விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ரியூண் விடுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் விடுதியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்மநாதன், மலேசிய தலைநகர் கோலாம்பூரிலுள்ள ரியூண் விடுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவரது செல்லிடப் பேசிக்கு வந்த அழைப்பிற்கு பதிலளிப்தற்காக வெளியே வந்த போது கடத்தப்பட்டதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக விடுதி அதிகாரிகள் உள்ளக விசாரணையை நடத்தியுள்ளனர்.
இதன்போது சீ.சீ.ரி.வி. வீடியோ கமெராக்களில் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லையென ரியூண் விடுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்மநாதன் விடுதிக்கு வந்துசென்றதாகவோ அங்கு கைதுசெய்பய்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று விடுதியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விடுதியின் சீ.சீ.ரி.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் பதியப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கோலாம்பூரிலுள்ள ஏனைய விடுதிகளுடன் ஒப்பிடுகையில், தமது விடுதியில் அதிகளவான கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், விடுதிக்கு வாகனத் தரிப்பிடம் இல்லாததால் கே.பி. விடுதியின் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைதுசெய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கே.பி. என்றவொரு நபர் தமது விடுதியில் தங்கியிருந்தாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரியும் தங்களிடம் விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊடகங்களில் தமது விடுதியின் பெயர் வெளியானமையால், தாம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கே.பி. தமது விடுதியில் தங்கியிருந்திருந்தாலும், அவரது சொந்தப் பெயரை பயன்படுத்தியிருக்க மாட்டாரென்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அதனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் இனங்காண முடியவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கைதுசெய்யப்பட்டாரா அல்லது தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சந்தேகங்கள் வலுத்துவருகின்றன.
எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை தனியாக வந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கே.பி. தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் வரையில், இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள்கூட கே.பி.யின் விடயம் குறித்து அறிந்திருக்கவில்லையெனவும் அந்தளவிற்கு இந்த விடயத்தில் இரகசியம் பேணப்பட்டுள்ளதாகவும் அந்த இரகசியத் தகவல் மேலும் தெரிவித்தது.
இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய, கே.பி. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
IF WE LOOK BACK IN OUR LIFE SOMEONE COULD HAVE BEEN CHEATED US,THEY MAYBE VERY CLOSE TO US.WE ALL HAVE A EXPERINCE IN THIS.FRUTAS,JUDAS,MANY MORE IN HISTORY.KP PATHMANATHAN ANOTHER KAKAI VANNIAN IN TAMIL HISTORY.WITHOUT IT WOULDNT THIS EASY,BECASE WE KNOW WHAT THEY REALY LIKE,THEIR THEORY IS KILL TEN ENEMY BEFORE YOU DIE SO THEY UNREACHABLE,TO REACH THEM YOU NEED PEOPLE LIKE KP PATHMANATHAN.HERE IS HE WAS A GREAT INFORMER AND BETRAYER,WHO BETRAYED HIS FIRST FRIEND AND HIS FAMILY,NOT ONLY THAT WHOLE TAMIL COMMUNITY.
TIGERS WASNT CORRECT THEIR MISTAKES AND IN THE END TAMIL POPULATION WAS HATED THEM BUT WHATEVER WE MAY SAY THINGS MAJORITY WHOM ACCEPT THE PIRABAHARAN LEADERSHIP,SO THEY CANT BE WRONG, ARENT THEY?ARE WE REALY CELEBERATING THE TIGERS DEFEAT?
I THINK WE PUT MASK ON OUR FACES THAT HOW WE ARE,WE NEVER TELL THE TRUTH TO ANYONE ONE LIE AFTER ANOTHER LIE,
TO BE HONEST,I JUST BLURT OUT WHATEVER COMES TO MIND,MATHIVATHANI WHERE WE COME FROM AND HER CHILDRENS DIED ON THIS WAR EVEN THOUGH THEY CAN BE HAD THEIR BETTER LIFE ELSE WHERE.WHY,WHY, THEY DIED DO WE HAVE A ANSWER,DONT WE HAVE A ANSWER?
IS THAT MR PIRABAHARAN FAULT.
BUT SOME OF US HAPPY ABOUT HIS DEATH,INCLUDING KP PATHMANATHAN.THAYA MASTER,GEORGE,KARUNA,AND ME.