அமெரிக்க அரசின் ஆதரவிற்கு உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பாஹ்ரெயின் பிரதானமானதாகும். 2011 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரெயின் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அந்த நாட்டின் மக்கள் நடத்தி வருகின்றனர். பஹ்ரெயொன் பாசிச சர்வாதிகார மன்னராட்சி மக்கள் மீது இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்யம் ஆகிய அமெரிக்க ஆதரவு நாடுகள் பஹ்ரெயினிற்கு தமது இராணுப்படைகளை அனுப்பி அப்பாவி மக்களைக் கொலைசெய்தும் சிறையிலடைத்தும் போராட்டங்களை அடக்கின. பஹ்ரெனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப்போராட அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என பிரித்தானியா அறிவித்தது.
இன்று, பயங்கரவாதத்திற்கு எதிரகா போராட வேண்டியது அவசியமானது என பஹ்ரெய்ன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.பஹ்ரெயினுக்குப் பயணம்செய்த மகிந்த ராஜபக்ச தனது பயணத்தின் முடிவில் அந்த நாட்டு சர்வாதிகாரியுடன் இணைந்து இக்கூட்டறிக்கையை வெளியிட்டார். இன்று, பயங்கரவாதத்திற்கு எதிரகா போராட வேண்டியது அவசியமானது என பஹ்ரெய்ன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.பஹ்ரெயினுக்குப் பயணம்செய்த மகிந்த ராஜபக்ச தனது பயணத்தின் முடிவில் அந்த நாட்டு சர்வாதிகாரியுடன் இணைந்து இக்கூட்டறிக்கையை வெளியிட்டார். தவிர அந்த நாட்டின் உயர்விருதான கைல்பா விருது மகிந்தவிற்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நண்பர்கள் ராஜபக்சவின் நண்பர்களே. அமெரிக்காவின் நண்பர்கள் ராஜபக்சவின் நண்பர்களே.