அரசாங்கத்தை விமர்சனம் செய்வொரை அடக்கும் நோக்கில் சட்டத்தரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
மனித உரிமை சட்டத்தரணியான குணரட்ன வன்னிநாயக்கவை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்க முயற்சித்திருந்தனர்.
இந்த தாக்குதல் முயற்சியானது, அரசாங்கத்தை விமர்சனம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுத்த சட்டத்தரணிகளில் வன்னிநாயக்க முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஆயுததாரிகள் வன்னி நாயக்கவை தாக்க முயற்சித்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.