உலகசமானத்துக்கு முன்நின்று உழைக்கும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனுசரணையாளராகப் பணிபுரிந்தநாடு நோர்வே என்பதை அனைவரும் அறிவர். சொண்டில் செண்டு கொண்டுதிரியும் சமானானப்புறா இவர்களின் தோழில்தான் அமர்ந்திருக்கிறதுதோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை உலகிலேயே இராணுவத்தளபாட தொழில்நுட்பத்தில் மிக மிகத் தலைசிறந்த முதலாவதுநாடு நோர்வே என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டதை யார் அறிவார். தாங்கிகளுக்கான லாசர் ஏவுகளைத் தொழில்நுட்பத்தில் ஒரு சாதனையே படைத்தவர்கள் இவர்கள். ஏவுகணையின் நுணிப்பக்கத்தில் அமைந்திருக்கம் கணிப்பியை துல்லிதமாக வடிவமைத்து குறிகளைத் தவறாது கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பச்சாதனையாளர்களும் இவர்களே.
40வருடகாலமாகப் பாவித்துவந்து பீரங்கிகளான எம் 109 அட்லறிகளுக்கு மாற்றீடாக அச்சர்வகைப் பீரங்கிகளை இன்று நோர்வே வடக்குக்கு எடுத்துச் சென்று பரீட்சிக்கிறது.
பழை இப்பீரங்கிகள் பட்டியில் ஓடுவதால் அதை எடுத்துச் செல்வதற்கு பாரஊர்திகள் தேவைப்படும். அவை அசைவுதிறன் குறைந்தவையே. இது அப்படி அல்ல. இலகுவாக இடம்மாற்றக்கூடியவாறு பாரவூர்திப் பண்புடைய வாகனத்திலே பொருத்தப்பட்டுள்ளது. 50மைல்களுக்கு எந்தவித பிரச்சனையும் இன்றி இடம்மாற்றவல்லது. இதனுடைய நீளம் 8மீற்றர்கள் மாத்திரமே. ஆனால் 60கி.மீற்றர்களுக்கு அப்பால் 155 மிமி நீளமுடைய கினைட்டுக்களை ஜீபிஎஸ் இன் உதவியுடன் எறியவல்லது. அச்சர்வகை கட்டமைப்புக் கொண்ட பீரங்கிவகைகள் தீச்சுவாலை அட்லறிகள் என்றே அழைக்கப்படும். இந்த அச்சர்வகை பீரங்கிகளை அயல்நாடான சுவீடனும் தற்போதுதான் பயிற்சிக்கு உள்ளமர்த்தியுள்ளது.
இதுதான் உலகிலேயே முதன் முதலான சுயமாகத்தானியங்கி குறிகளைத் துல்லிதமாகக் கண்டறிந்து தாக்கும் பீரங்கிகள் ஆகும். எந்தவிதான களநிலைக்கும் தாக்குபிடிக்கும் தன்மைகளையும், அலகுகளையும் கொண்டது. இந்தப்பீரங்கிகளுடன் ஒப்பிடும் போது பட்டியில் இயங்கும் பீரங்கிகள் அசையும் வேகம் மிக மிகக்குறைவானதே. எம் 109இரப்பீரங்கிகள் குளிர்கூடிய பனிக்காலங்களில் பிரச்சனை தரக்கூடியது, ஆனால் இவை காலநிலையிலும் சரியானமுறையிலும் இலகுவாக இடம்மாற்றக்கூடிய வகையிலுமே அமைக்கப்பட்டுள்ளன. பீரங்கிமுனையும் அதைத்தாங்கும் உடலும் பின்புறமாக அமைந்தாலும் வாகனத்தை விட உயரமாகவும், பின்புற உதைப்பைத் தாங்கவல்லதாகவும் அமைக்கப்பட்டதால் ஊர்திக்கு எந்தவித பாதிப்பையோ தாக்கத்தையோ கொடுக்காதவாறு அதன் உடலமைப்புக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்டு 30செக்கன்களில் கிரனைட்டுக்களையோ ரொக்கட்டுக்களையோ எறியவல்லது.
இதில் மேலும் சுடுதிசைமாற்றி, வெடிமருந்துகளின் வெப்பநிலை அளவீடு, கிரனைட்டுக்களோ, ரொக்கட்டுக்களோ புறப்பட்டுச் செல்லும் ஆரம்பவேகம் என்பன சரியாக அளந்து காட்டும் இலத்தின் அமைப்பு சிறப்பாக இதற்கு அமைக்கப்பட்டுள்ளது. சுடுதிசைமாற்றி கிரனைட்டுக்களை எறியும் திசைமாற்றும் கட்டுமைப்பை பி எம் எஸ் ஆட்டிலறி ஊடின் என்பர். இது நோவேயிலுள்ள கொங்சிவிங்கர் ஆயுதத்தொழிற்சாலையிலேயே தாயாரிக்கப்பட்டது. இந்த பிஎம்எஸ் தொகுதியினுள் கட்டளைக்கருவிகள், அவதானிக்கும் கருவிகள், கொமாண்டே அமைவிடம், ஆயுதங்கள் அனைத்தும் உள்னுளைவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பீரங்கியின் கூரைப்பகுதியில் ஆர் டபிள்யூ எஸ் எனும் தொலையியக்கு கருவி (பீரங்கிக்குள் ஆள் இன்றி) பொருத்தப்பட்டமையால் இந்தப்பீரங்கியை தொலையியக்கு ஆளிகளால் (ரிமோட் கொன்றோல்) இயக்கலாம். இது அர்ச்சர் பீரங்கிகளின் கௌரவத்தை நிலைநிறுத்தும் வகையில் போர்பொஸ்சால் கட்டமைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையானது அமெரிக்காவின் ரைத்தனோன் தொழிற்சாலையுடன் சேர்ந்து கடசி 10வருடங்களாக எக்ஸ்கலிபர் அமினிசன்களைத் தாயாரித்துவருகிறது. மரபுவளி பீரங்கிகள் அதிகூடிய தூரத்தாக்கு இலக்கு 18கி.மீ மட்டுமே என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. அச்சர் அட்லறிகளோ 60கிமீ தூரத்தாக்கு திறன் கொண்டவை.
ஆப்கானிஸ்தானில் பாவிக்கப்பட்ட எக்ஸ்கலிபர் அமினிசனை கீழே காண்க:
சமாதானப்புறாவை ஒருதோழில் காவும் நோர்வே மறுதோழில் கொலைக்கருவிகளையும், அதைத்தயாரிப்பதில் வல்லமையையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. அகிம்சையை “உலகிற்கே தந்த”, “அகிம்சா மூர்த்தியின்” தேசம் படுமோசான கொலைக்கருவிகளை மலிவாகத் தயாரிக்கும் நாடாக மாறியுள்ளது. அமைதி என்பது ஆயுதங்களின், ஆயுதத்தொழில்நுட்பங்களின் வல்லமையில்தான் தங்கியுள்ளதா?
கீழுள்ள காணொளியைக் காண்க.
நோர்வே நக்கீரா this is not news to us, it is known , write something which is worth to read, this article first appeared in the aftenposten ,
முதுவுக்குப் உது பழைய நியூசாக இருக்கலாம் எமக்கு இது புதுசு. எங்களுக்கு உந்தப்பாசை தெரியாது. இதை நாங்கள் எப்படி அறிவது? இப்படியா கட்டுரைகள் தமிழில் வருவதை வரவேற்கிறோம்
Then he should have mentioned that this is a translation, should have told, that he is merly translating, this is not the first time this gentleman, claim honour for some ones work,
இது தனிய ஒருகட்டுரையின் மொழிபெயர்பல்ல. பலகட்டுரைகளின் திரட்டு மட்டுமல்ல எனது மொழியாடலில்தான் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிக. செய்திகள் திரட்டப்பட்ட இடங்களைக் குறிப்பிடாது இருந்தது தவறாக இருக்கலாம். இது ஒரு ஆய்வுக்கட்டுரை அல்ல வெறும்செய்தி மட்டுமே. எங்கே தகவல்திரட்டினேன் என்பதை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
முத்து ஐயா, நக்கீரரிடமே பிழைபிடிக்க புரப்பட்ட புண்ணாக்கு நீர்! நான் அறிந்த வரை நோர்வே நக்கீரர் ஒருநேர்மையானவர். பொய் பேச்சு இல்லாதவர், இலக்கிய தர்மத்தை மதிப்பவர் அவர் இஙகு உள்ள போலி இலக்கியவாதிகள் போல் கள்ளத்தனம் செய்ய மாட்டார்!
பொறாமையால் பொய்யுறை வேண்டாம்.
நான் நோவேயியமொழில் வாசித்து அறிந்த விடயத்தை எனது மொழிலும் எனது கருத்திலுமே எழுதியுள்ளேன். நான் இந்தப்பீரங்கியைச் செய்தவனல்ல. அதனால் தேடித்தான் எடுக்கவேண்டும். நான் எழுதிய தொழில்நுட்ப தரவுகள் (ரெக்னிக்கல்டேட்டாஸ்) 1சஞ்சிகையிலும் ஒரு இணையததிலும் ஒரேமாதிரியே உள்ளன. முது சொல்கிறார் நான் அப்தன்போஸ்டனில் இருந்து கொப்பி அடித்தேன் என்று. ஆதலால் இநத 3 செய்திகளிலும் யார் இதை முதல் எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை. படங்கள் பிரதிசெய்யப்பட்ட இடம்அதிலேயே உள்ளது. செய்தி எனது சொந்தமொழியாடலிலே எழுதப்பட்டது. அதுமட்டுமல்ல ஆதாரமில்லாத குற்றச்சாட்டாக இது முதல்தடவை இல்லை என்பவர் அதற்கான ஆதாரத்தை வைப்பது அவசியமல்லவா? ஏதோ காழ்புணர்வு என்ன செய்வது. வைகைப்புயல் மிக்க நன்றி என்னைப் புரிந்து கொண்டமைக்காக.
வைகைபுயல் வடிவேலு போலுள்ளது தங்கள்நகைச்சுவை— ஒருநேர்மையானவர். பொய் பேச்சு இல்லாதவர், இலக்கிய தர்மத்தை மதிப்பவர் அவர் இஙகு உள்ள போலி இலக்கியவாதிகள் போல் கள்ளத்தனம் செய்ய மாட்டார்!-
— அட என்ன கோமளித்தனம்
இந்த செய்தியானது முதன்முதலில் ஏபிசி செய்திகளின வெளியானது. அதன்பின்புதான் ஆப்தன்போஸ்தனில் வெளியானது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் அப்தன்போஸ்தனை நான் பார்க்கவே இல்லை.இந்த பீரங்கிகளைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள விருப்பதாக பாராளுமன்றத்திலும் பலஆண்டுகளுக்கு முன்னரே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப்பீரங்கிகள் பற்றி பயன்பாட்டுக் குறிப்புகள் நோர்வேயிய மொழிதெரிந்துவர்கள் ஏற்கனவே அறிந்தது தான்: ஆனால் அறியாத விடயம் என்ன வென்றால் அது சென்ற கிழமைதான் வடநோவேயில் பரீட்சிக்கப்பட்டது. இது முழுமையான மொழிபெயர்ப்புமல்ல. எனது கருத்துடனும் வேறு திரட்டப்பட்ட செய்திகளுடனுதான் எழுதப்பட்டது. முக்கியமாக ஏபிசி செய்திகள்; ரெக்னிஸ் ஊக்கபிளா (தொழில்நுட்ப கிழமை நாளிதழ்) கட்டுரையில் திரட்டப்பட்ட தகவல்குறிப்பு இல்லை என்று முது குறைகூறுவதால் இந்தத் தகவல்களையும் சேர்த்துக் கொள்ளவும: கட்டுரையை வாசிப்பர்கள் நன்கு அறிவர் இது எனது கண்டுபிடிப்பல்ல திரட்டப்பட்ட செய்தி என்பதை சரியாக வாசிப்பவர்களால் அறியமுடியும்.
நீங்கள் கூறுவதுபோல் நான் எந்த ஒரு ஒனரையும் எதிர்பார்க்கவில்லை. தொழில்நுட்ப தரவுகள் படங்கள் மட்டும் எங்கு திரட்டப்பட்டன எனப்பினநோட்டத்தில் எழுதியுள்ளேன். அப்தன்போஸ்தனில் எப்போ இதுவெளியானது என்ற இணைப்பைத்தரவும் அதில் எவ்வளவு மொழிபெயர்கப்பட்டுள்ளது என்பதையும் தரவும்.நான் வாசிக்காத பத்திரிகையில் இருந்து எப்படி மொழிபெயர்ப்புத் செய்தேன் என்பது உலகஅதிசயங்களில் ஒன்று. இது முதல்தடவை இல்லை என்னும் முது அதற்கான ஆதாரங்களை வைப்பது அவசியம்.
`வை, கை` என்பதை திருப்பிப் போட்டால் கை வை என்பதாகக் கொள்ளலாம். ஆகவே உமது உள்ளார்த்தம் புரிகிறது. பெரிய கில்லாடி நீர்.
நோர்வேயின் முதன்மை இலக்கிய்வாதியும், நோர்வேயின் முதன்மை நேர்மைவாதியுமான நக்கீருக்கு……
#/ இந்த செய்தியானது முதன்முதலில் ஏபிசி செய்திகளின வெளியானது. அதன்பின்புதான் ஆப்தன்போஸ்தனில் வெளியானது. /#
என்று முதல் வரியில் எழுதி அடுத்த வ்ரியில்
/# அப்தன்போஸ்தனை நான் பார்க்கவே இல்லை./#
நீங்கள் குறிப்பிட்டதுபோல் அப்தன்போஸ்தனை நான் பார்க்கவே இல்லை.
என்று எழுதுகிறீர். அப்படியானால் ஆப்தன்போஸ்தனில் வெளியானது உங்களுக்கு எப்படித் தெரியும்?
ராஜன்! பின்பு பார்த்திருக்கலாம் அல்லவா. தூ எனும் தொழிலநுட்பச்சஞ்சிகையிலும் ஒரேமாதிரியான செய்தி வந்துள்ளது. உரிமை யாருக்கு?
இதை எழுதும்போது அப்தன்போஸ்டனைப் பார்கவே இல்லை. அந்தச் செய்தித்தாளை என் வழமை வாசகத்தில் கொண்டிருக்கவும் இல்லை. தாங்கள் தவறாகவே புரிந்துள்ளீர்கள்.
//நோர்வேயின் முதன்மை இலக்கிய்வாதியும்இ நோர்வேயின் முதன்மை நேர்மைவாதியுமான நக்கீருக்கு// இது நீங்கள் எழுதியதே. இதற்குத் தகுதியும் எனக்குக்கிடையாது.
மதுவோ முதுவோ தெரியவில்லை. மொழிபெயர்ப்புப்பற்றிய அறிவும் அனுபவமும் உங்களுக்கு எவ்வளவு உண்டு என்பதை யான் அறியேன். ஆனால் எனக்கு அதில் அனுபவமும் போதிய பயிற்சியும் உண்டு. உங்களது சொந்தக்கருத்தையே தமிழில் எழுதமுடியாத நீங்கள் என்னை எழுத்துகளால் மற்றவர்களின் வேலையை நான் பெயர் சம்பாதிக்கிறேன் என்று கொச்சைப்படுத்தினீர்கள். ஊடகங்கமோ ஊடகவியலாளனோ ஒரு செய்தியில் எத்தனை சதவீதத்தை நேரடியாகப் பிரதி செய்யலாம் என்பது தெரியுமா? ஒரு மொழிபெயர்ப்பு என்றால் என்ன எப்படி அது இருக்கவேண்டும் என்ற வரைபு இலக்கணம் தெரிந்திருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டீர்கள். சரி இது எந்த வகையான படைப்பு என்பதையாவது அறிவீர்களா? இந்தச்செய்தியை இன்று நான் பல நோவேயிய தளங்களில் பார்த்தேன் அத்தனையும் 100சதவீதக் கொப்பியாகவே உள்ளது. இதை யார் உரிமைகொண்டாடுவது. இங்கே எனது எழுத்துவளக்கில் என்கருத்துடன் கூடி எழுதியதை பிரதி என்பது வேடிக்கையானதே. காகம் கறுப்பு என்பதை எங்கு எடுத்தேன் படித்தேன் என்று எழுதவேண்டிய அவசியம் இல்லை. ஊடகதர்மம்: மொழிபெயர்ப்பு வரையறைகளை நான் தாண்டவில்லை. நீங்கள் எதை எண்ணினாலும் கவலையும் இல்லை. தொழில்நுட்பத்தரவுகள் சேகரிக்கப்பட்டவை என்றாலும் இந்தப்பீரங்கி இவ்வளவு தூரம் கிரனைட்டுக்களை எறியவல்லது என்று சொல்வதற்கு ஆதாரம் வைக்கவேண்டியதில்லை. இந்தப் பீரங்கியைப் பற்றி இதைச் செய்தவர்கள்தான் எழுதவேண்டிய அவசியமும் இல்லை. நான் நோவேயிய மொழில் வாசித்த ஒரு விடயத்தை தமிழில் என்மக்களுக்கு அறியத்தருவதற்காக எனது கருத்துடன் எழுதப்பட்டதே இது. எனது நோக்கம் மொழிதெரியாதவர்கள் இதை அறிவேண்டும் என்பதே தவிர எனக்கு இதற்காக யாரும் ஊதியம் தரவுமில்லை மொழிபெயர்ப்பு என்று கருதினால் மொழிபெயர்பாளருக்கான சம்பளம் குறைந்தது 860குரோண்கள் 45 நிமிடங்களுக்கு என்பதையும் அறிக. முடிந்தால் ஒரு தொழில்நுட்ப ஆக்கம் ஒன்று மொழிபெயர்ப்பு செய்துபாரும் பழுவும் அதை எந்தளவுக்கு சரியாக மொழிபெயர்க்க முடியும் என்பதையும் அறிவீர்கள். மொழிதெரிந்தவர்களால் மொழிபெயர்க்க முடியும் என்று எண்ணினால் அது முழு முட்டாள் தனமாகும். இது எனது மொழியாடலில் சேர்க்கப்பட்ட தரவுகளைக் கொண்டு எனதுகருத்தையே எழுதினேன். அவ்வளவுதான்.
உங்களை போல்நான் அறிவாளீ அல்ல ஏதோ நோர்வே அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக கடமை ஆற்றுகின்றேன் அவ்வளவு தான், ஆனால் எது மொழி பெயர்க்கப்பட்டது, எது சொந்த கட்டுரை என்று அறியும் அளவுக்கு எனக்கு அறிவு உள்ளது,
நோர்வேயின் முதன்மை மொழிபெயர்பாளர் நக்கீரா ,
தங்களின் மொழி திறமையில் சந்தேகம் இல்லை.
ஆனால்……
// மொழிபெயர்ப்பு செய்துபாரும் பழுவும் அதை எந்தளவுக்கு சரியாக மொழிபெயர்க்க முடியும் என்பதையும் அறிவீர்கள். மொழிதெரிந்தவர்களால் மொழிபெயர்க்க முடியும் என்று எண்ணினால் அது முழு முட்டாள் தனமாகும்//
என எழுதுவதால் நோர்வேயில் மொழிபெயர்கத் தெரிந்தவர்கள் இல்லாமல் எப்படி நோவேயிய பல இணயத் தளங்களில் மொழிபெயர்ப்புகள் வருகின்றன? இணயத் தளங்கள் பேய்க்காட்டுகிறார்களா?
நோர்வேயின் முதன்மை இலக்கியவாதியும், நோர்வேயின் முதன்மை நேர்மைவாதியுமான நக்கீருக்கு……
#/ ராஜன்! பின்பு பார்த்திருக்கலாம் அல்லவா. தூ எனும் தொழிலநுட்பச்சஞ்சிகையிலும் ஒரேமாதிரியான செய்தி வந்துள்ளது. உரிமை யாருக்கு?
/#
உரிமை என்ன, ஏகபோக உரிமை கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்????
காப்பி அடிப்பதற்கு எங்காவது உரிமை கோர முடியுமா?
தும்மல் உமாவுக்கு!
// நோர்வேயில் மொழிபெயர்கத் தெரிந்தவர்கள் இல்லாமல் எப்படி நோவேயிய பல இணயத் தளங்களில் மொழிபெயர்ப்புகள் வருகின்றன? இணயத் தளங்கள் பேய்க்காட்டுகிறார்களா?
//
உண்மை தான்! நக்கீரார் அளவுக்கு யார் ஒழுங்காக எழுதுகிறார்கள்?
யார் ஒழுங்காக மொழிபெயர்ப்புகள் செய்கிறார்கள்??
நோர்வேயின் முதன்மை இலக்கியவாதியும்,
#/ நான் நோவேயிய மொழில் வாசித்த ஒரு விடயத்தை தமிழில் என்மக்களுக்கு அறியத்தருவதற்காக எனது கருத்துடன் எழுதப்பட்டதே இது. எனது நோக்கம் மொழிதெரியாதவர்கள் இதை அறிவேண்டும் என்பதே தவிர எனக்கு இதற்காக யாரும் ஊதியம் தரவுமில்லை./#
இந்த வரிகளில் ஒத்துக் கோள்கிறீர்கள், நான் நோவேயிய மொழில் வாசித்த ஒரு விடயத்தை தமிழில் என்மக்களுக்கு அறியத்தருவதற்காக எனது கருத்துடன் எழுதப்பட்டதே……… என்றூ!!
பிறகும் ஏன் இந்த சப்புக்கட்டு?
உங்களின் கருத்துப்படி பார்த்தால் இனிமேல் தான் அறிந்த வாசித்த விடயத்தை யாரும் எழுதப்படாது என்பதுபோலவும்: பீரங்கிகளை தயாரித்துவர்கள் மட்டும் தான் அதைப்பற்றி எழுதவேண்டும் போலவுமல்லவா இருக்கிறது. வெறும் விவாதத்துக்காக எழுதாது படைப்புகள் பலவகைப்படும்பதை அறிவதே அறிவு.
ஒன்றை செய்ய மாட்டார்கள்.எதைசெய்காலும் பிழை பிடிக்கும் கும்பல்கள்: