உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நரேந்திர மோடி தலைமை தாங்கினார் எனக் கருதப்படுகின்றது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட குஜராத் படுகொலைகளின் பின்னர் அமெரிக்கா மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. பின்னர் அமெரிக்க மற்றும் இந்திய பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதரவுடனேயே மோடி ஆட்சிக்கு வந்தார்.
2009 ம் ஆண்டு இனப்படுகொலை செய்து ஒருலட்சம் வரையிலான அப்பாவிகளைக் கொன்று குவித்த இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எதிராக மில்லியன்கணக்கில் மக்களின் பணத்தை சுருட்டி வைத்திருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் வழக்குத் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால் ஒரு தரப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான வழக்கில் 2002-ம் ஆண்டு வன்முறைகளின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இனபடுகொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகள் நிருபிக்கபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அபராதமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஈழத் தமிழர் தம் புலம்பெயர் அமைப்புக்கள் தமது சலவை செய்யப்பட்ட மூளை வளர்ச்சின் பிரதிபலிப்பாக அமையும் அமெரிக்காவும் நீதித் துறையின் சுதந்திரமும் போன்ற பிழையான கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் நிமிர்த்தமாக மட்டுமே இன்னொரு புழுகுக் கட்டுக் கதைத் தொடரை எழுதி முடிக்கப் போதுமான செயற்பாடுகளை செய்ததோடு திக்குத் தடுமாறி அடுத்த கதை எங்கே என ஓடி மறைந்தன.
சர்வதேச மன்னிப்புச்சபையும் (Amnesty International) இவ்வாய்ப்பைப் பார்த்து தனது கண்துடைப்புக் கடமையாக கோணமலை மாணவர் ஐவர் கொலை விடயத்தையும் 2009 ல் நடந்த சில விடயங்களோடு ஒன்றரக் கலப்பது போல் பேய்க் காட்டியது. சில முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பிய முக்கிய சாட்சிகள் வெளிப்படுத்தப் பட்டது தான் வினை.
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33488
புழுகின் மேல் புழுகு.
மோடி விடயத்திலும் ஏதோ அரசியல் அல்லது வியாபாரத் தரகுப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே இந்த நாடகம் போலல்லவா தெரிகிறது.
ஆப்கான் சன்டைக்கு ஏதோ அமரிக்காவுக்கு தேவை படுகிறது மோடி கொடுத்தே ஆவார் ஆனால் மறைமுகமாக ஒப்பந்தம் போடப்படலாம் .பில்லாதனியும் கடபியையும் சதாம் உசேனையும் பிரபாகரனையும் வழர்த்த அமெரிக்காவுக்கு இதுவெல்லாம் சின்ன பிரச்சனை .இருந்து பாருங்கள் அமெரிக்க தொழிள் அதிபர்களை மவ்னமாக ஆட்டிப்படத்த ஓசோவை விட நரேந்திர மோடி என்ன அறிவாழியா ???? எல்லாம் ரகசியமாக நடந்தேறும் மீடியாக்கல் அனைத்தும் அலைவரிசை நிக்கப்பட்டது போல் ஆகும்
அப்ப “ராஜபக்சவுக்கு அவர் ஒரு நாட்டிண்ட தலைவர் எண்டதால ராஜதந்திர பாதுகாப்பு இருக்கு. அதானால தான் அமெரிக்காவால ஒண்டுஞ் செய்யேலாமக் கிடக்கு. ஆனாப் பாருங்கோ. மனித உரிமைகள் தீர்மானம் வரும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும்” எண்டைல்லாம் புழுகினவை இப்ப என்ன சொல்லப் போகினம்?
அமெரிக்கா என்றால் பல்தேசிய வியாபார மையப்புள்ளி என்பதையும் கடகமளவு ஆட்டுப் புழுக்கை வியாபரம் நடாத்திய எமது விண்ணர்கள் மேற்கத்திய வியாபார மையங்களில் பெயரளவில் மட்டுமே தூக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் வீசி எறியப் படுவர்கள் என்பதையும் உணர்ந்தீர்களானால் உங்கள் ஐயம் தீரும்.
http://profit.ndtv.com/news/economy/article-pm-modi-to-hard-sell-india-story-to-fortune-500-ceos-in-us-visit-669803
மகிந்த ராஜபக்ச தனது அந்தரங்க உருப்புக்களைக் கூட செய்திகளுக்கு அடகு வைத்து அமெரிக்காவிலேயே இம் மாதம் அதிகளவு ஓடித்திரிவதற்கு இதுவே விளக்கமாக அமையும் என்பதும் விளக்கமாகிறது அல்லவா?
ஐ. நா வும் கலியாணமும் அமெரிக்க ஆட்டிப்படைப்புக்குள்ளேயே என்பதையும் நாங்கள் நன்குணர வேண்டும். அதைவிட எங்கட மோட்டு இழிச்ச வாய் சர்வதேச அரசியல் நடத்த முற்பட்டு மண்கவ்வி இன்னும் வாய்காட்டிக் கொண்டிருக்கும் சொறிக் கூட்டத்தை ஏதோ பொருட்படுத்துவதே பிழை. இன்னொரு சொறிக்கூட்டம் பிழையான வழியில் விழுந்தவன் மேலேறி சிலகாலம் பிழைக்க எத்தனிப்பதே உங்கள் கேள்வியின் தொனி என்றும் தோன்றுகிறது.
வாக்காளர் என்று அடையாளப் படுத்திக் கொண்டு இனியொருவில் ஒருவிதத்தில் கலகம் விளைவிக்க முனையும் உங்களுக்கு புத்திசீவிகள் என்று மார்தட்டிக்கொண்டுளாவி ஈழத் தமிழரை விற்றுப் பிழைக்கும் ஒட்டுண்ணிகளுக்கும் இதே தூக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் வீசி எறியப் படுவர்கள் எனும் முத்திரையே தகும் எனும் பரந்த மனப்பார்வைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.