இலங்கை இனக்கொலையாளிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியும் தீர்மானத்தின் நகல் வெளியாகியுள்ளது. முன்னைய தீர்மானங்களிலிருந்து புதிய தீர்மானம் பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பை நிரகரித்து அதனை மனித உரிமைப் பிரச்சனையாகச் சுருக்கும் தீர்மானம் மனித் உரிமைகள் தொடர்பான பல கண்டனங்களை இலங்கை அரசிற்கு எதிராகாத் தெரிவித்த அதே வேளை, இறுதியில் இனக்கொலையின் சூத்திரதாரிகளையே விசார்ணை நடத்துமாறு கோருகிறது.
அபிவிருத்தி, வட- மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை போன்ற விடயங்களில் இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் மனித உரிமை ஆணையாளருடன் ஒத்துழைத்தமைக்கும்பாராட்டுத் தெரிவிக்கிறது. தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் கோருகிறது.
இலங்கை அரசை தொடர்ச்சியாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
வருடம் ஒருமுறை நடத்தப்படும் தீர்மானத் திருவிழா மக்களுக்குப் போலி நம்பிக்கையை வழங்கி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முனெடுப்பதற்கான அரசியலைப் பிந்தள்ளுகிறது.
இலங்கையில் நாளுக்கு நாள் அரசியல், சமூகக், கலாச்சரத் தளங்களில் நேரடியாகவும் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் போராட்டத்தை நோக்கி அணிதிரட்டபடுவதைத் தவிர்க்க தமிழத்தின் தமிழ் இனவாதிகளும் புலம் பெயர் பிழைப்பு வாதிகளும் செயற்படுகின்றனர்.
ஈழத்தில் மக்களைப் பார்வையாளர்களாக்க உலகம் முழுவதும் அவர்களுக்குச் சார்பாகத் திரும்பியுள்ளது, தமிழ் நாடு அவர்களுக்குச் சார்பானதாக் உள்ளது, பிரபாகரன் மீண்டு வருவார் போன்ற பல்வேறு மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக அணிதிரள்வதைத் தவிர்க்கப் பயன்படும் போலி முழக்கங்களாகும்.
தமிழர்களுக்கு
அமெரிக்கா உதவும்
பிரித்தானியா உதவும்
இந்திய அரசு உதவும்
ஐ நா சபை உதவும்
மற்றவர்கள் உதவுவார்கள்
!!!!!! ……???????
என்று நாம் கனவு காண்பதை விடுத்து
நாம் நமக்கு உதவுவது எப்படி
என்று நாம் ஏன் ஆராயக் கூடாது
சரி நீர் ஆராய்ந்து எங்களுக்கு சொல்லலாமே. உமக்குத்தான் தெரியுதே அமெரிக்கனும் மற்றவங்களும் உதவமாட்டாங்களெண்டு.
ஒடிக்கி அளிக்கப்பட தமிழினத்திற்கு உலக அளவில் ஒரு அனுதபக்குரல் ஒலிப்பது வேண்டத்தக்கது அந்தக்குரலை அசுர சிங்கள்ன் நடுங்கும் இடி முழக்கமாக மாற்றுவது தமிழனின் புத்திசாலித்தனம்
அமெரிக்கா தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் ஆலோசனைகளை நடத்தினார்கள் ஆனால் தமிழ் மக்களை நம்பியிருக்கும்படி கூறியதை நான் அறியவில்லை, ஆனால் புலம்பெயா் ஊடகங்களே தமிழ் மக்களை உசுப்பி விட்டதில் முக்கிய பொறுப்பை வகிக்கிறார்கள்.