இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் கோபி உள்ளிட்ட மூவர் நெடுங்கேணியில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற கிராமத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவப் பட்டாளத்தால் சுற்றி வளைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவர்தில் மூன்று போராளிகளும் ஒரு இராணுவமும் உயிரிழந்துள்ளது.
அப்பன், தேவியன், கோபி ஆகியோரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இத் தகவல்கள் எவ்வளவு உண்மையானது என்ற கேள்விகளுக்கு அப்பால், இந்த மூவரும் போராடத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தனர். இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல வாய்ப்புக்களிருந்தும் அதனை நிராகரித்தவர்கள். இவர்களின் உணர்வு பெறுமதி மிக்கது. மக்களின் அழிவைக்கூட மூலதனமாக்கிக்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இந்த உணர்வே ஆயிரம் போராளிகளுக்கு ஒப்பானது.
முன்னை நாள் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் இலங்கை அரச படைகளால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். வாழ்வா சாவா என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் அழிப்பு நடவடிக்களின் பின்னர் கொலைவெறியூட்டப்பட்ட இலங்கை அரச படைகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், அப்பாவி மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டும் மீண்டும் முன்னைய வழிகளிலேயே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் போராளிகள் உணரத் தலைப்படுதல் நியாயமானதே.. தமது வாழ்நாளைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த போராளிகள் மத்தியில் இவ்வாறான உணர்வுகள் இயல்பானதே, எது எவ்வாறாயினும் இலங்கை அரச பாசிசம் முன்னெப்போதையும் விட தனது ஒடுக்குமுறை இயந்திரங்களைப் பலப்படுத்தியுள்ளது.
அன்னியர்களாலும் ஏகாதிபத்திய நாடுகளாலும் கையாளப்பட்டு இறுதியில் அவர்களுக்குத் தேவையற்ற வேளையில் அழிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் புதிய அரசியலுடனும் புதிய வழிமுறைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். மிகப்பெரும் இராணுவத்தின் ஒடுக்குமுறை இயந்திரத்தை எதிர்கொள்வது என்பது இயலாத ஒன்றல்ல. ஆனால் அதற்கான புரட்சிகர அரசியல் வழிமுறை திட்டமிடப்பட வேண்டும், சிறிய இடைவெளிகளைக் கூடப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டுவது அடிப்படையானதாகும்.
இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்ச அரசின் மீது வெறுப்புணர்வு கொண்டவர்களே. தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களும், மலையகத் தமிழர்களும், சிங்கள உழைக்கும் மக்களும் ராஜபக்ச அரசின் மீது வெறுப்புக்கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரோடும் இணைந்த அரசியல் திட்டம் ஒன்றே ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் ஆரம்பமாக அமைய முடியும். இதனூடாக மக்களை அணிதிரட்டுவது எவ்வாறு என்பதைத் திட்டமிட வேண்டும். மக்கள் பற்றுள்ள உலகளாவிய ஜனநாயக வாதிகளையும், மனிதாபிமானிகளையும் வென்றெடுக்கும் வழிமுறைகளைக் கண்டறியவேண்டும்.
இந்திய மற்றும் மேற்கு ஏகாதிபத்தியங்களால் எந்தக் நேரத்திலும் சிதைக்கப்படக்கூடிய போராட்டத்தைப் சுற்றிப் பாதுகாப்பு அரண்களாக உலக முற்போக்கு சக்திகளோடு பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
2009 இற்குப் பின்னர் இழந்துபோன ஐந்து வருடங்கள் இவற்றிற்குப் போதுமான இடைவெளியைத் தந்திருந்தும் பிழைப்புவாத அரசியல் தலைமைகளால் இவை அனைத்தும் சிதைக்கப்பட்டன.
புதிய போராளிகள் ஆயுதங்களிலிருந்து போராட்டத்தை ஆரம்பிப்பது தவறானது ஆனல் போராட்டத்தின் தற்காப்பு யுத்தம் தவிர்க்க முடியாத வன்முறைக்கே மக்களை அழைத்துவரும் என்பதை மறுக்கமுடியாது.
ஆக, இலங்கையிலோ அன்றி இலங்கைக்கு வெளியிலோ தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து சிந்திக்கும் செயற்படும் ஒவ்வொருவரும் இந்த அடிப்படைகளை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வீர மரணமடைந்த போராளிகளுக்கு இனியொருவின் விர அஞ்சலி!
40 years political struggle is over.
Next 40 years arm struggle is over on May 2009.
Next 40 economic struggles started on June 2009 and will end on May 2049.
With in 35 years handful of Diaspora Tamils has to become members of Bilderberg Group and Free Mason. Like Israel, Tamil Eelam comes to reality.
If Tamils do not understand this after June 2049 Sri Lankan text book will tell once upon a time Tamils lived in this island.
தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருப்பவர்கள் வேற்றுமொழியினர். வைகோ,விஜயகாந்த,ஞானதேசிகன் இவர்களும் வேற்று மொழியினரே.இவர்கள் தமிழ் இனத்திற்கு எதிரானவர்கள்.இந்த உண்மை தெரியாமல் இவர்களை நம்பியதால் பிரபாகரனுக்கு/ தமிழினத்திற்கு பேரழிவு ஏற்பட்டது என்பதை முதலில் உணர வேண்டும்.இரண்டாவதாக,பழ.நெடுமாறன்,இராமதாஸ்,திருமாவளவன்,சீமான் இவர்களை மீண்டும் நம்புவது தற்கொலைக்கு ஒப்பாகும். தமிழ்நாட்டில் தமிழ் கேசியம் தளிர் விட்டு தளிர் விட்டு கருகுகிறது.வீரலெட்சுமியால் உருவாக்கப்படும் தமிழ்தேசியம் கருகாமல் இருக்க அனைத்து தமிழர்களும் ஆவன செய்ய வேண்டும்.
பிரபாகரன் வெளினாட்டிலுள்ள தலைவர்களை நம்பி போராட்டத்தை ஆரம்ப்த்தவருமல்ல , போராட்டத்தை வழிநடத்தியவருமல்ல
போராட்டதின் மீது அவர்கள் கொண்டிருந்த உறுதியான உணர்வுக்கும் தன்னலமற்ற தியாகத்திற்கும் வீர வணக்கங்கள்’!!!
கிட்லரின் பெயரை சொல்லி மீன்டும் ஒரு நாசி குறுப் உருவாகுவதை ஞயப்படுத்துவது போல் உள்ளது .தமிழனின் ஞாயமான தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்கமுடியாத இந்த தரங்கேட்ட அரசும் அதன் கை கூலிகலாக செயள் பட்ட இந்த புலிகள் அமைப்பும் என் பார்வையில் இரு களுகு கண்கள் ….இந்த இரு தரங்கேட்ட நாசிகளை அழிக்கும் காலம் நெரிங்கிவிட்டோம் என்பதையே என் மணம் சொள்ளுகிறது .சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முட்டாள்கள் என்று நீங்கள் நினைத்தாள் .கார்ல் மாக்ஸ் துரோகியே …..
இரு பெரும் நாசிகளுக்கும் நாட்கள் என்னும் காலம் வெகு தொலைவில் இல்லை .இந்திய தேர்தலுக்கு இப்படியும் ஒரு நாடகம் அரங்கேறும் என்பது நான் என்னிய ஒன்று .புலியையும் அரசையும் இயக்குவது யார் என்பதையும் யாம் அறிவோம்
இப்படியே சொல்லிக்கொண்டிருப்போம் எல்லாம்நடந்து விடும்.
அப்படியே “எல்லாம் அவன் செயல் ” என அடித்து விடுவதுதானே ..
நேர்மை என்பது என்னத்தில் இருக்க வேண்டும் கடன் பட்டால்தான் வலி தெரியும். நாம் உரிமையை பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .லொல்லுக்கு மட்டும் குறை இல்லை நம் இனத்தில்
நேர்மை என்பது உங்கள் எழுத்திலும் இல்லை , எண்ணத்திலும் இல்லை .
நீங்களாநேர்மையை பற்றி பேசுவது ?
##உரிமையை பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .##
அதுதான் எல்லாம் தானேநடந்து விடுமே . பின்பு எதற்கு உரிமை பிச்சை எடுக்க வேண்டும்?