இனகொலை அரசான இலங்கை அரசின் அதிபர்களும் யுத்தக் குற்றவாளிகளான ராஜபட்சேவின் ஆதரவிலும் கொழும்பில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழா விற்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. தமிழகத்திலும் மும்பையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில் அமிதாப் இவ்விழாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதோடு இந்த விழாவை கொழும்பில் நடத்தியே தீருவது என்பதில் தீர்மானமாக இருபப்தாகவும் தெரிகிறது. இந்நிலையில் நடிகர் அமிதாப் வீட்டின் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நாம் தமிழர் இயக்கம் முடிவு எடுத்துள்ளது. நாளை காலை முதல் இந்த சாகும்வரை உண்ணாவிரதம் துவங்க இருக்கிறது. மும்பை வாழ் தமிழர்கள் பெரிந்திரளாக இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.