மிக முக்கியமாக கருதப்படும் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
உ.பி. அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதி(2007-2012) அகிலேஷ் யாதவ்(2012-2017), யோகி ஆதித்யநாத்(2017-2022) ஆகிய 3பேருமே தேர்தலில் போட்டியிடாமலே எம்எல்சியாகி அதன்மூலம் முதல்வராகினர்.
இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி போட்டியிடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. அதே போன்று காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான ப்ரியங்காகாந்தியும் போட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் இதை வெளியிட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரியங்கா ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கேற்ப இப்பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, 50 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
அதுபோல், இன்னும் 50 வேட்பாளர்கள், இளைஞர்கள் ஆவர். உன்னா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான இளம்பெண்ணின் தாயார் ஆஷா சிங், உன்னா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது இந்தியா முழுக்க கவனம் பெற்றிருக்கும் நிலையில்,
அயோத்தியில் இருந்து பின்வாங்கிய யோகி ஆதித்யநாத்
அயோத்தி என்பது இந்துத்துவத்தின் அடையாளம் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பாஜக செல்வாக்குப் பெறும் என நம்பிக்கொண்டிருந்த நிலையில்
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தலில் 40 பஞ்சாயத்து இடங்களில் வெறும் 8ல் மட்டுமே பாஜக வென்றது. அந்த மாவட்டத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி செல்வாக்குப் பெற்றுள்ள அயோத்தியில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்பதால் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.இதில் கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி பாஜகவின் வெற்றிக்கு பெரும் சவாலைக் கொடுத்து வருகிறது.