உளவு பார்ப்பதற்காக மட்டும் 136 பில்லியன் டொலர்களை கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அமெரிக்க அரசு செலவு செய்துள்ளது. தேசிய உளவுத்துறையின் முகாமையாளர் அலுவலகத்தாலும்(ODNI), பாதுகாப்புச் செயலகத்தாலும் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஒன்றிலேயே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் முடிவுற்ற 2014 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டிலும், 2013 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டிலும் உளவு வேலைகளுக்காக முறையே 68 பில்லியன் டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கக் கொங்ரஸ் இனால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பணத்தின் பெரும் பகுதியை அமெரிக்க மத்திய உளவுத்துறை முகவர் நிறுவனமான CIA பயன்படுத்தியுள்ளதாக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
ஸ்னோடனால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் உழைக்கும் மக்களின் பணத்தில் எவ்வளவு தொகையை விழுங்கிக்கொள்கின்றன என்ற விபரங்கள் அடங்கியிருந்தன. இராணுவ உளவுத் துறை என்பது மேற்குறித்த பணத்திலிருந்து வேறுபட்டது . இராணுவ உளவுத்துறைக்காக மட்டும் உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்படும் நாடுகளிலிருந்தும் சுரண்டப்படும் 25 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன.
உலகம் முழுவதும் இரத்தக் களரியை ஏற்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்வதற்கான பணத்தை அவர்களிடமிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் அறவிட்டுக்கொள்கிறது.
Like the Armed Forces it is a career development agency for manu people. What was started as OSS during the world war two became the CIA.