ஜனாதிபதிக்கு அடிபணியாத அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சேறுபூசுவதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இணையத்தளத்தின் அலுவலகம் கடந்த 27ம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவின் மேற்பார்வையில், அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார காரியாலயத்தினால் இந்த இணையத்தள செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு 7 ஹேவா மாவத்தையில் வீடொன்றே இந்த இணையத்தளத்திற்கான அலுவலகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அலுவலகம் சோமானந்த தேரரின் தலைமையிலான பிரித் ஓதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடியை வெளிக்கொண்டுவரும் சுயாதீன இணையத்தளமாக இனங்காட்டி, இதன் மூலம் ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடிபணியாது, அரசாங்கத்திற்கெதிராக செயற்படுபவர்களுக்கு சேறுபூசும் நோக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகர் சரித்த ஹேரத் இந்த இணையத்தளத்தின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு ஆசிரியராக தெசதிய என்ற சிங்கள சஞ்சிகையின் ஆசிரியர் ஒருவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.