நாளை சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டை முன்னூறுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத் தொண்டர்கள் சுற்றி வளைத்தனர். இந்தியத் திரைபப்ட விழாவை கொழும்பில் நடத்தக் கூடாது என்றும் அதற்கான தூதுவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அல்லது விழாவை இலங்கையல்லாத ஒரு நாட்டில் நடத்த வேண்டும் என்று கோரியும் முற்றுகை இட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மும்பையில் பரபரப்பு நிலவுகிறது.