வன்னிப் படுகொலைகளின் இறுதி நாள் மோதல்களின் போது சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட புலிகளின் பிரதானிகள் தொடர்பான விவிகாரத்தில் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் அமெரிக்காவில் நுளைந்துள்ளதை அமெரிக்க அரசு கண்டுகொள்ளவிலை. அதேவேளை மகிந்தவைத் தூக்கில் போட்டு தமிழீழம் பிடித்துத் தருவோம் என முழங்கும் புலம்பெயர் அமைப்புக்கள் அமெரிக்காவிலியே அதிகமாகக் கூடுகட்டியுள்ளன. இவர்கள் மத்தியிலிருந்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் மத்திரி அரச தரப்பிலிருந்து பசிலைக் கைது செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையிலிருந்து விமான நிலையத்தின் ஊடக பிரபுக்கள் செல்லும் வழியாகவே பசில் சென்றார். இவ்வழியாகச் செல்வதற்கு நாடாளுமன்ற அனுமதி அல்லது வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவை.
இவை எதுவுமின்றி பசில் வெளியேறியமை சட்டவிரோதமானது என்பதால் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிபதற்கு இலங்கை நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.
வன்னிப் போரில் இனப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட மகிந்த, பசில், கோத்தாபய போன்ற சமூகத்திற்கு ஆபத்தான குற்றவாளிகளைப் பொதுவெளியில் உலாவ அனுமதிப்பதே தவறானது.
இறுதியில் ஏகாதிபத்திய அரசுகள் தமது சொந்த நலன்களுக்காக நிகழ்த்தும் அதிக்கார மாற்றங்களில் மட்டுமே மக்கள் தங்கியிருக்கும் அரசியல் வழி நடத்தல் அற்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
This is indeed a great New Year. 2015.
அது எப்படி ஐயா உம்மால இவ்வளவு லேசா குத்துக்கர்ணம் அடிக்க முடிகிறது?
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி அமெரிக்க தூதுவனும் படுபாதகனுமாகிய ரொபேர்ட் ப்ளேக்-இடல் பசில் ராஜபக்ச திருகோணமலை கடற்கரையில் (2006 ஜனவரி 2 ஆம் திகதி சனக்குழுமத்துக்கு முன்னாலேயே) ஐந்து மாணவரையும் கொன்றது ஸ்ரீலங்காவின் விசேட அதிரடைபடையே என ஒப்புக்கொண்டது பதிவானது.
இதற்குப் பின்னரும் “அமெரிக்க அரசு கண்டுகொள்ளவிலை” என எழுதுவது பிழை.
இன்னும் 90 நாட்களில் பொதுத் தேர்தல் இருக்கும் தருவாயில் பசில் ராஜபக்ச அமெரிக்க ஏகாதியபத்தியத்துக்கு மிகவும் தேவைப்படுபவன்.
மேலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் அடுத்த அடிவருடிக்கூட்டங்களான ஈழத்தமிழ் தேசிய மண்ணாங்கட்டிகள் வருடாந்த ஜெனீவா திருவிழாவில் எதேனும் சதி செய்து புரட்சிகரமான முடிவுகளை நோக்கிப் பயணிக்க முயற்சித்தாலும் பசில் ராஜபக்ச அவசர அவசரமாக பாவிக்கவும் படலாம்.
2010 அளவில் எப்படி சரத் பொன்சேகா சீ.ஐ.ஏ இனால் நேரடியாக திரும்பிப் போய் ஜனாதிபதியாக போட்டியிடு என்று நிர்ப்பஎதிக்கப் பட்டானோ அதே போல் பசில் ராஜபக்ச-உம் தமது தேவைக்கேற்ற படி ஆணையிடப்பட அமெரிக்காவை மையப்படுத்தி தங்கியிருப்பது வியப்புக்குரியதல்ல.
அமெரிக்காவிலுள்ள சுதந்திரங்களைப் பாவித்து தன்னிச்சையாக பசில் ராஜபக்சவை நெருக்கடியிலாவது தள்ள தமிழருக்கு இயலாமல் இருப்பதுவும் வியப்புக்குரியதல்ல.
“Speaking with surprising candor, [Basil] Rajapaksa explained
the GSL’s efforts to prove that members of the Security Task
Force (STF) murdered five students in Trincomalee in January:
“We know the STF did it, but the bullet and gun evidence
shows that they did not. They must have separate guns when
they want to kill some one. We need forensic experts. We
know who did it, but we can’t proceed in prosecuting them”
https://wikileaks.org/cable/2006/10/06COLOMBO1622.html
ஸ்ரீலங்கா அரசின் பதவிப்பீடம் எவ்வளவு தூரத்துக்கு மாபெரும் குற்றவாளிகள் என அமெரிக்க அரசு தெரிந்திருந்தும் சற்றும் தயங்காமல் பொய் மேல் பொய் என அடுக்கடுக்காக இவ்வளவு தூரத்துக்கு தமிழரை ஏமாற்றுவதற்கு தமிழினம் நாசமாகியிருப்பது தான் வியப்புக்குரியது.
https://wikileaks.org/Sri-Lankan-President-s-alleged-war.html
பசிலின் (ராஜபக்ஷ குடும்பத்தினர் ) களவாடிய பணம் அமெரிக்க வங்கிகளிலும் அமெரிக்க நிறுவனங்களிலும் முதலிடப்படும்.. இதனால் நன்மை அடைவது அமெரிக்காதான்…இலங்கை “வறிய நாடு”களின் கூடாரத்தில் சேர்க்கப்படும் இலங்கைப் பணத்தைத் திருடியவர்கள் “பணக்கார நாடு”களில் அடைக்கலம் தேடுவார்கள்.
இலங்கை மாத்திரமல்லஆசிய ,ஆபிரிக்க, தென் அமெரிக்க, வறிய நாடுகள் சொத்துக்கள் அந்த நாடுகளின் தலைவர்களால் சூறையாடப் பட்டு
முன்னேறிய நாடுகளின் வங்கிகளில் சேர்க்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது
அவ்வளவு வங்கிக் கணக்குகளையும் கூட்டி எவ்வளவு தரம் பெருபித்தாலும் தமிழரை அழித்து அடக்கி உலகின் அந்த முக்கிய மூலையயும் பிடித்தாளும் அநியாயமே அமெரிக்க ஆதிக்கவர்க்கத்திற்கு முக்கியமானது.
தமிழ் தமிழ் என்று கதறி குழப்பத்தில் அமெரிக்காவிலிருந்து கொண்டே அமெரிக்காவின் வெற்றி நடையில் பங்கேற்க முடியாமல் திணறுகின்றனர் சில புலம் பெயர்க்குவிக்கப்பட்ட தமிழர்கள். இவர்களின் வங்கிக் கணக்குகளே எவ்வளவு பெரியது என்பதில் எரிச்சல் படுபவர் பல தமிழ் மூடர்கள்.
இப்படிப்பட்ட உணர்வுகள், உலகளாவிய ரீதியில் அடைக்கலம் தேடி எந்த ஒரு நபரும் தன் இருப்பிடத்தை விட்டு ஓட வேண்டி வருவதன் பின்னணி உண்மைகள் உணரப்படுவதற்கே இடைஞ்சல்கள்.