சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை மகித ராஜபக்ச அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்கிற்காக இந்திய சட்டப்படி அவர் தேடப்படுகிறார்.
இதே வேளை இந்திய அரசின் அழைப்பினை ஏற்று கடந்த வருடம் மகிந்த ராஜபக்சவுடன் சென்னை சென்றிருந்தார்.
சென்னையில் வழக்கறிஞர்கள் தேவானந்தா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்ஜாமீன் அளிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டக்ளஸ். இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உரிய நீதிமன்றத்தில் டக்ளஸ் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம். அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இவனை தேடித்திரிய வேண்டிய அவசியம் என்ன? யாழிற்கு வந்தால் பொது மக்களே பிடித்துக் கொடுப்பார்களே. இவனை உள்ளே வைத்தால் ஈழத்தமிழ் சனம் சிறிதாவது அச்சமின்றி வாழ்வார்களே.
மண்டை கனத்த மண்ணாங்கட்டிகள் தம்மை ஸ்கொட்லண்ட்யாட்டிற்கு இணயாக திங் பண்ணீ ஜேம்ஸ் பொண்டாக கனவு கண்டு தேவா வை மட்டும் தேடும் ஆனால் பிடிக்க வேண்டியோரை விட்டு விடும்.
Yarl என்ற பெயரில் எமது யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் பெரும் அரசியல் தலைவனை மக்கள் பிடிதுக்குடுப்பர்கள் என குறிப்பிட்டு இருந்தார் . இவர் இன்னமும் எமது யாழ்ப்பாணம் வரவில்லை போல் உள்ளது . ஒருமுறையாவது யாழ்ப்பாணம் வந்து டக்ளஸ்தேவானந்தா வுக்கு உள்ள மதிப்பை பார்த்து செல்லவும் . ஏன் தான் இவன்கள் திருந்தவில்லை , நல்ல மனிதர்களை மக்களுக்கு எதுவும் செய்ய விடமாட்டார்கள் போல் உள்ளது .
இதுதான் தமிழ்மக்களின் விதி. யாழ்என்கிற பெயரில் வந்தவர் யாழ்வாசி என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இவர் ரொறண்டே லண்டன் பாரீஸ் ஜேர்மனிவாசியாக இருக்கக்கூடும் என்பது தான் எனது கணிப்பீடு. இவர்கள் இரரணுவத்திற்கு குண்டெறிவதும் இராணுவம் திருப்பி மக்களுக்கு குண்டெறிவதிலும் இன்பம் கண்டவர்கள். ஏதோ ஒருவகையில் இதுவும் யாழ்வாசிகளுக்கு உள்ள குணாம்சம்களில் ஒன்றே. யாழ்மக்களுக்கு டக்கிஸ்தேவானந்தா மோதகம் கொடுப்பது இவர்களால் பொறுத்து கொள்ளமுடியாமல் இருக்கிறது. இதையும் எமது தலைவிதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். முப்பதுஆண்டுகாலம் காலத்தை கடத்தியநாம் இப்படியான கதைகளையும் கேட்டு காலந்தள்ளுகிற பொறுமை எமக்கு இருக்கவேண்டும்.