டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர் சமீபத்தில் டில்லியின் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதே நாளில் டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குள் நுழைந்த சில தமிழார்வலர்கள் அங்குள்ள சில பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய டில்லி போலீசார் தமிழகம் வந்துள்ளனர். இவ்வழக்கில் தானும் கைது செய்யப்படுவோமோ என்று உணர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி “இது பொய்வழக்கு என்றும். அத்தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும். இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கை விசாரித்தது. நீதிபதி கே.எம்.பாஷா. இன்று இவ்விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி கே.எம்.பாஷா அறிவித்து விட்டார். இந்நிகழ்வு இன்று உயர் நீதிமன்றத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்க இது குறித்து முக்கியமான மூத்த வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் ” இதில் இலங்கையின் துணைத்தூதர் அம்சாவின் கரங்கள் இருக்கிறது. சென்னையில் இருந்து பதவி உயர்வு பெற்று அவர் சென்று விட்டாலும்,அவர் இன்னமும் இங்கே ஊடகங்களிலும், அரசு மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கோடே இருக்கிறார். நீதிபதி கே.எம்.பாஷா அம்சாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும். இவ்வழக்கு தொடர்பாக பாஷாவுக்கு தொலைபேசிய அம்சா, சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டாம். என்றும்.தனது வேண்டுகோளை நிச்சய்மான முறையில் பரிசீலிக்கும் படியும் கேட்டுக் கொண்டாராம். ஆனால் இத்தகவல் நீதிபதிகளுக்கு மத்தியிலேயே கசிந்து பரபரப்பாக அவர்களுக்குள் பேசி அது வழக்கறிஞர்கள் வரை தெரிந்து விட்டதால். இதற்கு மேலும் இவ்வழக்கை தான் விசாரித்தால் சர்ச்சைகள் வரும் என்பதால் பாஷா ஒதுங்கிக் கொண்டார்” என்று அந்த மூத்த வழக்கறிஞர் நம்மிடம் தெரிவித்தார்.
என்னடா கூத்து இது? நீதித்துறை சுதந்திரம் என வாய்கிழிய பேசும் நாம் ஓர் அந்நியன் அதுவும் பேரினவாதத்தின் கைகூலி இப்படி பாதாளம் வரைக்குமா? கேட்கவே வெட்கமாய்த்தான் இருக்கிறது. நீதிபதி தாமாகவே முன்வந்து விலகியதின் மர்மத்தினை விளக்க வேண்டியது நீதித்துறையின் கடமை அதனை தெரிந்து கொள்ள முயற்சிப்பது குடிமக்களின் உரிமை.