23.08.2008.
ஆப்கானிஸ்தானில் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தலைமையிலான படையினர் நடத்திய ஒரு இராணுவ நடவடிக்கையில் ஆப்கானியப் பொதுமக்கள் தொண்ணூறு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த இராணுவ நடவடிக்கையை ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஆப்கன் அதிகாரிகளோடு கலந்தாலோசிக்காமல் அந்த இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கர்சாய் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பொதுமக்கள் பலியாவதை தவிர்க்கும் நோக்கில் முழுமையான திட்டம் ஒன்றை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினரிடம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான மக்கள் மீது பாதுகாப்புப் படைகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.