ஜனநாயகத்தின் பேரால் உலகம் முழுவதும் போரையும் அழிவுகளையும் கட்டவிழ்த்துவிடும் அமெரிக்காவின் உட்புறத்தில் அவலத்தில் வாழும் மக்கள் கூட்டம் ஒன்று உருவாகிவருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 29 வீதமானவர்கள் தமது பெற்றோருடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. குறிப்பாக 18 வயதிற்கும் 31 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களில் 36 வீதமானவர்கள் இன்னும் பெற்றோருடனேயே வாழ்வதாகத் தெரியவருகிறது.
வேலையின்மை, வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, இருப்பிடச் செலவின் தாக்கம் ஆகியன சமூகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்குக் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதையும் உலுக்கும் வறுமைக்கும் வேலையின்மைக்கும் வாழ்க்கைச் செலவிற்கும் யார் காரணம் என்ற கணக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்களின் பெறுமதி 2 ரில்லியன் டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகை 2012 ஆம் ஆண்டை விட 800 பில்லியன் அதிகமானதாகும்.
பத்துவருடங்களுக்கு முன்னைய தொகையை விட இரண்டு மடங்கிற்கு சற்று அதிகமானதாகும். ஆக, பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் அமெரிக்க அரசு மக்களின் பணத்தை பணக்காரர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு மக்களை வறுமைக்குள் வாழப்பழக்கி வருகிறது. இதனையே அவர்கள் ஜனநாயகம் என அழைக்கின்றனர், பணம்படைத்தவர்களுக்கான இந்த ஜனநாயகதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர், மக்கள் தாம் வாழ்வதற்கான புதிய ஜனநாயக முறைமையை விரைவில் உருவாக்குவார்கள் என்பதற்கான அனைதுது அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன..
மக்களின் பணம் பணக்காரர்களின் வீடுகளுக்குப் போவதற்கு நாமும் காரணம்தான்… பணக் காரரைப் போல எவரும் சிறிய முதலீட்டுடன் பல தொழில்களை ஆரம்பிக்கலாம் அந்த வியாபாரங்களிளிருந்து கிடைக்கும் இலாபத்தை … இலாபமீட்ட உதவிய மக்களுக்கே பகிரலாம்…. .. ஒரு கூட்டுறவு முயற்சியாக இதைத் யாரும் தொடங்கலாம்
( இதற்க்கு முன்னோட்டமாக நாம் சில ஆயத்தங்களை ஆரம்பித்து விட்டோம் )
வெறும் சோசலிச… லெனினிச .. கொமுனிஸ ..மாக்சிச .. மாவோசிய .. மற்றும் பல தரப்பட்ட .. ..இஸ்ச …கூக்குரலிடும் வாய் சொல் வீர சோம்பேறிகள் இதைச் செய்ய மாட்டார்கள்
உதாரணமாக Lebara Group தமது இலாபத்தின் ஒரு பகுதியை அகதிகளின் நலனுக்கு அளிப்பதையும் வியாபாரத் தந்திரமென்று கூறிய பதிவுகளும் “இனிஒரு”வில் உள்ளது.
எனக்கு அவர்களைத் தெரியாது ஆனால் நான் அவர்களின் பொருட்களை வாங்கும்படி பலரை ஊக்குவித்து இருக்கின்றேன்… அவர்கள் பல சமூக சேவைகள் செய்கின்றார்கள் என்பது உண்மையாக இருப்பதால்
இதைவாசிக்கும் அனைவரும் ஒரு கணம் சிந்தியுங்கள்
A , Bஎன்ற இரு பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன.
A என்ற பொருளை விற்பவர் “பொது” மக்கள் நலனுக்கு தனது இலாபத்தின் ஒரு சிறு பகுதியை ஒதுக்குகின்றார்
B என்ற பொருளை விற்பவர் “தனது” மக்களின் நலனுக்கு மாத்திரம் தனது இலாபத்தின் முழுப் பகுதியை ஒதுக்குகின்றார்
நான் எந்தப் பொருளை வாங்கலா ம் ? நான் எந்தப் பொருளை வாங்கும்படி மற்றவர்களுக்குச் சிபார்சு செய்யலாம்?
உலகுக்கு – எமக்கு இன்றைய தேவைகள்…..
1)
Lebara Group போன்று தமது இலாபத்தை மக்கள் நலனுக்கு பகிர்ந்தளிக்கும் மனித நேயமுள்ள தொழில் அதிபர்கள்
(அவர்களுக்கு கார்ல் மார்க்ஸைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை சோஷலிச பின்புலம் – அறிவு இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. இல்லாத இயலாத மக்களுக்கு உதவும் மனித நேயத்திற்கு அது அடிப்படைத் தேவையல்ல)
2)
கவர்சிகரமான விளம்பரங்களைவிட மக்கள் நலனுக்கு உதவும் வியாபார நிறுவனங்களின் பொருள்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வாடிக்கையாளர்கள்.
முதலாளிகள் தாமாகக் கொழுக்க முடியாது நாங்கள்தான் அவர்களைக் கொழுக்க வைக்கின்றோம்
3)
மிக முக்கியமாக … இதுபோன்ற முயற்சிகளை கேலி செய்யாத இணையத் தளங்கள்.
இணையத் தளங்களை நடத்துவது இன்று ஒரு குடிசைக் கைத்தொழிலாக மாறிவிட்டது 20 USD கொடுத்தால் நான் எவருக்கும் ஒரு வருடத்துக்கு ஒரு Domain & 1GB Hosting வாங்கிக் கொடுக்க முடியும்
4)
வியாபாரிகள் உண்மையில் தமது இலாபத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்களா எங்கெங்கு பகிர்கின்றார்கள் என்ற வெளிப்படத் தன்மையை உலகறியச் செய்ய “இனிஒரு” போன்ற இணையத் தளங்களை நடத்துபவர்கள் உதவலாம் .
பின் குறிப்பு :
நான் மார்க்சின் புத்தகமெதையும் படித்ததில்லை ஆனால் “மனித நேயமுள்ள தொழில் அதிபர்கள் உலகளாவிய சோசலிசத்தை உருவாக்கக் கூடும்” என்று நம்பும் ஒரு ….. தமிழ் மூடன்