அரசாங்கம் முழு நாட்டையுமே போராட்ட வலயமாக மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட எடுத்தத் தீர்மானத்திற்கு அரசாங்கமே பொறுப்பு. மின்சாரசபையின் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் ஊழியர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டங்களினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை கொள்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
I will give my life to Honourable Tissa Attanayake. Tissa.