பாட்டை சேர்த்தது. அரசியலமைப்பின் உறுப்புரை 30(2) சனாதிபதி 06 வருட காலமே பதவி வகிக்க வேண்டும் என கூறுகிறது. இது கட்டாயமான ஏற்பாடாகும்.
உறுப்புரை 31(2) இரு முறை சனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர் மீண்டும் தெரிவு செய்யப்பட தகுதியுடையவர் அல்ல என கூறுகிறது இதுவும் கட்டாயமான ஏற்பாடு (Mandatary) ஆனால் முதலாவது 06 வருட பதவிக்காலத்தில் நான்கு வருடம் கடந்த எச்சந்தர்ப்பத்திலும் அவர் இரண்டாவது பதவிக்காலத்திற்காக சனாதிபதி தேர்தலை நடத்தலாம். இது 5வது வருட ஆரம்பத்தில் அல்லது 6வது வருட ஆரம்பத்தில் இடம் பெற வேண்டும். அதாவது முதலாவதாக பதவி யேற்ற மாதம், திகதியோ, அதற்கு முந்திய திகதியோ பதவியேற்;க வேண்டும் என 2ம், 3ம் சீர்திருத்தங்கள் ஏற்பாடு செய்திருந்தன. இதை மாற்றியமைத்தது 18ம் சீர்திருத்தம்.
அரசியலமைப்பின் உறுப்புரை 83 உறுப்புரை 30(2)ஐ மாற்றுவதற்கோ உறுப்புரை 62(2)ஐ மாற்றுவதற்கோ 3ஃ2 பெரும்பான்மையுடன் மக்கள் அங்கிகாரமும் தேவை எனக்கூறுகிறது. அதில், ‘சனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலத்தினை அதிகரித்தல் தொடர்பாக’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வேறுபாட்டோடு நேரடியாகவும் உடனடியாகவும் தொடர்புபடக்கூடியதாக உறுப்புரை 31(2) 31(3யு) (ய)(1), (11),(டி), (உ) (1) (11) (111), (ன) (1) (11), (ந)(க) காணப்படுகின்றது இவ்வேறுபாடுகளை திருத்துவதற்கு, மாற்றுவதற்கு மக்கள் தீர்ப்பு தேவை என அரசியலமைப்பு வெளிப்படையாக கூற வில்லை. ஆனால் உறுப்புரை 38(2)ஐ இவ்வுறுப்புரைகளிலிருந்து தனித்து வாசித்தால் அதன் பொருளும் நோக்கவும் முரண்படும். எனவே அரசியலமைப்பினையும் சனாதிபதி பற்றிய ஏற்பாடுகளையும், வலுவேறாக்கத்தின் கண்ணோட்டத்தில் பொன்விதி, நோக்கம் சார் விதியிலான பொருள் கோடலைக் கொண்டும், அரசியலமைப்பின் பாயிரம் கூறும,; அரசியலமைப்பபிமானியக் கோட்பாட்டைக் கொண்டும் இவ்வுருப்புரைகளை பொருள் கோடல் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் இவை அப்பட்டமான சர்வதிகார போக்கிற்கும் பிழையான அரசியலமைப்பு பொருள் கோடலுக்கும் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் உயர் நீதிமன்ற Drterminination இதற்கு மாறானதாக அமைந்தமை இலங்கை உயர் நீதிமன்றம் இந்திய உச்சநீதிமன்றத்தைப்போலவோ, அமெரிக்க உயர்நீதிமன்றத்தினை போலவோ Judicial Activism கொண்டதாக அமையாமையையும், மக்கள் மயப்படாமையும், மக்கள் மயப்படாமல் அரசியல் அழுத்தங்களுக்குட்பட்டுள்ளமையை உணர்த்துகிறது.
18ம் சீர்திருத்தம் உறுப்புரை 32(3) இற்கு அமைவாக சனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும,; தற்போதைய நிலையைப்போல பாராளுமன்ற MP கள் விலைக்கு வாங்கி 2/3 பெரும்பான்மையை கொண்டிருக்கும் போது நிர்வாகத்துறைக்கு (கீழ் செயற்படும்) அமைப்பாக பாராளுமன்றம் மாறும் நிலை ஏபடவும் வாய்ப்புள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு பதிலீடாக அதை விட அதிகாரம் குறைந்த சாதாரணமாகவே ஓர் உயிரில்லா அமைப்பாக செயட்பட வென ஓர் பாராளுமன்ற பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இது முன்னையது போல சனாதிபதியின் அதிகாரங்களை தடுக்கவோ சமநிலைப்படுத்தவோ செய்யாது (Check and Balanee) இதன் படி சனாதிபதி, ஆணைக்குழு தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமிப்பார், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றம் நிதியரசர்கள் சட்டமாதிபர், பாராளுமன்ற செயலாளர், கணக்காய்வார் எனும் உயர் பதவிகளையும் பாராளுமன்ற பேரவையிடம் கேட்டு (ஆனால் பரிந்துரைகள், ஆலோசனைகள், விதப்புறைகளை எல்லாம் கேட்கத்தேவையில்லை) நியமிக்கலாம்;. இதன் போது சனாதிபதி பாராளுமன்ற பேரவையை தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை இவ்வேற்பாடு வெளிப்படைத்தன்மை மறுக்கப்படும் நிலையை ஏற்படுத்தும். என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் 18ம் சீர்திருத்தம் 17ம் சீர்திருத்தத்திற்கு எதிரானது (Counter Amendment) 17ம் சீர்திருத்தம் ஐ.தே.கட்சியினரால் பாராளுமன்றதில் பெரும்பான்மை பெற்றிருந்தப்போது நிறைவேற்றப்பட்டது. அது சனாதிபதியாக இருந்த திருமதி சந்திரிக்கா பன்டாரநாயக்க அவர்களுடைய அதிகாரத்தை குறைக்க முயற்சித்தது. 18ம் சீர்திருத்த அந்த மட்டுப்பாடுகளைத்தளர்த்தி மேலும் அதிக அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கு ஒதுக்கியுள்ளது இது சர்வாதிகாரத்தினை வழங்கியுள்ளது என்பது நடைமுறை செயற்பாட்டைக் கொண்டு விளங்கலாம்.
பொதுவாகவே 3ம் உலக நாடுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை பொருந்தாததாகவே அமைகின்றது. அதிகாரம் குவிக்கப்பட்டுள்ள இப்பதவி பாக்கிஸ்தான், லிபியா, போன்ற சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும் அதிகாரத்தில் தொடர்ந்திருப்போர் அதனை தன்வசப்படுத்தவும் துஸ்பிரயோகம் செய்யவுமே முனைவர் என்பதனை இலங்கையை கொண்டு உணரலாம். முன்னாள் சனாதிபதிகளான து.சு துயலயறயசனயயெ சந்திரிக்கா பண்டாரநாயக்க என்போர் இதையே செய்துள்ளனர். பதவிக்கு வர முன்பு இதை மாற்றுவதாக கூறி பின்பு அப்பதவியின் முழுமையான பயனை அனுபவிக்கவேச் செய்கின்றனர். இது அதிகார துஸ்பிரயோகத்திற்கே வழிவகுக்கும் இப்போது சனாதிபதி பதவி. காலவரையறையற்றதாகவும் சனாதிபதியின் குடும்ப ஆதிக்கம் மிகப் பெரிய விருட்சமாக தன் வேரை எங்கும் பரப்பி அதிகாரம், இலங்கை மக்களின் வளங்களையும் சுரண்டுகின்றது. இது இன்னுமோர் மோசமான ஆட்சியையும் சனநாயகத்தின் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்பது உலக அனுபவம். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனநாயக முறைமை கொண்டு வரும் போது அதற்கு,
• வளரும் நாட்டின் பொருளாதார ஸ்தீர தன்மையை நிறுவவும்.
• விரைவான முடிவு, கால விரையத்தை தடுத்தல்
• பொருளாதார செலவுகளை மட்டுப்படுத்தல்
• ஏகமனிதான முடிவை விரைவாக நடைமுறைப்படுத்தல்.
போன்ற மேலும் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. என்றாலும் இவை முற்று முழுதான காரணங்களாக கொள்ள முடியாதவை மாறாக அரசியல் அனுபவமில்லா, சுயநல போக்கில் அரசியலமைப்பினை வரைகின்ற போக்கு பாரதூரமான விளைவினை ஏற்படுத்தி நாட்டின் வளர்சிக்கு தடையாக அமைவதுடன், அது அதிகார துஸ்பிரயோகம், லஞ்ச ஊழல்; அதிகரித்த நாட்டினையே உருவாக்கும் எனவேதான் இலங்கையில் அரசியலமைப்பு வரையக்கூடிய, அனுபவம் கொண்டோர் இல்லை என பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசியலமைப்பில் உறுப்புரை 11 இன் 1ம் பிரிவு நிர்வாக அதிகாரம் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியிடம் ஏநளவநன அவர் நான்கு வருட பதவிகாலத்தை கொண்டிருக்க வேண்டும். எனவும் 22ம் சீர்திருத்தத்தின்பிரிவின் படி எந்த ஒரு நபரும் இரு தடவைகளுக்கு மேல் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது. இயங்க முடியாது எனவும் ஏற்பாடு செய்கிறது இது அதிகார துஸ்பிரயோகத்தினை தடுக்கும் ஏற்பாடாகும். ஒருவர் மொத்தமாக அதி கூடியதாக 8 வருடம் மாத்திரமே பதவியில் இருக்கலாம். இயற்கை மனிதன் தவிர்ந்த செயற்கை மனிதன் சனாதிபதியாக முடியாது என்றெல்லாம் தீர்க்க தரிசனமாக இந்த அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. மிகவும் வரவேற்க்கத்தக்கதும், பின்பற்ற வேண்டியதுமான அரசியலமைப்பு வரைபு உத்தியாகும்.
தேர்தல் முறையினை மீண்டும் நடைமுறைப்படுத்த முனைகின்றதான தேர்தல் சீர்திருத்தம் போன்றன ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. இதே வேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரைக் கொண்ட பாராளுமன்ற றுநளவஅiளெவநச முறைமையை உள்வாங்கவும் பேச்சுக்கள் நடக்கின்றன.
ஏற்கனவே இலங்கை இரு அரசியலமைப்பு வரைபுகளை கண்டுள்ளதுடன் அது சுயநலமான அரசியல் நடத்தையால் கைவிடப்பட்டமையும் அறிவோம் .அவ்வரசியலமைப்புகளில் 1997ல் ஆண்டு வரைபு இலங்கை இறைமையும், சுதந்திரமும் கலைக்கப்பட முடியாத பிராந்தியங்களின் கூட்டு நாடு(Union of Regiorn) ஒன்றியம் என வரையறுக்கிறது. பிராந்திய சபைஃநிர்வாகம் புதிய நாடு ஒன்றை உருவாக்கி பிரிந்து போக முடியாது, தானாக பிராந்திய எல்லையை மாற்றியமைக்க முடியாது, பெயர்களை மாற்ற முடியாது, பிராந்தியங்களை பிரித்தல், இரண்டு மூன்றை ஒன்றாக சேர்க்க முடியாது, என அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது அமெரிக்க, கனேடிய அரசியலமைப்புகளை ஒத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறைமை மக்களிடம் உள்ளதுடன் பாராதீனப்படுத்த முடியாது மக்களின் இறைமை பாராளுமன்றத்தாலும், பிராந்திய சபைகளாலும் மக்கள் தீர்ப்பின் மூலம் பிரயோகிக்கப்படும். நிறைவேற்றுத்தத்துவம் பிரதமர், அமைச்சரவை ஆலோசனையின் படி செயற்படும் சனாதிபதி அதிகாரம் பிராந்திய முதலமைச்சர், பிராந்திய சபை ஆலோசனைப்படி செயற்படும் பிராந்திய ஆளுநர் மூலம் பிரயோகிக்கப்படும். மக்களின் நீதித்துறை தத்துவம் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்டு ஏற்க்கப்பட்ட நீதிமன்றங்கள், நியாய சபைகள் நிறுவனங்கள் ஊடாக பிரயோகிக்கப்படும் பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றமே நேரடியாக பிரயோகிக்கும்.
சனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிராந்திய சபைகளை நிறுவுவார். வட கிழக்கு ஒரே பிராந்திய சபையால் நிர்வகிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை அம்மாகாண மக்கள் தீர்ப்பு மூலம் தீர்மானிப்பர். வேறு வேறு பிராந்திய சபைகள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் ஏற்படுத்த வேண்டும். என மக்கள் தீர்ப்பில் தீர்மானித்தால் அவ்வாரு இரு சபை நிறுவப்பட வேண்டும். என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலதிகமாக அம்பாறை பிராந்திய சபை ஒன்றை உருவாக்க மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அரசியலமைப்பு கூறுகின்றுது.
அதிகாரங்கள் மத்திய அரசு, பிராந்திய அரசு அதிகாரங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை தற்போதைய அரசியலமைப்பின் படியும், சட்டத்தின் படியும் பிரயோகிக்கும்.
2000ம் ஆண்டு அரசியலமைப்பு வரைபும் 1997ம் ஆண்டு அரசியலமைப்பு வரைபை ஒத்ததாக காணப்படுகின்றுது இதிலும் அரசியலமைப்பு பிராந்தியங்களினதும், மத்தியரசினதும் நிறுவனங்களைக் கொண்ட அரசு என்கிறது. பல்லினம், பல மொழி, பல மத தன்மை கொண்ட நாடு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. மக்கள் இறைமை 1997ம் ஆண்டு அரசியலமைப்பு வரைபை போலவே பிரயோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிராந்திய ஆளுனர் தமது அதிகாரத்தை முதல்வர், அமைச்சரவையின்; ஆலோசனைப்படி படி பிரயோகிப்பார். சனாதிபதிக்கு முகவரி இட்டு அனுப்பும் சபையின் பெரும்பான்மையினால் ஏற்க்கப்பட்ட தீர்மானம் மூலம் ஆளுனர் பதவியில் இருந்து நீக்கலாம். பிராந்திய அமைச்சரவை ஆளுனருக்கு உதவிகளும், ஆலோசனைகளும் என அமைக்கப்படும். ஆளுனர் முதலமைச்சரை நியமிப்பார் அவர் சபையின் பெரும்பான்மைப்பெற்றவராக காணப்படுவார்.ஃ வெற்றி பெற்ற கட்சியின் தலைவராக காணப்படுகின்றார். பிராந்திய சபை 1997ம் ஆண்டு வரைபைப் போலவே தனக்கு ஒதுக்கப்பட்ட டுளைவநன அதிகாரங்களுக்குள் நியதிச்சட்டங்கள் இயற்றும் பிராந்திய சபையில் சபாநாயகர் கையொப்பமிட்டால் நியதிச்சட்டம் வலுவடையும்.
ஓவ்வொரு அமைச்சரும் ஒரு நிறைவேற்றுக்குழுவை கொண்டிருக்கும் இதன் தலைவராக அமைச்சர் காணப்படுவார். அமைச்சின என்பன இதன் கலந்தாலோசனையின் பின்பே அறிவிக்கப்படும். இதை அமைச்சரவை நிராகரிக்கும் போது ஊழஅஅவைவநந அதை பிராந்திய சபைகளுக்கு சமர்ப்பிக்கலாம். அரசியலமைப்புக்கு ஒவ்வாதஃ முரணான நியதிச்சட்டம் ஆக்க முடியாது. அவ்வாறு ஒவ்வாத அமைப்பிற்கு நியதிச்சட்டங்களை வென்றாடும் பிராந்திய சபை சட்ட வாக்க அதிகாரத்தின் பாராதீனப்படுத்த முடியாது நியதிச்சட்ட வரைவுகள் குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஆளுனருக்கு வழங்கப்பட வேண்டும். அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அதில் பிரசுரிக்க முன்பு பிராந்திய சட்டமா அதிபர் அதன் அரசியலமைப்பு ஒவ்வாத தனிமை பற்றி பரிசிலிப்பார். அதன் பிறகு உயர் நீதிமன்றத்தை நாடலாம்.
பிராந்திய பகிரங்க ஆணைக்குழு 3-5 ஆளுனரால் பிராந்திய அமைச்சரால் ஆலோசனையின் பேரில் நியமிப்பார். 5வருட பதவிக்காலம் கொண்டது. தினைக்கள தலைவர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்று கட்டுபாடு என்பன பிராந்திய அமைச்சரவை முன்பு வரையப்பட்டது.
இச்சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு வரைபுகள் அலங்கையில் பல்லினத்தன்மை பல் தேசியங்களை அங்கிகரித்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வினை அடைதல், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கிகரித்தலும், பாதுகாத்தலும், நீதித்துறை சுதந்திரம், சுயாதீனத்தன்மை, அரசியல் தலையீடற்ற அரச சேவையை நிறுவுதல் என்பவற்றை அமைக்கவோ பாதுகாக்கவோ முன்வரவில்லை. இது எமது அரசியலமைப்பின் முக்கியத்துவத்தினை அறியாமையினதும் விளைவாகும்.
சனநாயக சித்தாந்தங்களையும், நல்லாட்சி பற்றிய அறிவின்மையும், பிழையாக விளங்கிக் கொள்ளலும். சனநாயகம் என்பது பெரும்பான்மை என்ற கண்னோட்டத்தில் பெரும்பான்மைவாதத்தினைக் கொண்டு ஏனைய சிறுபான்மை இனங்களை நசுக்குதல், இன அடிப்படையில் மக்களை பிரித்து வர்க்கச்சரண்டலை மேற்கொள்ளல் என பெரும்பான்மை வாதம் – பாசிசமாக வளர்ந்து இலங்கையில் சர்வதேச சட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தராதரங்கள் யாப்பு விதிகள், மக்கள் மனித உரிமைகள் யாவும் அப்பட்டமாக மீறப்படுவதோடு. சட்டத்தின் ஆட்சி, ஆயதமுறையிலான ஆட்சியாக மாறியுள்ளது. இதற்கு சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் ஆதிக்கமும், இனவெறியும் காரணமாகியுள்ளது. எனவேதான் மலையக தேசியம், முஸ்லீம் தேசியம் என்பன போதுமான அங்கிகாரத்தினை யாப்பு ரீதியில் பெற முடியாமல் உள்ளது. மலையக மக்கள் அடிப்படை தேவைகள் அற்ற சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் அல்ல சாதரணமாக யாப்பில் உள்ள குறைந்த பட்ச உரிமைகளையேனும் அனுபவிக்கமுடியாத துரதிஸ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையானது மிக நீண்ட போராட்டத்தில் பின்பு மாற்றப்பட வேண்டியது என்பதுடன். சர்வதேச நாடுகளின் உதாரணங்கள், உதாரணமாக சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, பெல்ஜியம், நேபாளம், அமெரிக்கா, லிபிய அரசியல், மற்றும் அரசியலமைப்பு சார்ந்த செயற்பாடுகளிலிருந்தும். கற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச ரீதியாக முள்ளிவாய்க்கால் யுத்தகுற்ற விசாரணையை இலங்கை எதிர் கொண்டுள்ள வேளை இலங்கை மக்களை பிளவுப்படுத்தி இலாபம் சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களின் இராஜதந்திர உத்திக்கு பேரடி விழுந்துள்ளது. இலங்கையில் எல்லாவற்றுக்கும் தடையாகவும் காரணமாகவும் இதுவரை LTTE என கூறிவந்த அரசாங்கங்கள். வேலையில்லா பிரச்சினை, தனியார்மயப்படுத்தல், கல்வி விற்பனை, ஏழை பிள்ளைகள் தொழில் வாய்ப்பினை பின்தள்ளப்படல், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, ஊழல், அதிகார மோசடி, ஆயத அரசியல் கலாசாரம, சட்டத்தை மேவிய செயற்பாடு, அரசியல் மயப்பட்ட நீதித்துறை, வெளிநாடுகளுக்கு இலங்கை நாட்டை விற்றல் என்பவற்றுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றது என்பதை நாட்டு மக்களும், சர்வதேசமும், எதிர்பார்த்தவாறேயுள்ளனர். பதில் கிடைக்காத பட்சத்தில் மக்களின் புரட்சி மூலமாகவே இதற்கு தீர்வு காண்பர்.
S.மோகனராஜன் -LL.B(Hons), DIE(Colombo),DAPS(UK)-
சட்டத்தரணி -நுவரெலியா.