ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி அமெரிக்காவின் பேர்குசன் என்ற சிறிய நகரத்தை உலகம் முழுவதும் திரும்பிப்பார்த்தது. மைக்கல் பிரவுன் என்ற 18 வயதுச் சிறுவனை நடுத்தெருவில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஒபாமா அரசின் போலிஸ் படை சுட்டுக் கொன்றது. அதுவும் கைகளை மேலே உயர்த்தி போலிசின் முன்னால் மண்டியிட்ட அப்பாவியை டரன் வில்சன் என்ற நிறவெறி போலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார். அதுவும் ஆறு தடைவைகள் உயிர் பிரியும் வரைக்கும் எந்தக் காரணமுமின்றி போலீஸ் கொன்று போட்டது.
கொலைசெய்யப்படுவதற்கு 8 நாட்களின் முன்னரே மைக்கல் பிரவுன் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். அவரது பள்ளி ஆசிரியர்களின் கருத்துபடி அமைதியான மாணவனாகக் கருதப்பட்டார்.
அமெரிக்க சார்பு கோப்ரட் ஊடகங்கள் மைக்கல் பிரவுன் என்ற சிறுவனின் புகைப்படத்தை கோரமாக வெளியிடுவதிலிருந்து பல்வேறு புனைவுகளை வெளியிட்டு கொலைகளை நியாயப்படுத்தின.
மைக்கலின் கொலையைத் தொடர்ந்து பெர்குசன் மக்கள் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் வாழும் மனிதாபிமானிகளும் ஜனநாயகவாதிகளும் ஒரணியில் இணைந்துகொண்டனர். பேர்குசன் மக்கள் போராட ஆரம்பித்தனர். மக்களைக் கொள்ளையிடும் பெரும் வணிக நிறுவனங்கள் உட்பட அரச கட்டடங்கள் கோபம் கொண்ட மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஆர்மட் வாகனஙகளும் போர்க்கால ஆயுதங்களும் மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள ஒடுக்குவதற்கு வரிசையாக நிறுத்தப்பட்டன.
மக்கள் அடிபணியவில்லை போராட்டம் தொடர்கிறது. உலகம் முழுவதும் போராட்டத்திற்கான ஆதரவு பெருகிவருகிறது. மறுபுறத்தில் இராணுவத் தாங்களும் கவச வாகனங்களும் பேர்குசன் நகரத்தை ஆக்கிரமித்துள்ளன. கொலைகார நிறவெறிப் போலிசிற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
வழமை போல உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சார்பு அரச ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான தகவல்களைப் பரவவிட்டன. மக்களின் போராட்டம் என்பது கறுப்பின மக்களின் கொள்ளையாகச் சித்தரிக்கப்பட்டது.
தனது நாட்டிலுள்ள பணம்படைத்த அதிகாரவர்க்கத்திற்காக உலகம் முழுவதும் கொத்துக்கொத்தாகக் கொலைகளை நடத்திவரும் அமெரிக்க அரசு தனது எல்லைக்குள்ளேயே மக்களை இராணுவச் சிறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கிறது. பேர்குசன் என்ற சிறிய நகரத்தில் 21 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். 6.2 சதுர மைல் சுற்றளவைக் கொண்ட இந்த நகரத்தில் போலிஸ் துறைக்கு வழங்கப்படும் வருடாந்தத் தொகை 5.2 மில்லியன் டோடலர்கள். மூன்றில் இரண்டு பகுதி கறுப்பின மக்கள் வசிக்கும் இந்த நகரத்தைப் போன்றே ஏழைகள் வசிக்கும் பல்வேறு நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக பெரும் தொகைப் பணம் செலவிடப்படுகின்றது. பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகள், ஆர்மட் வாகனங்கள். போர்க்காலத்திற்குத் தேவையான இராணுவக் கொலைக் கருவிகள் போன்ற அனைத்து வசதிகளுடனும் போலிஸ் இந்த நகரங்களின் நிலைகொண்டுள்ளது என்பதைப் பேர்குசன் போலிஸ் பயங்கரவாதம் உறுதிப்படுத்தியது.
உலகத்தின் 85 பெரும் பணக்காரர்கள் உலகத்தின் அரைவாசிப் பகுதியின் வருமானத்திற்கும் அதிகமான பணத்தை கையகப்படுத்தி வைத்துள்ளார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். உலகம் முழுவதும் இவர்களின் சொந்த நலன்களுக்காகவே இராணுவ மயமாக்கப்படுகின்றது. குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இவர்களுக்காகவே மடிந்து போகிறார்கள்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் வளங்களையும் மனித் உழைப்பையும் சுரண்டும் இவர்கள் ‘தயவில்’ அமெரிக்கா உலகத்தின் மிகப்பெரும் கடனாளி நாடாக மாறியுள்ளது. இக்கடனை மீள் செலுத்துவதற்கு அமெரிக்காவின் அப்பாவி மக்களை கொள்ளையிடுகின்றன.
இக்கொள்ளையிலிருந்து மீள்வதற்கான போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கான வர்க்கப்போராட்டங்களாக மாற்றமடையும் சூழல் காணப்படுகின்றது. அதனை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா முழுவதும் இராணுவமயப்படுத்தப்படிகின்றது.
90 களிலிருந்தே அமெரிக்கப் போலிஸ் இராணுவமயப்படுத்தப்படுவது தொடர்பாக பல அரசியல் ஆய்வாளர்களால் எச்சரிக்கப்பட்டது. காப்பேலர் மற்றும் கிராஸ்கா ஆகிய ஆய்வாளர்களின் கட்டுரை ஆதாரங்களுடன் இவற்றை வெளிப்படுத்தியது.
பேர்குசன் நகரத்தில் ஆரம்பித்து அமெரிக்கா முழுவதும் நடைபெறும் அரை இராணுவ ஆட்சிதான் கோப்ரட் ஜனநாயகம்.
இதற்கு எதிராக மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாத வெற்றியடையும் என்பதை பேர்குசன் மக்கள் உலகத்திற்குச் சொல்கின்றனர்.
பிரித்தானிய பொலிஸ் படை அமெரிக்க ஆக்கிரமிப்புக்களுக்குப் பின் பொம்மை ஆட்சியமைக்க உலகெங்கும் ‘ஐக்கிய’ அமெரிக்கவுக்குத் தேவைப்படுவதன் காரணமே முழு அமெரிக்காவுக்குமென ஒரு பொலிஸ் படை இல்லாதிருப்பதே.
மாகாணங்களுக்கும் மாநிலங்களுக்கும் ஒத்த ஆனால் தேசிய மட்டத்தில் ஒன்றிணையாத வெவ்வேறு பொலிஸ் படைகளே பல இடங்களில் அடக்கு முறைகளை உச்சக் கட்டத்துக்கு இழுத்துச் செல்கின்றன.
பேர்குசன் நகரைக் கட்டுப்படுத்த புகுத்தப் பட்டது தேசிய பாதுகாப் ஒபுப்படை அதாவது ஆங்கிலத்தில் நஷனல் காட் என்றழைக்கப்படும் சிவிலியன்களால் அவசர தேவைகளுக்கு திரட்டப் படும் இராணுவ அமைப்பு.
நஷனல் காட் நேரடி இராணுவக் கட்டுப்பாட்டினடிப்படையிலேயே ஒபாமாவுக்கு பதில் சொல்ல வேண்டியது.
மாநிலப் பொலிஸோ ஒரு விதத்திலும் ஒபாமாவுடமன் தொடர்பற்றது.
ஒபாமாவின் கவனம் குருதிஸ்தானையும் சிரியாவையும் ஈராக்கையும் பெருங் கொலைக்களங்களாக்கி உருவாக்கப்படும் இஸ்லாமிய தேசத்தையும் பலஸ்தீனியரை இஸ்ரேலினால் கொன்று குவித்து உருவாக்கப்படும் புளித்த சமாதான தளத்தையும் தனது கறுப்புத் தோலினால் புதுப்பித்து மெருகூட்டுவதே.
அமெரிக்க ஆபிரிக்க மக்கள் விழித்தெழப் போவதை தாமதப் படுத்த, ஒபாமா ஒருநாளாவது பேர்குசன் நகர பொலிஸ் அடக்குமுறைகளுடன் விற்பனை செய்யப்பட மாட்டாது.
It sad really sad that the young man lost his life. But let us be real here. I am walking down the street (I believe it wasn’t the side walk) and I get stopped by the police and told to walk on the side walk. I ignore that and keep walking. The police stops me again and there ensues a scuffle. Don’t know what exactly caused it. Anyway I start walking away from the police. Obviously the police is telling me to stop and I keep ignoring that and walking. The policeman takes a couple of shots at me. I turn around thinking of surrendering with my arms raised but I am unable to stand and for the police it looks like I am bending down to draw my weapon. I keep collapsing and the shots have already been fired and of the four one hits my head and I die.
Let’s take a different case. I keep driving on the interstate well above the speed limit. Well, everyone else is also speeding. The police is signaling me to stop and I believe it is because of my color. I want to ignore that and keep speeding but I know exactly what will happen. There will be a chase and if I continue shots will be fired and I can get hit or I may crash my car. Do I want to get myself killed or stop, take the ticket, say sorry to the officer and move on? Yes, I end up paying a couple of hundred dollars in fine but I am alive today and tomorrow I am not going to speed on the highway even if all the white people are speeding. My life is precious to me if not for the white (or the black) policeman.
பல்லாயிரம் த்மிழர் படுகொலை செய்யப் படவும் ஏன் இனவ் வொரு உயிர் இவ்வளவு முக்கியம் என்று கூட நினைக்கலாம்.
அவசரப்பட்டு கார் ஓடி அலைந்த்து திரியாமல் நிதானமாக ஒருஇடத்தில் குந்தி அமர்ந்த்து யோசித்துப் பாரும் – விளக்கம் வரும்.
ஆபிரிக்க இன பொலிஸாரின் விகிதாசாரமே ஒரு முக்கிய காரணி என அடித்துச் சொல்லப் படும் போது கூட ஒரு சில ஆபிரிக்க இன பொலிஸாரையே முன்னிறுத்தி மூலைச்சலவைகள் மூர்க்கத்தனமாக பல்தேசிய செய்தி அடக்குமுறைநிறுவனங்களால் இவ்விடயத்தில் முன்னெடுத்துச் செல்லப் படுவதும் மக்கள் போராட்டம் பேர்குசன் நகரில் வெடிக்க அடிகோலியது என்பதையும் அறியத் தருகிறேன்.
In a country any idiot can carry a gun the police do not have the luxury of second guessing. It is also statistically true that most black people are killed by the black people themselves and gun related killing is number one in the list. Enlisting more black police will improve the situation but will not resolve it. A lot of children grow up in single family homes without the support of mostly their dads. I think it really affects the boys more than the girls. They get into this cycle of violence related to guns and drugs. Some of these kids are just trigger happy. People get killed for very silly reasons and you see it almost every day. It is in the video recordings that is shown practically every day. You have experience it before you make the judgment. Let the justice system decide on it. We applaud when OJS is let go scot free for murder and cry foul when a white police officer is scrutinized under the same system. Where is the logic in it?
http://mashable.com/2014/08/19/think-tank-amnesty-international-suck-it/
For us in Toronto, Canada it’d not new…
Here innocent people killed in Police confrontations…
First case…
Michael Maclsaac – 47 yrs
On the morning of Dec 2nd, 2013, this guy left his home completely naked & suffering… Less than 30 min later he was shot & killed by police…
Second case…
A young kid Sammy Yatim, who took Canada as his home from Syria…
In a night of July 27th, he was killed in a Street Car (bus)…
Third case…
Sylvia Klibingaiyis – 52 yrs,
Suffering from mental illness, had a knife in her hand was shot dead by police outside of her home…
Fourth case…
Michael Eligon – 29 yrs
While standing in a quiet neighbourhood street in a hospital gown & socks, carrying a scissors shot &!killed by police…
These are recent killings…
Here I have a question…
These police officers are not trained properly… or scared for knife &!scissors…???
Ok, if these police officers are scared for knife &!scissors, they can shoot them below the knee or the hand (where they carry that weapon – scissor/ knife)
Why are they kill them…???
In USA they took these as a racial issue…
Here for this victim any mass protection… No…!
(except for the kid Sammy Yatim)
Police are for the protection public…!
Not to kill…!
Some of these police officers think, when they were in their cruiser the full road is under their control… When they carry weapon, where ever they were are scary kill the people… When the law & order in their hand, whatever wants they can do…
Not only we see them in the streets… I’m writing this from my experience…
Where is the justice…???
Ok, if anyone wants to read in detail about the recent police killings in confrontation read under this head line
“When Police Kill: The Story of Five Familes”
from http://www.thestar.com
And I accept kkathapody’s comment…
This also true, also we see these type of confrontations…
But these scary police officers need some training…
“மைக்கல் பிரவுன் என்ற 18 வயதுச் சிறுவனை … ” என்னப்பா இது ஜோக்கா அடிக்கிறீங்கோ ? சிறுவனில்லிப்பா இளைஞன் . இது கூட வித்தியாசம் தெரியாதவங்க எதுக்கு உங்க அபிப்பிராயத்த சொல்லுறீங்க. அந்த சிறுவனோட திருவிளையாடலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளியவருது, அவர் ஒரு கொலையிலும் சந்தேகநபராம், இறக்கும் முன் 10நிடத்துக்கு முன்னதாக ஒரு கடைகாரனை தள்ளிவிட்டு கொள்ளையும் அடிச்சிருக்காராம் அதுவும் ஏதோ சிறு பொருட் களை. பொறுத்திருந்து பார்ப்போம், பறை அடிக்கிறவர் முகத்தை எங்க கொண்டுபோயி வைக்கப்போறாரோ தெரியாது.