ஹோண்டுராஸில் மீண்டும் ஸெலாயா ஆட்சியில் அமர்த்தப்படா விட்டால் லத்தீன் அமெரிக்கா முழுவதும் ராணுவ கலகங்கள் நடக்கும் அபாயம் ஏற்படும் என்று கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார்.
தனது கட்டுரையில் காஸ்ட்ரோ, அமெரிக்காவின் ஆயுதப் படைகளால் ஹோண்டுராஸ் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவ முகாம் இருந்து வருகிறது என்றும், 1980-களில் மத்திய அமெரிக்காவில் இடதுசாரி புரட்சியாளர்களை அவர்கள் வேட்டையாட முயற்சித்தனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கியூபா அரசின் இணைய தளத்தில் வெள்ளியன்று வெளியான கட்டுரை ஒன்றில் காஸ்ட்ரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹோண்டுராஸில் ஸெலாயா மீண்டும் ஆட்சியில் அமராவிட்டால், அமெரிக்காவில் பயிற்சி பெற்ற வலது சாரி ராணுவ தலைவர்கள் தங்கள் அரசுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்துவார்கள் என்று அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
லத்தீன் அமெரிக்க மக்கள் தங்கள் விருப்பப்படி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழக்கும் அபாயம் உள்ளதால் ஸெலாயா மீண்டும் ஆட்சியில் அமர்வது அவசியம் என்று காஸ்ட்ரோ சுட்டிக் காட்டி யுள்ளார்.
ஸெலாயா நாடு திரும்பினால் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று ஹோண்டுராஸ் கலக தலைவர் ராபர்டோ மிச்சலெட்டி தெரிவித் துள்ளார்.
அக்கட்டுரையில், இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமெ ரிக்க ராணுவப்பள்ளி பற்றி குறிப் பிட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ, பனிப் போரின் தொடக்க காலம் முதல் அப்பள்ளியில் ஆயிரக்கணக்கான லத்தீன் அமெரிக்க ராணுவ வீரர்க ளும், அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டி யுள்ளார்.
தர்மம் தலைகாக்கும்!