அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமாக செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாலியல் வன்முறைச் சம்பவங்கள், கொலைகள் என பல்வேறு குற்றச் செயல்கள் நாட்டில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் அதிகமானவர்கள் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் அவர்களது அடியாட்களுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சுயாதீன காவல்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் வரையில் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க முடியாத நிலைமை நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.oldtamilsong.net/Chandra%20babu1/01Sirippu%20varuthu.mp3
உண்மை தான் தேசிய தலைவரே விரும்பி பதவிக்கு கொண்டு வரப்பட்டவர் ராஜபக்ச, அவரும் தேசிய தலைவரை போல் மொல்லலை மாரியாகவும், முடிச்சு அவிக்காயகவும், யமனாகவும், தானே இருப்பார், இருவரும் ஒரே டைப் கரா கோஸ்டி