மன்னார் பஸ் நிலையத்திற்கு சமீபமாக நேற்று திங்கட்கிழமை மாலை, மாவட்ட சர்வமத அமைப்பு உறுப்பினரும் ஊடகவியலாளருமான எம்.ஏ.காதர், அமைச்சர் ஒருவரின் சகோதரரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு யோசப்பை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் மிக மோசமாகத் தாக்கிப் பேசியதற்கும், ஆயரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் மற்றும் பிரார்த்தனையில் ஊடகவியலாளர் எம்.ஏ.காதரும் கலந்து கொண்டு ஆயருக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற ரிச்சாட் பதியுதீன் கும்பல் காதரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இலங்கை அரசும் அதன் ரெளடிக் கும்பலுமே மதங்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவுகளைம் மோதல்களையும் ஏற்படுத்துகின்றது எனபட்கற்கு இது சிறந்த உதாரணம்.
Let us all look forward to a really new Sri Lanka with a really free press.