08.12.2008.
கியூபா ஏறத்தாழ 50 ஆண்டுகள் அமெரிக்கா வின் பொருளாதாரத் தடை யை எதிர்த்து நின்றுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 50 ஆண்டுகள் அதை கியூபா எதிர்கொள்ளும் என்று கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ உறுதிபடப் பெருமையுடன் கூறினார்.
கரிபியக்கடல் பகுதி யைச் சேர்ந்த14 நாடுகளின் உச்சி மாநாடு சான்டியா கோ நகரில் நடைபெறு கிறது. மாநாட்டில் பங்கேற் கும் 14 நாடுகளின் தலைவர் களும் 19ம் நூற்றாண்டில் கியூபாவின் சுதந்திரத்துக் காகப் போராடிய ஜோஸ் மார்ட்டியின்கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்ச்சிக்கு கரிபியன் நாடு களின் அமைப்பின் சுழற்சி முறை தலைவர் ஆன்டி குவா அயல்துறை அமைச் சர் பால்ட்வின் ஸ்பென்சர் முன்னிலை வகித்தார்.
அதையடுத்து சான்டியா கோவில் உள்ள புரட்சி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரால்காஸ்ட் ரோ உரையாற்றினார். அமெரிக்காவின் 50 ஆண்டு கால பொருளாதாரத் தடை யை முறித்து வாழ நாங்கள் பழகிவிட்டோம். மேலும் ஒரு 50 ஆண்டுகளுக்கு அதை எதிர்த்து வாழ கியூபா தயா ராக உள்ளது என்று அவர் தம் உரையில் குறிப்பிட் டார்.
கியூபாவுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கும், அங்குள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்ப விரும்பு வோர்க்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். ரால் காஸ்ட்ரோவை எவ்வித முன்நிபந்தனையின்றி சந்திக்கவும் ஒபாமா விருப் பம் தெரிவித்திருந்தார். ஒபாமா கூறியுள்ள கட்டுப் பாடுகள் தளர்வு இரு நாடு களின் உறவுகள் சுமுகமாக மாறத் தேவையான முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று காஸ்ட்ரோ கூறினார்.
பொருளாதாரத் தடை யை முற்றிலும் அகற்ற ஒபா மாவிடம் திட்டங்கள் இல்லை. அனைத்து வர்த்தகப் பொரு ளாதாரத் தடைகளை அமெ ரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டுமென்று கியூபா கூறுகிறது. உலகப் பொரு ளாதார நெருக்கடியை மீறி கரிபியன் பகுதிகளில் சுற் றுலாவை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இம்மாநாடு விவாதிக்கும். இந்த மாநாடு ரகசியமாக நடக்கும். தட்ப வெப்ப மாற்றம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உலக ளவில் உணவுப் பொருள் உயர்வு ஆகியவையும் இக் கூட்டத்தில் விவாதிக்கப் படும். கியூபாவின் புரட்சி தலைவன் பிடல் காஸ்ட் ரோவை இம்மாநாடு கவுர விக்க உள்ளது.