23.03.2009.
அமெரிக்கா நீட்டும் நட்புக்கரம் வெல்வெட் உறைக்குள் மறைக்கப்பட்ட இரும்புக்கரம் என்று ஒபா மாவின் தொலைக்காட்சி உரைக்கு ஈரானின் பெருந் தலைவர் ஆயதுல்லா கொமேனி பதிலடி கொடுத் துள்ளார்.
பார்சி புத்தாண்டு விழா நவ்ருஸ் கொண்டாட்டங் களையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈரான் மக்களுக்கு தொலைக்காட் சியில் உரை நிகழ்த்தினார். மூன்று நிமிடங்கள் ஒளி பரப்பாகும் ஒபாமா பேச்சு இணைய தளங்கள் மூலம் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுப் பப்பட்டு ஒளிபரப்பானது. ஈரானிய மக்களின், நாகரி கத்தின் அருஞ்செயல்கள் மூலம் சர்வதேச சமுதாயத் தில் ஈரான் இடம் பெற முடியும்; வன்முறைகளால் அல்ல என்று அவர் உரை யில் கூறினார்.
ஒபாமாவின் உரைக்கு கொமேனி பதில் அளித் துள்ளார். ஈரான் மக்களை வாழ்த்தும் அதே வேளை யில் பயங்கரவாதம் மற்றும் அணுகுண்டு தயாரிப்பு குறித்து குற்றமும் சாட்டுகி றார்கள் என்று கொமேனி கூறினார். அநீதியான பொரு ளாதாரத் தடைகளை அவர் கள் நீக்கினார்களா? பறிக் கப்பட்ட ஈரானின் சொத் துக்களை திரும்பக் கொடுத் தார்களா? ஈரானுக்கு எதிரான அவதூறு பிரச்சா ரத்தை அவர்கள் நிறுத்திக் கொண்டார்களா? என்று மாஷத் நகரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் பேசிய கொமேனி கேள்வி களை எழுப்பினார்.
அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டால், ஈரானும் மாற்றிக் கொள்ளும். அவர் கள் நீட்டுவதாகக் கூறும் கை வெல்வெட் உறைக்குள் ஒளிக்கப்பட்ட இரும்புக் கரம் என்று கொமேனி உறுதிபடக் கூறினார்.
அமெரிக்கா தனது யதார்த்தமான நடவடிக்கை களை மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்கா விடம் உண்மையான மாற் றம் வேண்டும் அப்போது தான். அணு திட்டம் உள் ளிட்ட பிரச்சனைகள் மீது பரந்து பட்ட பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று ஈரான் தலைவர்கள் கூறுகிறார்கள்.
1953-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைக் கவிழ்த்த தற்கும் அமெரிக்கா, இஸ் ரேல் குறித்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மற்ற நாடுகளின் மீது அகந்தைமிகு அணுகு முறையைக் கைவிட வேண் டும் என்று ஈரான் தலைவர் கள் ஒபாமாவுடன் பேசுவதற்கு நிபந்தனை விதிக்கிறார்கள்.