அம்பாறையில் அட்டளாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அஷ்ரப்நகரில் மக்கள் வசித்து வந்த நிலப்பகுதியிர் இராணுவ முகாங்கள் அமைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
இராணுவ மயமாக்கப்படுள்ள இலங்கையில் மக்கள் மீதான போரைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவம் மக்களின் குடியிருப்புக்களை அபகரித்து வருகிறன்றது. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன.
அம்பாடையில் பயிர்ச்செய்கைக்குரிய நிலங்களையும் மக்கள் குடியிருப்புக்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல் தலைமைகள் இவ்வாறான போராட்டங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அமரிக்காவையும் இந்தியாவைவும் நம்பினால் போதுமானது என மக்களைக் கோருகிறார்கள்.